என் மலர்tooltip icon

    வேலூர்

    • 6.5 கிலோமீட்டர் தொலைவுக்கு, 3 மீட்டர் அகலத்திற்கு சாலை அமைக்க திட்டம்
    • விரைவில் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தகவல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்தில் பீஞ்சமந்தை, ஜாத்தான்கொல்லை, பாலாம்பட்டு ஆகிய மலை ஊராட்சிகளில் சுமார் 120-க்கும் மேற்பட்ட மலை குக்கிராமங்கள் உள்ளது.

    சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த பகுதிக்கு சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் அதிகம் பாதிப்படைகின்றனர். யாருக்கேனும் திடீரென உடல்நிலை சரியில்லாத போது மலைவாசிகள் டோலி கட்டி, அதில் நோயாளியை படுக்க வைத்து தோல் மீது சுமந்தபடியே ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர்.

    குறிப்பிட்ட நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாததால் நடந்த உயிரிழப்புகள் ஏராளம். குறிப்பாக கர்ப்பிணி பெண்களை மருத்து வமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத போது இறப்புகள் ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது.

    இந்த நிலையில் அணைக்கட்டு அடுத்த அத்திமரத்து கொல்லை மலை கிராமத்தைச் சேர்ந்த விஜி - பிரியா தம்பதியரின் ஒன்றரை வயது மகள் தனுஷ்கா.

    இவர் கடந்த 27-ந் தேதி இரவு வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தையை திடீரென பாம்பு கடித்து விட்டது.

    பெற்றோர், குழந்தை தனுஷ்காவை தோல் மீது சுமந்தபடி நடந்தே அணைக்கட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பிரேதபரிசோதனை முடிந்த குழந்தையின் உடல் அவசர ஊர்த்தி மூலம் எடுத்து வரப்பட்டது. மலைக்கு செல்லும் பாதை கரடு, மூரடாக இருப்பதால் குழந்தையின் உடல் பாதியில் இறக்கிவிடப்பட்டது.

    இதனையடுத்து தாய் பிரியா, குழந்தை தனுஷ்காவின் உடலை 10 கிலோமீட்டர் தூரம் கையால் தூக்கி மலை கிராமத்துக்கு நடந்து சென்றார்.

    இந்த சம்பவம் எதிரொலியாக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அதிகாரிகள் மலை கிராமத்தை ஆய்வு செய்து சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்படி நேற்று முன்தினம் சாலை அமைக்க அளவீடு செய்யும் பணி நடந்தது.

    இதில் முதல் கட்டமாக வரதலம்பட்டு மலையடிவாரம் முதல் அல்லேரி மலை கிராமம் வரை 6.5 கிலோமீட்டர் தொலைவுக்கு, 3 மீட்டர் அகலத்திற்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.5.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி கேட்டு அரசுக்கு அறிக்கை தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது.

    இதற்கான அனுமதி கிடைத்தவுடன் விரைவில் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கணவன், மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அலங்காநல்லூர் மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 50) விவசாயி.

    இவரது மனைவி மல்லிகா (47) ஒரு மகள், மகன் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.

    கணவன்-மனைவி இருவரும் மட்டும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் தம்பதிக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் விரக்தியடைந்த இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

    மோகன், மல்லிகா இருவரும் நேற்று இரவு 8 மணியவில் லத்தேரி-காட்பாடி செல்லும் ரெயில் தண்டவாளத்திற்கு வந்தனர்.

    அப்போது நாகர்கோவிலில் இருந்து, மும்பை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்தனர். இதில் அவர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    கணவன், மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • 17 பிளாஸ்டிக் பேரல்களில் பதுக்கி வைத்திருந்தனர்
    • போலீசார் கீழேகொட்டி தீமூட்டி அழித்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதியில், அணைக்கட்டு போலீசார் திடீரென சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அல்லேரி மற்றும் ஜார்தான்கொல்லை காட்டுப்பகுதியில் சாராயம் காய்ச்சிவதற்காக 17 பிளாஸ்டிக் பேரல்களில் பதுக்கி வைத்திருந்த சுமார் 3 ஆயிரத்து 700 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர்.

    மேலும் போலீசார், கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பேரல்கள், மண் பானைகள், அடுப்பு போன்றவற்றை பயன்ப டுத்தாதவாறு நொறுக்கி அவைகளையும் தீமூட்டி அழித்தனர்.

    இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று அதிகாலை அரவட்லா மலை கிராமத்தில் பொதலகுண்டா பகுதியில் புகுந்தன
    • வனப்பகுதிக்குள் விரட்டினர்

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு வனச்சரக பகுதியில் 2 காட்டு யானைகள் சுற்றி வருகின்றன. இந்த யானைகள் வனப்பகுதியை யொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களிலும் மா, வாழை தோப்புகளிலும் புகுந்து சூறையாடி அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்நிலையில் 2 யானைகளும் நேற்று அதிகாலை அரவட்லா மலை கிராமத்தில் பொதலகுண்டா பகுதியில் புகுந்தன. அங்கு கோபிநாத் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கேழ்வரகு பயிரை மிதித்து நாசம் செய்தன.

    இதனை அறிந்த விவசாயிகள் பட்டாசு, வெடி வெடித்து அருகில் உள்ள வனப் பகுதிக்குள் யானைகளை விரட்டினர்.

    யானைகள் அட்டகா சத்தினால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து அரவட்லா வி.ஏ.ஓ. தனசேகரன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    • வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
    • 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்

    பேரணாம்பட்டு:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ராஜக்கல் கிராமத்தில் தார் தொழிற்சாலை அமைக்க கலவை எந்திரம் உள்ளிட்டவைகள் கொண்டுவரப்பட்டு உள்ளன.

    தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த மார்ச் மாதம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பேர்ணாம்பட்டு தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களிலும் மனு அளித்தனர்.

    இது குறித்து பேரணாம்பட்டு உரிமையியல் கோர்ட்டில் தொடுத்து நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் தார் தொழிற்சாலை அமைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அழிஞ்சி குப்பம், ஆம்பூர், குடியாத்தம் இணைப்பு சாலையில் இன்று காலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மேல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை ஈடுபடனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ‘நினைத்தாலே இனிக்கும் 93’ எனும் தலைப்பில் நடந்தது
    • தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர்

    வேலூர்:

    சத்துவாச்சாரி வள்ளலார் நடுநிலைப் பள்ளியில் 1985-1993-ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று வேலூர் முஸ்லிம் அரசு பள்ளி அருகே உள்ள டார்லிங் ரெசிடென்சி ஓட்டலில் 'நினைத்தாலே இனிக்கும் 93' எனும் தலைப்பில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பள்ளியின் தலைமை ஆசிரியர் பருவதராஜன் கலந்து கொண்டார். ஆசிரியர்கள் இந்தராணி, ஜெயராகிணி, நவநீதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் மாணவர்கள் இளையராஜன், பூபதி, லட்சுமணன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

    நிகழ்ச்சியில் ஒன்று கூடிய சுமார் 50 முன்னாள் மாணவர்கள் தங்களுடைய பள்ளி காலத்தில் நடந்த சுவாரசியமான நினைவுகளை பேசி மகிழ்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    பின்னர் பள்ளிப் பருவ கால புகைப்படங்கள் குறித்து திரையிடப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    மேலும் அப்போது பணியாற்றிய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் நினைவு பரிசு வழங்கி கவுரவபடுத்தினர்.

    இதில் ஜாய், நளினி, சுபாஷிணி, ரம்யா, சவீதா உள்பட குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

    சமூக சேவை செம்மல் சுரேஷ் மற்றும் முருகேஷ் ஆகியோர் சமூக இணையதளம் மூலம் முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்து நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

    • 18 பேர் கொண்ட மீட்பு குழுவினர் விரைந்து வந்து இன்று காலை உடலை மீட்டனர்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பென்னத்தூர் அடுத்த கணேசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அபிமன்னன் (வயது 70), விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி புஷ்பா என்ற மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் காலை அபிமன்னன் அந்த கிராமத்தில், செயல்படாமல் இருந்த கல்குவாரி குட்டைக்கு மனைவி புஷ்பாவுடன் சென்றார்.

    புஷ்பா துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அபிமன்னன் குளிப்பதற்காக கல்குவாரியில் இறங்கிய போது ஆழமான பகுதியில் விழுந்தார். நீச்சல் அடிக்க முடியாத சூழலில் அவர் தத்தளித்தபடி தண்ணீரில் மூழ்கினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த அந்த பகுதி மக்கள் குட்டையில் இறங்கி தேடி உள்ளனர்.

    நீண்ட நேர தேடலுக்கு பின்பும் அவர் கிடைக்கவில்லை. இதனால் கிராம மக்கள் வேலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று, அபிமன்னனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    நேற்று இரவு முதல் இன்று காலை 8 மணிவரை தேடியும் உடல் கிடைக்கவில்லை. இதனால் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் 18 பேர் கொண்ட மீட்பு குழுவினர் விரைந்து வந்து இன்று காலை அபிமன்னன் உடலை மீட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த அரியூர் போலீசார் விரைந்து வந்து அபிமன்னன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்
    • ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது .

    கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுபபிரியா குமரன் தலைமை தாங்கினார், செயல் அலுவலர் உமாராணி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் சதிஷ்குமார் முக்கிய தீர்மானங்களை வாசித்தார்.

    அதில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் பள்ளிகொண்டா பேரூராட்சியில் புதிய குடிநீர் பைப்லைன் அமைப்பது அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு ஒட்டுமொத்தமாக இந்த பணிகளை ரூ.30.90 கோடியில் நீதி ஒதுக்கீட்டில் ஒப்பந்ததாரருக்கு பணி உத்தரவு வழங்க 18 வார்டு கவுன்சிலர்களின் ஒப்புதலுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பேரூ ராட்சி பணியாளர்கள் உட்பட அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாலிபர் வலது காதில் கட்டுடன் தேர்வு அறைக்குள் சென்றார்.
    • சிறிது நேரத்தில் வாலிபர் யாருடனோ பேசுவது போல் தெரிந்தது.

    வேலூர்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வு நேற்று முன்தினம் நடந்தது.

    வேலூரை அடுத்த காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வில் விருதம்பட்டை சேர்ந்த அப்துல் பயாஸ் (வயது 27) என்ற வாலிபர் தேர்வு எழுத சென்றார். அவர் வலது காதில் கட்டுடன் தேர்வு அறைக்குள் சென்றார். அறையின் மேற்பார்வையாளர் கேட்டதற்கு வலது காதில் அடிபட்டதால் கட்டு போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    அவரை தேர்வு எழுத அனுமதித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் யாருடனோ பேசுவது போல் தெரிந்தது. உடனே அறை மேற்பார்வையாளர் அவரது காதில் இருந்த கட்டைப் பிரித்து பார்த்தபோது காதில் புளூடூத் ஏர்பட்ஸ் இருந்தது தெரியவந்தது. அதன் வழியாக அவர் யாரிடமோ கேட்டு தேர்வு எழுதியது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து காட்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் அதிகம் பாதிப்படைகின்றனர்.
    • குறிப்பிட்ட நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாததால் நடந்த உயிரிழப்புகள் ஏராளம்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, பாலாம்பட்டு ஆகிய மலை ஊராட்சிகளில் சுமார் 120-க்கும் மேற்பட்ட மலை குக்கிராமங்கள் உள்ளன.

    சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த மலை பகுதிகளுக்கு இதுநாள் வரை சாலை அமைக்கப்படவில்லை.

    மலை உச்சியில் வசிக்கும் இந்த மக்கள் தங்களது தேவைகளை சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒடுக்கத்தூர் மற்றும் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைக்கட்டு பகுதிக்கு சென்று தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

    அதேபோல் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு, தலை மீது சுமந்தபடியே மீண்டும் மலை கிராமத்துக்கு நடைபயணமாக செல்கின்றனர்.

    சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் அதிகம் பாதிப்படைகின்றனர். யாருக்கேனும் திடீரென உடல்நிலை சரியில்லாதபோது மலைவாசிகள் டோலி கட்டி, அதில் நோயாளியை படுக்க வைத்து தோள் மீது சுமந்தபடியே ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். பிரசவ வலியால் துடிக்கும் கர்ப்பிணிகளையும் டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் நீடித்து வருகிறது.

    குறிப்பிட்ட நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாததால் நடந்த உயிரிழப்புகள் ஏராளம்.

    இந்த நிலையில் பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்டது அல்லேரி அடுத்த அத்திமரத்து கொல்லை. இந்த மலை கிராமத்தைச் சேர்ந்த விஜி-பிரியா தம்பதியரின் ஒன்றரை வயது மகள் தனுஷ்காவை பாம்பு கடித்தது.

    சாலை வசதி இல்லாததால் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல தாமதம் ஏற்பட்டது. இதனால் சிகிச்சை குழந்தை பரிதாபமாக இறந்தது.

    பிரேத பரிசோதனைக்கு பின்னர் குழந்தையின் உடல் பெற்றோரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

    மலை அடிவாரம் வரை ஆம்புலன்சில் உடல் கொண்டுவரப்பட்டது அங்கிருந்து பெற்றோர்களை இறக்கி விட்டனர் குழந்தையின் தாய் கண்ணீர் மல்க தனது குழந்தையின் உடலை 10 கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்றார். இது பெரும் பரபரப்பை பரிதாபத்தையும் ஏற்படுத்தியது.

    அல்லேரி, அத்திமரத்து கொல்லை உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தரவேண்டும் என அப்பகுதி மலைவாழ் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அதிகாரிகளுடன் அத்திமரத்து கொல்லை மலை கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தார். மேலும் சாலை அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அணைக்கட்டு அருகே உள்ள மலை கிராமங்களுக்கு விரைவில் சாலை வசதி மற்றும் ஆரம்ப துணை சுகாதார மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த ஆய்வின்போது சப்-கலெக்டர் கவிதா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • என் மகளுக்கு நேர்ந்த கதி வேறு எந்த குழந்தைக்கும் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.
    • அருகில் அணுகக்கூடிய மருத்துவ வசதிகள் இருந்திருந்தால், என் மகள் உயிருடன் இருந்திருப்பாள்.

    பாம்பு கடித்து பலியான குழந்தை தனுஷ்காவின் தாய் கூறியதாவது:-

    என் மகளுக்கு நேர்ந்த கதி வேறு எந்த குழந்தைக்கும் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.

    அருகில் அணுகக்கூடிய மருத்துவ வசதிகள் இருந்திருந்தால், என் மகள் உயிருடன் இருந்திருப்பாள்.

    அல்லேரி மலை பஞ்சாயத்து மக்கள் நீண்ட காலமாக அடிப்படை சாலை மற்றும் சுகாதார வசதிகளை கோரி வந்தனர். "சாலை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் வசதிகளுக்காக நாங்கள் பலமுறை கெஞ்சினோம், ஆனால் எங்கள் பலன்கள் வீணாகிவிட்டன." என்றார்.

    இதுகுறித்து வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில்:-

    2021-ம் ஆண்டு முதல் மலைப்பகுதிகளில் பழங்குடியின மக்களுக்காக சாலை அமைத்து வருகிறோம். அல்லேரி கிராமத்திற்கும் சாலைப் பணிகளைத் திட்டமிட்டுள்ளோம், ஆனால் பணிகளை தொடர வனத்துறையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.

    விரைவில் கிராம மக்களுக்கு அடிப்படை சுகாதார துணை மையத்தை ஏற்பாடு செய்வோம் என்றார்.

    • மனைவி கண் எதிரே சோகம்
    • தீயணைப்பு படை வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பென்னத்தூர் அடுத்த கணேசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அபிமன்னன் ( வயது 70), விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி புஷ்பா என்ற மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை அபிமன்னன் அந்த கிராமத்தில், செயல்படாமல் இருந்த கல்குவாரி குட்டைக்கு மனைவி புஷ்பாவுடன் சென்றார்.

    புஷ்பா துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அபிமன்னன் குளிப்பதற்காக கல்குவாரியில் இறங்கிய போது ஆழமான பகுதியில் விழுந்தார். நீச்சல் அடிக்க முடியாத சூழலில் அவர் தத்தளித்தபடி தண்ணீரில் மூழ்கினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த அந்த பகுதி மக்கள் குட்டையில் இறங்கி தேடி உள்ளனர். நீண்ட நேர தேடலுக்கு பின்பும் அவர் கிடைக்கவில்லை. இதனால் கிராம மக்கள் வேலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்படி தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று, அபிமானனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×