என் மலர்
திருவண்ணாமலை
- விலைவாசி உயர்வை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு தி.மு.க. அரசை கண்டித்து அக்ரி.கிருஷ்ண மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
லஞ்ச வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் கண்டன கோஷம் எழுப்பினர். வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன் முன்னிலை வகித்து பேசினார்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சரமாரியாக தாக்கியதால் ஆத்திரம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
செய்யாறு:
செய்யாறு அடுத்த இருமல் தாங்களை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 28). இவரது மனைவி நந்தினி (வயது 25). இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் நந்தினி செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார்.
அப்போது விக்னேஷை வரவழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கனவருடன் நந்தினியை போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் வரும் வழியில் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது விக்னேஷ் நந்தினியை கீழே தள்ளி தாக்கினார். இதில் நந்தினி மற்றும் குழந்தைக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த தாய், மகளை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் செய்யாறு டவுன் போலீஸ் நிலையத்தில் நந்தினி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வந்தவாசி அரசு மருத்துவமனையில் பயிற்சி நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
வந்தவாசி அரசு மருத்துவமனையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
மருத்துவ அலுவலர் டாக்டர் சிவப்பிரியா தலைமையில் நடைபெற்ற யோகா பயிற்சியில் டாக்டர் முகமது அர்க்கம், உதவியாளர்கள் சுரேஷ்,கல்பனா, மற்றும் செவிலியர்கள் மருந்தாளுனர்கள், மருத்துவமனை பணியாளர்கள் நோயாளிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.
- மனைவியிடம் பேசியதால் ஆத்திரம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறை சேர்ந்த 28 வயதுடைய வாலிபர் காஞ்சிபுரம் அடுத்த ஒரகடத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவியிடம் அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (32). என்பவர் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் விக்னேஷிடம் சென்று ஏன் என் மனைவியிடம் பேசுகிறாய் என்று கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வாலிபரின் காதை கிழித்துள்ளார்.
மேலும் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் படுகாயமடைந்த வாலிபரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மோரணம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்கு பதிவு செய்து நேற்று விக்னேஷை கைது செய்தார். மேலும் அவரிடம் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகிறார்.
- மின் தடையால் பொதுமக்கள் அவதி
- தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் பலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்
திருவண்ணாமலை:
திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. பல்வேறு மாவட்டங்களில வெயிலின் அளவு 100 டிகிரியையும் தாண்டி அனல் காற்று வீசியது. கடந்த 4 மாதமாக வெயிலின் தாக்கம் குறையாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று கூடுதலாக வெயிலின் தாக்கம் காணப்பட்டது.
இந்தநிலையில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பததூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்தது. பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மழையில் நனைந்தபடியும், குடி பிடித்தப்படியும் மிகவும் சிரமத்துடன் சென்றனர். பகலில் மட்டுமல்லாம் இரவில் மழை தொடர்ந்து பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் பலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மழை விட்டு விட்டு பெய்வதால் இன்று வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகப்பட்சமாக தண்டராம்பட்டில் 47.60 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் ஆரணியில் 47.20 மி.மீ, வெம்பாக்கத்தில் 40 மி.மீ, வந்தவாசியில் 38 மி.மீ, சேத்துபட்டில் 29.60 மி.மீ, கலசபாக்கத்தில் 27 மி.மீ, கீழ்பென்னாத்தூரில் 23.20 மி.மீ, போளூரில் 20.80 மி.மீ, செய்யாறில் 18 மி.மீ, திருவண்ணாமலையில் 12.20 மி.மீ மற்றும் செங்கத்தில் 1.80 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு பலத்த மழை பெய்ததில் ஆம்பூரில் அதிகபட்டசமாக 19 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் ஆம்பூர் சுகர் மில் பகுதியில் 18.20 மி.மீ, ஆலங்காயத்தில் 10.20 மி.மீ, வாணியம்பாடியில் 6 மி.மீ மற்றும் திருப்பத்தூரில் 3 மி.மீட்டர் மழையும் பதிவானது.
திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த 2 மாவட்டங்களுக்கும் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மின்தடையால் அவதி
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் பகுதியில் நேற்று நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இதில் கண்ணமங்கலம் ஏரியில் உள்ள பிடாரியம்மன் கோவில் அருகே தென்னை மரங்கள் வேறோடு சாய்ந்தும், பாதியில் முறிந்தும் விழுந்தது. இதில் ஒரு தென்னை மரம், மின்ஒயர் மீது முறிந்து விழுந்ததால், மின் ஒயர்கள் அறந்து தொங்கின.
தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் அந்த பகுதியில் மின்தடை செய்து, மின் ஒயர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் இரவு முழுவதும் மின் தடை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
- கட்டிலில் கயிறு கட்டி 80 அடி ஆழத்தில் இருந்து மீட்டனர்
- சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தினர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த புனல்காடு பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினருடன் இணைந்து 18 நாட்கள் தொடர்ச்சியாக காத்திருப்பு போராட்டம் உட்பட பல்வேறு நூதனப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
18-வது நாள் அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு அளிக்க ஊர்வலமாக சென்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.அப்போது போலீசாருக்கும் மனு அளிக்க சென்றவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு,கலெக்டர் முருகேஷ் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அந்த சமயத்தில் மாற்று இடம் பார்க்க அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து புனல்காடு பகுதியில் குப்பை கிடங்கு அமைக்கும் பணி நிறுத்தப்பட்டு இருந்தது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குப்பை கிடங்கு அமைக்கும் பணிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் நேற்று போலீசாரின் பாதுகாப்புடன் அதிகாரிகள் முன்னிலையில் மீண்டும் குப்பை கிடங்கு அமைப்பதற்கான இடத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை தொடங்கினர்.
இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நிர்மலா குமாரி ஆகிய 2 பெண்கள் திடீரென அங்கிருந்த 80 அடி ஆழ விவசாய கிணற்றில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது உடனே அங்கிருந்து வாலிபர்கள் அவர்களை மீட்க கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கினர்.
பின்னர் 2 கட்டில்களை கட்டி மேலிருந்தவர்கள் கிணற்றுக்குள் இறக்கினார்.கீழே நின்றவர்கள் மீட்கப்பட்ட 2 பெண்களையும் ஒவ்வொருவர்களாக கட்டில் வைத்தனர். அதன் பின் மேலே இருந்தவர்கள் போலீசாருடன் கட்டிலின் 4 மூலைகளிலும் கட்டி இருந்த கயிறுகள் மூலம் கட்டிலை மேலே இழுத்து வெளியே கொண்டு வந்தனர்.
பின்னர் தயாராக இருந்த ஸ்ட்ரெச்சரில் வைத்து மீட்கப்பட்ட நிர்மலா,குமாரி ஆகிய 2 பெண்களையும் ஆம்புலன்ஸ்க்கு கொண்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து போலீசார் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தினர். எனினும் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.
- ஒரே பைக்கில் 3 பேர் சென்றனர்
- பதிவு செய்து போலீசார் விசாரணை
செங்கம்:
செங்கம் அருகே கொட்டகுளம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 16). இவர் அதே பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த 2 நண்பர்களுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் அரவிந்த் சென்று கொண்டிருந்தார். செங்கம்-திருவண்ணாமலை சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த பொக்லைன் எந்திரம் எதிர்பாராத விதமாக இவர்கள் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.
இதில் அரவிந்த் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவர் பலத்த காயத்துடன் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் போலீசார், இறந்த வாலிபர் அரவிந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக செங்கம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்த னர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து செங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு கோல்டன் சிட்டி நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு பிரகாஷ் கரூருக்கு வேலை சம்பந்தமாக சென்றார்.
பின்னர் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் வைத்திருந்த வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து சேத்துப்பட்டு போலீசில் பிரகாஷ் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவன், மனைவியிடையே குடும்ப தகராறில் விபரீதம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் கிராமம், காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 28), தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (21).
திருமணம் ஆனதிலிருந்து கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி கணவன், மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
மனமடைந்த சித்ரா வீட்டில் புடவை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
இதனைப் பார்த்த ராஜா மற்றும் உறவினர்கள், சித்ராவை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆரணி சப்- கலெக்டர் தனலட்சுமி விசாரணை நடத்தினார்.
- வேலையாட்கள் பற்றாக்குறை தீர்க்கப்படுகிறது
- விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே சு.வாளவெட்டி கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் கரும்பு பயிரில் நானோ யூரியா மற்றும் நானோ டி.ஏ.பி. உரங்களை டிரோன் மூலம் தெளிப் பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண் பிக்கப்பட்டது. செயல்விளக்கத்தை தொடர்ந்து டிரோன் தொழில் நுட்பம், நானோ யூரியா மற்றும் நானோ டி.ஏ.பி. உரங்கள் பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத் துரைக்கப்பட்டது.
அப்போது வேளாண் அதிகாரிகள் கூறு கையில்:-
நானோ உரங்களை டிரோன் மூலம் தெளிப்பதன் மூலம் வேலையாட்கள் பற்றாக்குறை தீர்க்கப்படுகிறது.
மேலும் நானோ உரங்கள் இலை வழி தெளிக்கப்படுவதால் மண் மற்றும் நீர் நிலைகள் மாசுபடுவது தவிர்க்கப்படுகிறது. இவற்றை உபயோகிப்பதன் மூலம் விளைச்சல் ஏதும் குறை யாது. செலவினைக் குறைப்பதால் விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.கரும்பு பயிருக்கு ஒரு ஏக்கருக்கு நானோ உரங்கள் மற்றும் டிரோன் தெளிப்பு உள்பட ஒரு முறைக்கு ஏக்கருக்கு ரூ.1,700 வரை செலவாகும்" என்று தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு பேட்டரி தெளிப்பான்கள் மானிய விலையில் வினியோகிக்கப்பட்டன. இதில் வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார், வாழ வச்சனூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முத்துகிருஷ்ணன், இப்கோ உரநிறுவன மாநில விற்பனை மேலாளர் சுரேஷ், வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) சரவணன், வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகன் மற்றும் வேளாண்மை அலுவலர்கள், விவசாயி கள் என பலர் கலந்து கொண்டனர்.
- எதிர்பாராத விதமாக நடந்தது
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா வட ஆண்டாப்பட்டு கிராமம் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மனைவி பரிமளா (வயது 63). இவர் நேற்று மாலை வேலூரில் இருந்து திருவண் ணாமலைக்கு தனியார் பஸ்சில் பயணம் செய்தார்.
அந்த பஸ்சில் அவர் முன்படிக்கட்டிற்கு நேராக உள்ள 3 பேர் அமரும் இருக்கையில் அமர்ந்து வந்து உள்ளார். அந்த பஸ் தீபம் நகர் மேம்பாலத்தின் கீழ் திரும்பும் போது அவரது பை கீழே விழாமல் இருக்க பிடிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக பையுடன் அவர் பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு முன்பக்க தலையில் பலத்த காயம் ஏற் பட்டது. பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச் சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு ஆம் புலன்சு மூலம் கொண்டு சென்றனர்.
அங்கு பரிமளாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிழலுக்காக போடப்பட்ட தகர ஷீட்டுகள் கீழ் நிற்கின்றனர்
- போக்குவரத்து நெரிசல் குறைக்க தடுப்புச் சுவர் அமைக்க வலியுறுத்தல்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் புதிய சாலை வேலூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நிழற்கூடம் இருந்தது.
சாலை விரிவாக்க பணிக்காக மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் பழுதடைந்த நிலையில் இருந்த நிழற்கூடத்தை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் நிழற்கூடம் கட்டவில்லை.
பயணிகள் நிற்க இடமில்லாமல் அப்பகுதி கடை வியாபாரிகள் தங்கள் கடை முன்பு நிழலுக்காக போடப்பட்ட தகர ஷீட்டுகள் கீழ் நிற்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் தகரஷீட்டுகள் விளம்பர தட்டிகளை, போலீசார் கண்ணமங்கலம் பேரூராட்சியில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானப்படி அகற்றினர். இதனால் தற்போது பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசல் குறைய விரைவில் சாலை நடுவே செண்டர் மீடியன் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளையும் நெடுஞ்சாலைத்துறையினர் உரிய முறையில் தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.






