வங்கி ஊழியர் வீட்டில் வெள்ளி பொருட்கள் கொள்ளை

வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் போலீசார் விசாரணை
வங்கி ஊழியர் வீட்டில் வெள்ளி பொருட்கள் கொள்ளை
Published on

சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு கோல்டன் சிட்டி நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு பிரகாஷ் கரூருக்கு வேலை சம்பந்தமாக சென்றார்.

பின்னர் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் வைத்திருந்த வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து சேத்துப்பட்டு போலீசில் பிரகாஷ் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com