என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • உள்நோயாளிகளாக 1000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
    • மருத்துவக்கல்லூரி டீன் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று கிடைத்துள்ளது.

    மருத்துவமனையில் கிடைக்கும் சேவைகளின் தரத்தை பரிசோதித்து அதை உறுதி செய்யவும், சான்றளிக்கவும் 2006-ல் தேசிய மருத்துவமனை அங்கீகார வாரியம் ஏற்படுத்தப்பட்டது.

    அந்த வாரியமானது பல பரிசோதனைகளுக்குப் பின் தரச்சான்று வழங்கி வருகிறது. இதுவரை உயரிய தனியார் மருத்துவமனைகள் மட்டுமே இந்த சான்று பெற்று வந்துள்ளது.

    இந்த நிலையில் இந்தியாவிலேயே முதன்முறையாக அரசு மருத்துவக்கல்லூரிக்கான தரச்சான்றினை திருவண்ணா மலை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை பெற்று உள்ளது என்று மருத்துவக்கல்லூரி டீன் அரவிந்தன் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாளொன்று சுமார் 2500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அதேபோல் உள்நோயாளிகளாக சுமார் 900 முதல் 1000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் கடந்த மாதத்தில் மட்டும் 1,038 பிரசவம் பார்க்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவமனை அங்கீகார வாரியம் மூலம் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பின் தரச்சான்று வழங்கப்பட்டு உள்ளது.

    இதற்கு உறுதுணையாக மருத்துவ அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.

    • காளசமுத்திரம் அரசு பள்ளியில் நடந்தது
    • தொற்று நோய்கள் குறித்து விளக்கி பேசினர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே காளசமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று மலேரியா குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் காளசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் தமிழரசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தொற்று நோய்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இறுதியில் ஆசிரியர் ஜெகன் நன்றி கூறினார்.

    • தடுக்கச் சென்ற மகளுக்கும் தீக்காயம்
    • திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வ.உ.சி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் மோகன்,கூலித் தொழிலாளி.இவரது மனைவி புஷ்பா(வயது 40)

    இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.இருவரும் பட்டப் படிப்பு படித்து உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று காலை புஷ்பாவும் அவரது மகள் லட்சுமியும் (25) வீட்டில் இருந்தனர். அப்போது லட்சுமியை வீட்டு வேலை செய்யும்படி அவரது தாய் கூறியதாக தெரிகிறது.இதனால் தாய்க்கும் மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது மகளை மிரட்டுவதற்காக புஷ்பா வீட்டில் சிறிய கேனில் வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிப்பது போல மிரட்டி உள்ளார்.

    அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பற்றி உடலில் தீப்பிடித்து உள்ளது.இதனால் அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமி தாயின் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயன்றார்.இதனால் அவரது கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டது.

    தாய்,மகள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். மேலும் இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஆடு மேய்த்த போது தகராறு
    • வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது

    ஆரணி:

    ஆரணி அடுத்த புனலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 60). இவர் தனியார் அரிசி ஆலையில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமிர்தம்.

    அதே பகுதியை சேர்ந்தவர் தனுஷ்கோடி (48). ஆடு மேய்ப்பவர். இந்த நிலையில் குமார் வேலை செய்யும் அரிசி ஆலையினுள் தனுஷ் கோடி ஆடுகளை மேய்க்க வந்தார்.

    அப்போது ஆலைக்குள் ஆடுகளை அழைத்து வர வேண்டாம் என்று குமார் கூறினார்.

    இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்த தனுஷ்கோடியின் மகன் விநாயகம் (25). குமாரிடம் தகராறில் ஈடுபட்டார்.

    அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த தனுஷ்கோடி மற்றும் விநாயகம் அருகில் இருந்த கல்லை எடுத்து குமார் தலையில் தாக்கினர்.

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக விநாயகம் மற்றும் தனுஷ்கோடியை போலீசார் கைது செய்தனர்.

    • 3 பேருக்கு படுகாயம்
    • விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்

    திருவண்ணாமலை:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி கிராமத்தை சேர்ந்த வர் சுந்தரேசன் (வயது 28). இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை செங்கம் சாலை யில் அய்யம்பாளையம் அருகில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில்தூக்கி வீசப்பட்ட சுந்தரேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மேலும் கார் டிரைவரின் கட்டு பாட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. காரில் வந்த 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவம னைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    மேலும் இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுந்தரேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரியில் சேர சாதி சான்றிதழ் இல்லாததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்.இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 17). இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு கல்லூரி படிப்பிற்காக பல்வேறு கல்லூரிகளில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளார்.

    இவரிடம் குறிப்பிட்ட சாதிக்கான சான்றிதழ் இல்லாததால் ராஜேஸ்வரியால் கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அவருடன் பள்ளியில் படித்த மாணவிகள் கல்லூரியில் சேர்ந்த நிலையில் அவரால் கல்லூரியில் சேர முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ராஜேஸ்வரி விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மயங்கி கிடந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் மாணவி உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீன் பிடிக்க சென்றபோது பரிதாபம்
    • உடலை மீட்டு விசாரணை

    வாணாபுரம்:

    வாணாபுரம் அடுத்த குங்கிலியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 42) தொழிலாளி.

    இவரது உறவினரான விழுப்புரம் மாவட்டம் கண் டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (37) தொழிலாளி ஆகியோர் கொட்டையூரில் உள்ள ஏரிக்கு மீன்பிடிக்கசென்றனர்.

    நீண்ட நேரம் ஆகியும் இரு வரும் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர் கள் ஏரிக்குச் சென்று பார்த்தனர். ஆனால் அவர்களை அங்கு இல்லை.

    ஏரி கரையில் இருவரது உடைகள் மற்றும் செல்போன் செருப்பு உள்ளிட்டவைகள் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் அப்பகுதியில் அவர்களை தேடி பார்த்தனர். அவர்கள் கிடைக்காததால் வாணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனைய டுத்து கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு முரு கன், இன்ஸ்பெக்டர் செல்வ. நாயகம், சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீ சார், தண்டராம்பட்டு தீய ணைப்பு வீரர்கள் ஏரிக்கு வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் னெ்பதால் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    இன்று காலை உறவினர்கள் அந்த பகுதி மக்கள் தண்ணீரில் மூழ்கியவர்களை தேடியுள்ளனர். ஆனால் அவர்கள் உடலை மீட்க முடியவில்லை. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் ஏரியில் 2 பேரின் உடல் வாணாபுரம் போலீசாருக்கு மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் விரைந்து வந்து ஏறியில் மிதந்த 2 பேரின் உடல்களை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருவாய்த் துறையினர் சார்பில் நடைபெற்றது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள திருவள்ளுவர்நகர் பகுதியில் நடைபெற்ற இந்த முகாமிற்கு செங்கம் தாசில்தார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை தாசில்தார் தமிழரசி, வருவாய் ஆய்வாளர் ஞானவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் வரவேற்றார்.

    இந்த நிகழ்வில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூக மக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்குவதற்கு கோரிக்கை மனுக்கள் அச்சமூகத்தை சார்ந்தவர்களிடம் இருந்து பெறப்பட்டது.

    செங்கம் அடுத்த திருவள்ளுவர்நகர், கட்டமடுவு, நரடாபட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் ஜாதி சான்றிதழுக்காண கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் வருவாய்த் துறையினர் சார்பில் நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே படுக்கச் சென்றார்.

    பின்னர் நேற்று காலை வெளியே வந்து பார்த்தபோது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சரவணன் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதனையடுத்து போலீசார் பையூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர்களை மடக்கி விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறவே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    விசாரணையில் ஆரணி பாளையத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன், பிரவீன் குமார் என்பதும், சரவணன் பைக்கை திருடியதும் தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் ஆரணி கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • லாரி டிரைவர் கைது
    • முன் விரோதம் காரணமாக விபரீதம்

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த பிரம்ம தேசத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 40). பிரியாணி மாஸ்டர். இவரது மனைவி மாயாதேவி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    அதே பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி (28).லாரி டிரைவர். இவருக்கும் பெருமாளுக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. பெருமாளின் மனைவி பிரிந்து சென்றதற்கு வீராசாமி தான் காரணம் என்று கூறி இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை வீராசாமி பஜார் வீதியில் நின்றிருந்த பெருமாளிடம் சென்று தகராறில் ஈடுபட்டார். பின்னர் இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த வீராசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெருமாளை சரமாரியாக குத்தினார். இதனால் பஜார் வீதியில் நின்று இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த பெருமாளை அங்கிரு ந்தவர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்து வமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பிரம்ம தேசம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தார்.

    மேலும் வீராசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பீரோவை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த சு.வாளவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (வயது 32). புதுச்சேரியில் தங்கியிருந்து கட்டிட உள் அலங்கார வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி நந்தினி மற்றும் தாய் பாரதி ஆகியோர் சு.வாளவெட்டி கிராமத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டில் இருவரும் தூங்கிய போது வீட்டில் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்து 2 பவுன் நகை, ரூ.13000 ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

    அதிகாலை வீட்டின் அறைக்குள் சென்று பார்த்த போது திருட்டு நடந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 48). இவர் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சி புரத்தில் செங்கல் சூளையில் வேலை செய்கிறார்.

    இவரது மனைவி ராணி சென்னையில் உள்ள தனியார் மருத்து வமனையில் செவிலியர் ஆக பணிபுரிகிறார். இதனால் இவர்களுடைய வீடு பூட்டி இருந்தது.

    எனவே நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.12000 ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.

    இந்த 2 திருட்டு சம்பவங்கள் தொடர்பாக புகாரின் பேரில் வெறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலைமை ஆசிரியர் நன்மைகள் குறித்து விளக்கிக் கூறினார்
    • ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்

    போளூர்:

    ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட துரிஞ்சுக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் யோக தினத்தை முன்னிட்டு மாணவர்கள் யோகா செய்து காட்டினர்.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் மன்னர் சாமி யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் உடல் ஆரோக்கியம், மன அமைதி, உற்சாகம் கொடுத்தல், மனதை ஒருமுகப்படுத்துதல் போன்ற நன்மைகள் ஏற்படும் என்று விளக்கிக் கூறினார்.

    இதனை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் பார்வையிட்டார். இதில் உதவி ஆசிரியர்கள் அருள் வைத்தியநாதன் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×