என் மலர்
திருவண்ணாமலை
- மேய்ச்சலின் போது பரிதாபம்
- வீட்டில் புகுந்த பாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த கொங்கராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் பசு மாடு மேய்ச்சலின் போது, அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கண்ணமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் சிவனேசன் மற்றும் படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பசுமாட்டை கிணற்றிலிருந்து கயிறு மூலம் உயிருடன் மீட்டு ராஜேஷிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் 5புத்தூர் கிராமத்தில் பெருமாள் என்பவருக்கு சொந்தமான மாடு, கிணற்றில் தவறி விழுந்தது.
அந்த பசுமாட்டையும் கண்ணமங்கலம் தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். மேலும் கணியம்பாடி கிருஷ்ணா நகரில் வசிக்கும் சீனிவாசன் என்பவர் வீட்டில் இருந்த நாக பாம்பையும் தீயணைப்பு படையினர் உயிருடன் பிடித்து கணியம்பாடி காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.
- சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 57). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று திருவண்ணாமல செல்லும் ரோட்டில் படவேடு கூட்ரோடில் சைக்கிளில் சென்றார்.
அப்போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முருகனின் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சந்தவாசல் போலீசில், முருகன் மனைவி வள்ளி (31) புகார் செய்தார். அதன் பேரில் சப் - இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- யாகபூஜைகளுடன் புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள குப்பம் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட அருணாசலேசுவரர் கோவில் மகா கும்பாபி ஷேகம் நேற்று காலை சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை திருவண்ணாமலை தண்டபாணி சர்மா மற்றும் குழுவினர் நடத்தி வைத்தனர்.
இந்த விழாவில் குப்பம் ஊராட்சி தலைவர் அனிதாமுரளி, துணை தலைவர் வீரமணிகண்டன், கவுன்சிலர் சுகுணா உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் சதாசிவ சர்மா, கிரி சர்மா ஆகியோர் செய்திருந்தனர்.
இதேபோல் குப்பம் அண்ணாநகர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட முனீஸ்வரருக்கு நேற்று 25-ந்தேதி யாகபூஜைகளுடன் புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது.
- வெற்றி பெற்ற 2.79 ஆயிரம் பேருக்கு பரிசு, சான்றிதழ்
- அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த 2 ஆயிரத்து 79 வீரர் வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், நகரமன்றத் தலைவர்கள் சுஜாதா வினோத்.தேவி பென்ஸ் பாண்டியன், முகமது அமீன், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, ஒன்றிய குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஞானசேகரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
- பொது மக்களே நிதி திரட்டி புனரமைப்பு
- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் ஊராட்சிக்குபட்ட இ.பி.நகரில் பழமைவாய்ந்த கற்பகாம்பிகை கோவில் உள்ளது.
பொதுமக்களே நிதி திரட்டி முத்துமாரியம்மன் கற்பகாம்பிகை கற்பகநாதர் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் இன்று நடந்தது. முன்னதாக ஏற்கனவே அமைக்கபட்ட யாகசாலையில் புனித தீர்த்தகுடம் முளைப்பாரி எடுத்து வருதல் திருவிளக்கு வழிபாடு புண்ணிய நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர்வழிபாடு கணபதி ஹோமம், கோபூஜை, நடைபெற்றது.
இதனைதொடர்ந்து இன்று காலையில் யாகசாலையில் விநாயகர் முருகர் தென்முகபரமன் அண்ணாமலையார் நான்முகன் துர்கையம்மன் சண்டீசுவரர் நடராசர் சிவகாமி நந்தி கௌமாரி மகேஸ்வரி வைஸ்ணவி பிராம்மி சாமுண்டி ஆகிய தெய்வங்களுக்கு பூஜைகள் நடத்தினர்.
பின்னர் புணிதநீரை கோவில் வளாகத்தில் ஊர்வலமாக கொண்டு வந்தனர். ஸ்ரீ கற்பகநாதர் மற்றும் கற்பகாம்பிகை ஆகியோருக்கு ஒரே நேரத்தில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது.
பக்தர்கள் என கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இறுதி யாக கோவில் நிர்வாகம் சார்பில்அன்னதானம் வழங்கப்பட்டது.
- விவசாய பணிக்காக சென்றுகொண்டிருந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 45). டிராக்டர் டிரைவர். இவர் இன்று அதிகாலை விவசாய பணிக்காக தனது டிராக்டரை ஓட்டிக்கொண்டு கீழ்பென்னாத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பெங்களூரில் இருந்து பாண்டிச்சேரிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அண்ணாநகர் கூட்டு சாலை அருகே வந்தபோது முன்னால் வேலாயுதம் ஓட்டிச் சென்ற டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் வேலாயுதம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். டிராக்டர் 2 துண்டுகளானது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வேலாயுதம் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேலாயுதம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வரலாற்று தடயங்களை ஆய்வு செய்ததில் அபூர்வ தகவல்கள்
- 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த 3-ம் ராஜராஜன் காலத்தை சேர்ந்தது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பழம்பெருமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவி லில் உள்ள 13-ம் நூற்றாண் டில் வாழ்ந்த 3-ம் ராஜராஜன் காலத்து கல்வெட்டு உள்ளது.
அந்த கல்வெட்டு திருவெண் ணைநல்லூரைச் சேர்ந்த மெய்கண்ட தேவ நாயனார். மாத்தூர் என்கிற ஊரில் தனது பெயரில் மெய்கண் டீஸ்வரமுடைய நாயனார் கோவிலும் மெய்கண்ட தேவ புத்தேரி என்ற ஏரியை வெட்டுவித்ததையும் குறிப்பிடுகிறது.
அந்த கல்வெட்டில் குறிப்பிடும் மெய்கண்டீஸ்வரமுடைய நாயனார் கோவில் மற்றும் ஏரி குறித்து திருவண் ணாமலை மாவட்ட வர லாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பிரகாஷ், பாலமுரு கன், மதன்மோகன், பழனி சாமி, சிற்றிங்கூர் ராஜா, கிராம உதவியாளர் ஜெகன் நாதன் ஆகியோர் கூட்டாக திருவண்ணாமலைக்கு அரு கில் உள்ள தென்மாத்தூர் கிராமத்தில் ஆய்வு செய்தனர். அப்போது பல்வேறு வரலாற்றுத் தடயங்கள் கிடைத் துள்ளன.
இது குறித்து அவர் கள் கூறியதாவது:-
திருவண்ணாமலை கோவில் கல்வெட்டில் குறிப்பிடப் பட்ட மெய்கண்டீஸ்வரமு டைய நாயனார் என்பவர் சிவனஞான போதம் என்ற சைவ சித்தாந்த நூலின் ஆசிரியர் ஆவார்.
அவர் இவ்வூரில் எழுப்பிய சிவன் கோவில் குறித்து விசாரித்த போது அவ்வாறு தற் போது கோவில் ஏதும் இல்லை.
ஆனாலும் ஊரில் சோழர்காலத்து சிவலிங்கம், நந்தி, கோவில் கல்தூண்கள் ஆகியவை ஆங்காங்கே உள் ளன. அதனை ஆய்வு செய்து பார்த்ததில் அவற்றின் சிற்ப அமைப்பு பிற்கால சோழர் காலத்தை சேர்ந்ததாக உள்ளது.
மேலும் அருணாசலேஸ்வ ரர் கோவில் கல்வெட்டு கூறும் காலத்துடன் பொருந்தி போவதால் இங்கு மெய்கண் டீஸ்வரமுடைய நாயனார் கோவில் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
கோவிலை அப்புறப்படுத்தி வேறு கட்டிடம் கட்டி விட்ட தால் மற்ற விவரங்கள் அறி யப்படவில்லை. மேலும் அந்த ஊரின் மேற்கு பகுதியில் மரத்தடியில் 4 அடி உயரமும், 3 அடி அகல மும் கொண்ட கற்பலகையில் ஒரு அடியாரின் சிற்பம் திரு வண்ணாமலையை நோக்கி காணப்படுகிறது. இதன் சிற்ப அமைவு பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்தது என்ப தால் இவர் மெய்கண்ட நாய னாராக இருக்க வாய்ப்புள்ளது.
அந்த பகுதியில் பெரிய ஏரி யின் தென்கோடியில் உள்ள தூம்பில் ஒரு அரைவட்ட கல் லில் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ மன்னன் நந்தி வர்மனின் 10 ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று உள்ளது.
தென்மாத்தூரின் மேற்குப்பகுதியில் உள்ள பாறையில் குடை மற்றும் பாதம் கோட்டுருவத்துடன் பிற்கால சோழர்காலத்தைச் சேர்ந்த 4 வரி கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டது.
தென்மாத்தூர் கிராமத்தில் கிடைக்கக்கூடிய நந்தி, சிவ லிங்கம், கோவில் கட்டுமான கல்தூண்கள், ஏரித்தூம்பு ஆகிய தடயங்கள் திருவண் ணாமலை கல்வெட்டில் குறிப்பிடும் திருவெண்ணை நல்லூர் மெய்கண்டீஸ் வரமுடைய நாயனார் ஏற்படுத்தியதாக கருத இடமளிக்கிறது.
தென்மாத்தூர் கிராமத் தில் இவ்வளவு சிறப்பான வரலாற்று தடயங்கள் கிடைத் துள்ளது ஆய்வாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எனவே இதை அரசு ஆவணப்படுத்தி பாது காக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- 954 பேருக்கு பல்வேறு சிகிச்சைகள் அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள கணியம்பாடி ஒன்றியத்தைச் சேர்ந்த மோத்தக்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று தமிழக முதல்-அமைச்சரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு கணியம்பாடி ஒன்றியக்குழுத்தலைவர் திவ்யாகமல் பிரசாத் தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழு துணை தலைவர் கஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் வனிதாகுணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மோத்தக்கல் ஊராட்சி மன்ற தலைவர் உஷாஜெயவேலு வரவேற்று பேசினார்.
இந்த முகாமில் கணியம்பாடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வெ.துரைராஜ் மேற்பார்வையில், பல்வேறு சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர்.
சரக்கரை நோய், பல் மருத்துவம், குழந்தைகள் நலம், காசநோய், சித்த மருத்துவம், மனநோய் உள்பட 954 பேருக்கு பல்வேறு சிகிச்சைகள் அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்.
மேலும் ஆறு பேர் தொடர் சிகிச்சை பெற பரிந்துரை செய்யப்ப ட்டுள்ளனர். இதில் ஊராட்சி துணை தலைவர் கமல்ராஜ், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கள்ளகாதலில் பிறந்ததா?
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
தண்டராம்பட்டு அடுத்த செ.ஆண்டப்பட்டு ஊராட்சி வரவேற்பு எல்லை குப்பை தொட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் தூய்மை காவலர்களை கொண்டு தினசரி ஊராட்சியில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
நேற்று காலை சுகாதார இயக்குனர் வெண்ணிலா, தூய்மை பணியாளர்கள் இந்திரா, வேணி, சக்தி, மகேஷ் ஆகியோர் குப்பை சேகரிக்கும் வண்டியை நிறுத்திவிட்டு குப்பை தொட்டியில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது குப்பைக்கு அடியில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் இறந்து கிடந்ததை பார்த்து தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் குப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தானிப்பாடி போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தானிப்பாடி போலீசார் ஆண் குழந்தையின் உடலை மீட்டனர்.
குழந்தை இறந்தே பிறந்ததால் குப்பை தொட்டியில் அதனை பெற்றவர் வீசினரா? அல்லது கள்ளக்காதலில் பிறந்ததால் கொலை செய்து வீசினரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நீச்சல் தெரியாததால் பரிதாபம்
- தீயணைப்பு துறையினர் 6 மணி நேரம் போராடி மீட்டனர்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு அடுத்த கரிப்பூர் கிராமத்தை சேர்ந் தவர் ஏழுமலை. சென்னை யில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார்.
இவருக்கு சச்சின்(வயது 21), சரண்(19) என 2 மகன்கள் உள்ளனர். இருவரும் சென்னையிலேயே தங்கி தனியார் கம் பெனியில் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில் சொந்த ஊரான கரிப்பூர் கிராமத்தில் குலதெய்வ கோவில் திருவிழா நடக்கிறது. விழாவுக்காக ஏழுமலை 2 நாட்களுக்கு முன் வந்துள்ளார்.
2-வது மகன் சரண் தனது நண்பர் ரமேஷ் என்பவரை அழைத்துக் கொண்டு நேற்று கரிப்பூருக்கு வந்தார்.
அருகே உள்ள கிணற்றில் குளிப்பதற்காக 2 பேரும் சென்றனர். அப்போது சரண் தனது நண்பர் ரமேஷிடம் நான் கிணற்றில் குதிக்கிறேன் அதனை வீடியோவாக எடு என்று கூறினார். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டால் லைக்கள் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
இதனால் ரமேஷ் சரண் குதிப்பதை வீடியோ பதிவு செய்தார். கிணற்றில் குதித்த சரணிற்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
கிணற்றில் பார்த்தபோது சரண் நீரில் மூழ்கினார். கிணற்றில் மூழ்கிய வாலி பரை மீட்க அங்கிருந்தவர்கள் முயன்றனர். முடியாததால் சேத்துப்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மின் மோட்டாரை பொருத்தி தண்ணீரை வெளியேற்றினர்.
பின்னர் 6 மணி நேரம் போராடி சரணை பிணமாக மீட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேத்துப்பட்டு போலீசார் சரண் உடலை மீட்டனர்.
பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லைக்கிற்காக கிணற்றில் குதித்து வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 2 கிலோ மீட்டருக்குள் வேலை வழங்க வலியுறுத்தல்
- அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்
போளூர்:
போளூர் ஒன்றியம், திண்டிவனம் ஊராட்சி யில், மாற்றுத்திறனாளி களுக்கு 100 நாள் வேலை முறையாக வழங்கக் கோரி அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் நலச்சங்கம் மாவட்ட செயலாளர் ந.சிவாஜி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் அ.சு. லட்சுமி மற்றும் அலுவ லர்கள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி னர்.
அப்போது, ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா அண்ணாதுரை, துணை கவிதா பிரகாசம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.
இந்த ஊராட்சியில் மட்டும் 425 மாற்றுத்திறனாளி உள்ளனர்.
அவர்களுக்கு தொடர்ச்சியாக 2 கிலோ மீட்டருக்குள் வேலை வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு பிடிஓ, உண் மையான எண்ணிக்கை குறித்து கணக்கெடுத்து சுழற்சி முறையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.
- நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது
- பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை என குற்றசாட்டு
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ராட்டினமங்கலம் ஊராட்சிக்குபட்ட இ.பி.நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன.
இந்த அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் குடியிருப்பு பகுதியில் உள்ள கால்வாயில் சென்று அடைப்புகள் ஏற்பட்டு பின்னர் குடியிருப்பு பகுதியில் தேங்கி தேங்கி வருகிறது.
குடியிருப்பு பகுதி காலிமனைகளில் அரிசி ஆலை கழிவு நீர் தேங்கியதால் கொசு உற்பத்தி பண்ணை போல் காட்சியளிக்கின்றன.
மேலும் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளதால் குழந்தைகள் முதியவர்கள் காய்ச்சல் ஏற்படுவதும் நோய் தொற்றும் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளன.
இது சம்மந்தமாக அரிசி ஆலை உரிமையா ளர்களிடம் ஊராட்சி நிர்வாகி மாவட்ட நிர்வாகம் ஆகியோரிடம் பல முறை முறையிட்டும் அதிகாரிகள் செவி சாய்ப்ப தில்லை எனவும் குடியிருப்பு வாசிகள் குற்றசாட்டுகின்றனர்.
மேலும் அரிசி ஆலை கழிவு நீர் தொடர்ந்து தேங்கி வருவதால் குடியிருப்பு பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளன கழிவு நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.






