என் மலர்
நீங்கள் தேடியது "The argument escalated into a scuffle"
- ஆடு மேய்த்த போது தகராறு
- வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது
ஆரணி:
ஆரணி அடுத்த புனலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 60). இவர் தனியார் அரிசி ஆலையில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமிர்தம்.
அதே பகுதியை சேர்ந்தவர் தனுஷ்கோடி (48). ஆடு மேய்ப்பவர். இந்த நிலையில் குமார் வேலை செய்யும் அரிசி ஆலையினுள் தனுஷ் கோடி ஆடுகளை மேய்க்க வந்தார்.
அப்போது ஆலைக்குள் ஆடுகளை அழைத்து வர வேண்டாம் என்று குமார் கூறினார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்த தனுஷ்கோடியின் மகன் விநாயகம் (25). குமாரிடம் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த தனுஷ்கோடி மற்றும் விநாயகம் அருகில் இருந்த கல்லை எடுத்து குமார் தலையில் தாக்கினர்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விநாயகம் மற்றும் தனுஷ்கோடியை போலீசார் கைது செய்தனர்.






