என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "47.60 மில்லிமீட்டர் மழை"

    • மின் தடையால் பொதுமக்கள் அவதி
    • தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் பலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்

    திருவண்ணாமலை:

    திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. பல்வேறு மாவட்டங்களில வெயிலின் அளவு 100 டிகிரியையும் தாண்டி அனல் காற்று வீசியது. கடந்த 4 மாதமாக வெயிலின் தாக்கம் குறையாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று கூடுதலாக வெயிலின் தாக்கம் காணப்பட்டது.

    இந்தநிலையில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பததூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்தது. பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மழையில் நனைந்தபடியும், குடி பிடித்தப்படியும் மிகவும் சிரமத்துடன் சென்றனர். பகலில் மட்டுமல்லாம் இரவில் மழை தொடர்ந்து பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் பலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.

    வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மழை விட்டு விட்டு பெய்வதால் இன்று வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகப்பட்சமாக தண்டராம்பட்டில் 47.60 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் ஆரணியில் 47.20 மி.மீ, வெம்பாக்கத்தில் 40 மி.மீ, வந்தவாசியில் 38 மி.மீ, சேத்துபட்டில் 29.60 மி.மீ, கலசபாக்கத்தில் 27 மி.மீ, கீழ்பென்னாத்தூரில் 23.20 மி.மீ, போளூரில் 20.80 மி.மீ, செய்யாறில் 18 மி.மீ, திருவண்ணாமலையில் 12.20 மி.மீ மற்றும் செங்கத்தில் 1.80 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு பலத்த மழை பெய்ததில் ஆம்பூரில் அதிகபட்டசமாக 19 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் ஆம்பூர் சுகர் மில் பகுதியில் 18.20 மி.மீ, ஆலங்காயத்தில் 10.20 மி.மீ, வாணியம்பாடியில் 6 மி.மீ மற்றும் திருப்பத்தூரில் 3 மி.மீட்டர் மழையும் பதிவானது.

    திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த 2 மாவட்டங்களுக்கும் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மின்தடையால் அவதி

    திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் பகுதியில் நேற்று நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இதில் கண்ணமங்கலம் ஏரியில் உள்ள பிடாரியம்மன் கோவில் அருகே தென்னை மரங்கள் வேறோடு சாய்ந்தும், பாதியில் முறிந்தும் விழுந்தது. இதில் ஒரு தென்னை மரம், மின்ஒயர் மீது முறிந்து விழுந்ததால், மின் ஒயர்கள் அறந்து தொங்கின.

    தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் அந்த பகுதியில் மின்தடை செய்து, மின் ஒயர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனால் கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் இரவு முழுவதும் மின் தடை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    ×