என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிலாளியின் காதை அறுத்த வாலிபர் கைது
- மனைவியிடம் பேசியதால் ஆத்திரம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறை சேர்ந்த 28 வயதுடைய வாலிபர் காஞ்சிபுரம் அடுத்த ஒரகடத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவியிடம் அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (32). என்பவர் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் விக்னேஷிடம் சென்று ஏன் என் மனைவியிடம் பேசுகிறாய் என்று கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வாலிபரின் காதை கிழித்துள்ளார்.
மேலும் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் படுகாயமடைந்த வாலிபரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மோரணம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்கு பதிவு செய்து நேற்று விக்னேஷை கைது செய்தார். மேலும் அவரிடம் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகிறார்.






