என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சில வருடங்களுக்கு முன்பு நிழற்கூடம்"

    • நிழலுக்காக போடப்பட்ட தகர ஷீட்டுகள் கீழ் நிற்கின்றனர்
    • போக்குவரத்து நெரிசல் குறைக்க தடுப்புச் சுவர் அமைக்க வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் புதிய சாலை வேலூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நிழற்கூடம் இருந்தது.

    சாலை விரிவாக்க பணிக்காக மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் பழுதடைந்த நிலையில் இருந்த நிழற்கூடத்தை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் நிழற்கூடம் கட்டவில்லை.

    பயணிகள் நிற்க இடமில்லாமல் அப்பகுதி கடை வியாபாரிகள் தங்கள் கடை முன்பு நிழலுக்காக போடப்பட்ட தகர ஷீட்டுகள் கீழ் நிற்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் தகரஷீட்டுகள் விளம்பர தட்டிகளை, போலீசார் கண்ணமங்கலம் பேரூராட்சியில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானப்படி அகற்றினர். இதனால் தற்போது பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசல் குறைய விரைவில் சாலை நடுவே செண்டர் மீடியன் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளையும் நெடுஞ்சாலைத்துறையினர் உரிய முறையில் தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    ×