என் மலர்
திருவண்ணாமலை
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
- அன்னதானம் வழங்கப்பட்டது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம், செல்லங்குப்பம் கிராமத்தில் ஸ்ரீ ஜெயகாளியம்மன் கோவில் நடைபெற்றது.
இன்று அதிகாலை ஸ்ரீ ஜெயகாளியம்மன் கோயில் வளாகத்தில் நான்காம் கால பூஜை, தீபாராதனை, பூர்ணாஹீதி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
- வேலூரை சேர்ந்தவர்
- பஞ்சுமிட்டாய் தயாரிக்க சுவிட்சை ஆன் செய்தபோது விபரீதம்
ஆரணி:
வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் அருள்மாறன் (வயது 19), ஆற்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் படித்து வந்தார்.
கல்லூரி மாணவர்
இவர் படித்துக் கொண்டு விடுமுறை நாட்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்கள் தயாரித்து கொடுப்பது மற்றும் கேட்ரிங் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில், திருவண் ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பஞ்சுமிட்டாய், பாப்கான் தயாரித்து கொடுப்பதற்காக அருள்மாறன் சென்றார். அப்போது திடீரென மின்நிறுத்தம் ஏற்பட்டது.
பின்னர், சிறிது நேரம் கழித்து மின்சாரம் வந்தது. மீண்டும் பாப்கான், பஞ்சுமிட்டாய் தயாரிக்க சுவிட்சை ஆன் செய்தார். அதிலிருந்த மின்சாரம் இவர் மீது பாய்ந்தது.
இதில் அருள்மாறன் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு களம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, அருள் மாறனின் தந்தை குமார் நேற்று களம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அருள்மாறன் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுசம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரத்த வங்கி அலுவலர்கள் மூலம் தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் முயற்சித்தோம்
- பெங்களூருவில் இருந்து ெரயில் மூலம் கொண்டு வந்தனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிரா மத்தைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தைக்கு தீவிர ரத்த சோகை பாதிப்பு ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
பாம்பே குரூப் ரத்தம்
குழந்தையை பரி சோதித்த டாக்டர்கள், ஹீமோ குளோபின் அளவு குறைவாக இருந்தது கண்டு அதிர்ச் சியடைந்தனர். சராசரி அளவை விட மிகவும் குறைவாக இருப்பது குழந் தையின் உயிருக்கு ஆபத்து என்பதால், உடனடியாக ரத்தம் ஏற்ற முடிவு செய் தனர். ஆனால், அந்த குழந்தையின் ரத்தப் பிரிவு அரிய வகையான
'பாம்பே குரூப் ரத்தம்' என தெரியவந்தது. லட்சத்தில் ஒருவருக்கு மட் டுமே இந்த வகை ரத்தம் அமைந்திருக்கும் என்பதால், ரத்த வங்கியில் கையிருப்பில் இல்லை. எனவே, பல இடங்களில் முயற்சித்தனர்.
அதைத் தொடர்ந்து, தன்னாவலர் அமைப்பு மூலம் பெங்களூருவில் இருந்து பாம்பே குரூப் ரத்தம் உடனடியாக, எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் திருவண்ணாமலைக்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டது.
இதுகுறித்து, அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை கூறுகையில், 'பாம்பே குரூப் ரத்தம் மிகவும் அரிதானது.
எனவே, குழந்தையின் உயிரை காப்பாற்ற, ரத்த வங்கி அலுவலர்கள் மூலம் தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் முயற்சித்தோம். தன்னார்வ குழுவின் உதவியால் பெங்களூருவில் ரத்தம் கிடைத்தது.
அதனை உரிய நேரத்தில் கொண்டுவந்து செலுத் தியதால், குழந்தையின் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைத்திருக்கிறோம்'
இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த துறைத்தலைவர் பெருமாள் பிள்ளை மற்றும் டாக்டர்கள் உதயதீபா, ராஜசேகர் ரத்த மைய துறைத் தலை வர் டாக்டர் ஜெயலட் சுமி, உதவி பேராசிரியர் பவித்ரா ஆகியோரை கல்லூரி முதல்வர் அரவிந்த் பாராட்டினார்.
- சொத்து தகராறில் மணிகண்டனுக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.
- ஆத்திரமடைந்த மணிகண்டன் வீடியோ ஒன்றை தனது செல்போனில் பதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அண்ணா தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37). டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு வயதில் மகன் உள்ளனர்.
சொத்து தகராறில் இடத்தை அளக்க கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளார். இதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மணிகண்டன் மரத்தில் ஏறி தற்கொலைக்கும், மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்கவும் முயன்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சொத்து தகராறில் அவருக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் ஆத்திரமடைந்த அவர் வீடியோ ஒன்றை தனது செல்போனில் நேற்று பதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்த வீடியோ பதிவில் எனக்கு எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை சம்பந்தப்பட்ட தாசில்தார், சர்வேயர், விஏஓ மற்றும் அதிகாரிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள், புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் நான் இறந்த பின்பாவது எனக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோல் யாருக்கும் நடக்கக்கூடாது என்று பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போளூர் சனிக்கவாடி கிராமத்தில் நடந்தது
- பொது மக்களுக்கு அன்னதானம்
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சனிக்கவாடி கிராமத்தில் பாஞ்சாலி அம்மன் கோவிலில் இக்கோவில் அக்னி வசந்த விழா 9-ம் ஆண்டு நடைபெறுகிறது கடந்த ஜூன் 9-ந்தேதி கொடியேற்றத்துடன் அக்னி வசந்த விழா மகாபாரத சொற்பொழிவு தொடங்கியது.
20 நாட்களும் மகாபாரத சொற்பொழிவு 7 நாட்கள் நாடகமும் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நேற்று திரவுபதி அம்மன், கிருஷ்ணர், தருமர், அர்ஜுனன் ஆகிய சிலைகளுக்கு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை செய்யப்பட்டது.
காலையில் 10 மணியளவில் துரியோதனம் படுகளம் மதியம் 12 அன்னதானமும் மாலை 5 மணி அளவில் தீமிதி விழாவும் நடைபெற்றது.
முதலில் அக்னி கரகம் பயபக்தியுடன் தீயில் இறங்கியவுடன் பொதுமக்களும் அம்மனை வேண்டி விரதங்கள் இருந்து வேண்டுதலை நினைத்து பக்தியுடன் தீயில் இறங்கி அம்மன் அருள் பெற்றனர். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் தருமருக்கு பட்டாபிஷே கமும் பிறகு அன்னதானம் நடைபெற்றது விழா ஏற்பாடு களை பொது மக்களும் இளைஞர் அணிகள் ஏற்பாடு செய்தி ருந்தனர்.
- நெடுஞ்சாலை துறை சார்பில் நடவடிக்கை
- ஆக்கிரமிப்புகளை அகற்றினர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே எஸ்.வி.நகரம் கிராமத்தில் ஆரணி செய்யார் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறை வருவாய் துறையினர் அகற்றி வருகின்றனர்.
எஸ்.வி.நகரம் பஸ் நிறுத்தம் அருகில் மிகவும் பழமை வாய்ந்த விநாயகர் கோவிலை நெடுஞ்சாலை துறையினர் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் விநாயகர் கோவிலில் இருந்த விநாயகர் சிலையை அருகில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பாதுகாப்பாக வைக்கபட்டது. விநாயகர் கோவிலை இடித்து தரை மட்டமாக்கினார்கள்.
பழமை வாய்ந்த கோவிலை இடித்து தரைமட்டாக்கியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். பதட்டத்தை தணிக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- போலீசார் மடக்கி பிடித்தனர்
- ஒருவர் தப்பியோட்டம்
வந்தவாசி:
வந்தவாசி தெற்கு போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ராமு தலைமையிலான போலீசார் ஆரணி சாலை வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் நின் றிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற னர். போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பியோடிவிட்டார்.
பிடிபட்ட மற் றொரு நபரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தபோது அவர் 19 வயதே ஆனவர் என்பதும், பாக் கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
- ஓடைப்புறம்போக்கு பகுதியில் கட்டப்பட்டு இருந்தது
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அருகே உள்ள வெள்ளூர் கோலக்காரன்பேட்டை பகுதியில் 3 வீடுகள் அனுமதியின்றி ஓடைப்புறம்போக்கு பகுதியில் கட்டப்பட்டு இருந்தது.
போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி, போளூர் தாசில்தார் நரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பொக்லைன் எந்திரம் மூலம் 3 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.
அப்போது சந்தவாசல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியி சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஒரு சாதி சான்றிதழ் வழங்காமல் இருப்பது அரசாங்கத்தின் தோல்வியாக கருகிறோம்.
- வேலூர் மாவட்ட அதிகாரிகள் பிரிட்டிஷ்காரர்களை போல் மக்களிடம் நடந்து கொள்கின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் பன்னியாண்டி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பட்டியல் இன எஸ்.சி சாதி சான்று கேட்டு பலமுறை மனு அளித்துள்ளனர்.
திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமம் எம்ஜிஆர் நகரில் வசித்தவர் முருகன். இவரது மகள் ராஜேஸ்வரி. தந்தையின் மறைவுக்கு பிறகு தாய் சரோஜாவின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 375 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவி ராஜேஸ்வரி, உயர்கல்வி கனவுகளுடன், கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளார்.
பன்னியாண்டி சமூகத்தை சேர்ந்த இவருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை.
அப்போது சாதி சான்று இல்லாததால், மாணவியின் உயர்கல்வி கேள்வி குறியானது. இதனால் மனமுடைந்த அவர், கடந்த 17-ந் தேதி விஷம் குடித்தார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்து, திருவண்ணாமலை போலீசார் மாணவி ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்த தனக்கு, எஸ்சி சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் வழங்கவில்லை. இது தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகளை முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை.
என்னுடன் படித்த மாணவிகள், கல்லூரியில் படிக்க செல்கின்றனர். சாதி சான்றிதழ் இல்லாததால், கல்லூரி படிப்பை தொடர முடியாத நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது. உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற என்னுடைய கனவு, நிறைவேறாததால், மனமுடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன் என தெரிவித்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இது திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ்நாடு பன்னியாண்டி சங்கத்தினர் சாதி சான்றிதழ் வழங்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . அவர்கள் இன்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் கூறுகையில்:-
பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்த மாணவி ராஜேஸ்வரி 12-ம் வகுப்பில் 367 மதிப்பெண் பெற்றும், சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் மேல்படிப்பை தொடர முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.
இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஒரு சாதி சான்றிதழ் வழங்காமல் இருப்பது அரசாங்கத்தின் தோல்வியாக கருகிறோம்.
வேலூர் மாவட்ட அதிகாரிகள் பிரிட்டிஷ்காரர்களை போல் மக்களிடம் நடந்து கொள்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பன்னியாண்டி சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு உடனடியாக பட்டியலென எஸ்சி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் சாதிச் சான்றிதழ் கொடுக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றார்.
- 3-ம் ஆண்டு படித்து வருகிறார்
- பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை
செய்யாறு:
வெம்பாக்கம் அடுத்த தாலிக்கால் கிராமத்தை சேர்ந்த விவசாயி உடைய 20 வயது மகள். செய்யாறு அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கல்லூரிக்கு சொந்தமான அரசு விடுதி ஒன்று அப்பகுதியில் உள்ளது. மாணவி அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி கல்லூரி விடுதியில் இருந்து திடீரென மாயமானார். இதனால் கல்லூரி விடுதியில் இருந்த ஊழியர்கள் மற்றும் சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மாணவியை பல்வேறு இடங்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தேடி உள்ளனர். மாணவி கிடைக்காததால் பெற்றோர் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்தார். மேலும் மாயமான மாணவியை தேடி வருகிறார்.
- யார் என அடையாளம் தெரியவில்லை
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு பைபாஸ் சாலையில் பாலம் ஒன்று அமைந்துள்ளது. இதன் அடியில் கால்வாய் செல்கிறது. இந்த நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் கால்வாயில் விழுந்து இறந்த நிலையில் கிடந்தது.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து செய்யாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கால்வாயில் கிடந்த உடலை மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊழியர்கள் பைக் வாங்க வந்தவரிடம் எந்த ஒரு அடையாள அட்டையும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
- பைக்கை நூதன முறையில் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
புதிய பைக்கை ஓட்டி பார்ப்பதாக கூறி திருடப்படும் காட்சிகள் சினிமாக்களில் இடம் பெற்றுள்ளது. அதே போல திருவண்ணாமலையிலும் நூதன திருட்டு அரங்கேறி உள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதை காஞ்சி ரோட்டில் தனியார் பைக் ஷோரூம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஷோரூமிற்கு நேற்று முன்தினம் இரவு புதுச்சேரியில் இருந்து டிப்-டாப் உடையில் வாலிபர் ஒருவர் காரில் வந்து இறங்கினார். அங்கிருந்த ஊழியர்களிடம் பைக் வாங்க வந்துள்ளேன் என்று கூறினார்.
இதனை நம்பிய ஊழியர்கள் அந்த நபருக்கு புது பைக்குகளை காட்டினர். இதில் ஒரு புது பைக் பிடித்துப் போகவே அதனை ஓட்டி பார்ப்பதாக அந்த நபர் கூறினார். இதனால் ஊழியர்கள் சுமார் ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள பைக்கை அவரிடம் கொடுத்தனர்.
ஆனால் ஊழியர்கள் பைக் வாங்க வந்தவரிடம் எந்த ஒரு அடையாள அட்டையும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த நபர் பைக்கை ஓட்டி ஒத்திகை பார்ப்பதற்காக பைக்கை வெளியே ஓட்டி சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அந்த நபர் திரும்பி வரவில்லை . இதனால் ஷோரூம் ஊழியர்கள் பைக்கை எடுத்து சென்ற நபரை தேடிச் சென்றனர்.
பின்னர் இது குறித்து காரில் இருந்த டிரைவரிடம் விசாரித்தனர். அப்போது அந்த வாடகை கார் என்றும், காரில் வந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற தகவல் தனக்கு தெரியாது என்று டிரைவர் கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என டிரைவரிடம் கேட்டனர்.
அதற்கு அவர் நான் புதுச்சேரியில் இருந்து வருகிறேன் எனக்கு இந்த வாலிபர் யார் என தெரியாது அவரிடம் செல்போன் கூட இல்லை எனக்கு ஒரு ஆட்டோ டிரைவர் போன் செய்து திருவண்ணாமலைக்கு சவாரி உள்ளது என கூறி இவரை எனது காரில் அனுப்பி வைத்தார். எனக்கு அந்த நபர் கார் வாடகை கூட கொடுக்கவில்லை என கூறினார்.
இதனால் செய்வதறியாமல் தவித்த ஊழியர்கள் இது குறித்து ஷோரூம் உரிமையாளரிடம் நடந்த விவரங்களை பற்றி தெரிவித்தார்.
மேலும் திருவண்ணாமலை தாலுகா போலீசில் தகவல் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு காரில் வந்து பைக்கை நூதன முறையில் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.






