என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாலுகா தேனிமலை பகுதியில் உள்ள கோவிந்தராஜ் நகரில் ஒரு குடோனில் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்து இருப்பதாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் பேரில் மாவட்ட வினியோக அலுவலர் அரிதாஸ் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர் அமுல் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது குடோனில் 50 கிலோ எடை கொண்ட 500 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

    இதன் மொத்த எடையளவு 25 டன் ஆகும். இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை அலுவலர்கள் பறிமுதல் செய்து லாரிகள் மூலம் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் ஈசான்ய மைதானத்தில் இருந்து ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள ஈசான்ய மைதானத்தில் இருந்து ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா, உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் கலந்துகொண்டு, ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    ஊர்வலத்தில் போக்குவரத்து போலீசார், சட்ட ஒழுங்கு போலீசார், ஊர் காவல் படையினர் என சுமார் 150 பேர் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் ஈசான்ய மைதானத்தில் இருந்து பெரியார் சிலை, காந்தி சிலை வழியாக மாட வீதியை சுற்றி வந்து மீண்டும் ஈசான்ய மைதானத்தை அடைந்தனர்.

    அதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் அண்ணா நுழைவு வாயில் வழியாக ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்ற பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக ‘ஹெல்மெட்’ வழங்கினார். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் பாரதி, சந்திரசேகரன், சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் பலர் கலந்துகொண்டனர்.
    திருவண்ணாமலை அருகே சாராயம் விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகர் பகுதியில் சாராய வியாபாரத்தில் ஈடுபட்ட விருதாம்பாள் (வயது 35), மனவருத்தா (55) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தலா 55 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஆரணி அருகே தலையில் மூட்டைகள் சரிந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விருப்பாட்சி (வயது 45), கூலி தொழிலாளி. இவருக்கு தேவிகா என்ற மனைவியும் ரஞ்சித் என்ற மகனும் ரம்யா என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள வெங்கடேசன் என்பவரின் உரக்கடைக்கு லாரியில் வந்த உர மூட்டைகளை விருப்பாட்சி இறக்கி கொண்டிருந்தார். அப்போது கடையின் மேல் பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகள் திடீரென கீழே சரிந்தது. மூட்டைகள் விருப்பாட்சியின் தலையில் விழுந்ததில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்துப்பட்டு அருகே ஆட்டோ மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு அருகே உள்ள மகாதேவிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சற்குணம் (வயது 70), விவசாயி. இவர் நேற்றுமுன்தினம் சேத்துப்பட்டு -ஆரணி சாலையில் உள்ள காமராஜர் பஸ் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். சாலையை கடக்க முயன்றபோது ஆரணியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி வந்த ஆட்டோ இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சற்குணத்தின் மகன் வெங்கடேசன் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி, சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழ்பென்னாத்தூரில் அம்பேத்கர் படத்திற்கு அவமரியாதை செய்தவர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பக்க சுற்றுச்சுவரில் முன்னாள் மாணவர்கள் சார்பில் அண்ணா, அம்பேத்கர் மற்றும் அறிஞர்கள் உருவப்படங்களை பெயிண்டால் வரைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு யாரோ சிலர் அம்பேத்கர் படத்திற்கு அவமரியாதை செய்துள்ளனர்.

    இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பி.கா.அம்பேத்வளவன் தலைமையில், நகர செயலாளர் பிரகாஷ், பொருளாளர் சரவணன், செய்தி தொடர்பாளர் வக்கீல் சாரதி, பார்த்திபன் உள்பட பலர் திடீரென நேற்று காலை பள்ளியின் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அம்பேத்கர் படத்திற்கு அவமரியாதை செய்தவர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் போக்குவரத்து சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது. தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழரசு, ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் ஏற்படுத்தினர்.

    இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    திருவண்ணாமலை அருகே 5 கோவில்களில் உண்டியல் உடைத்து பணம், நகை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே உள்ள நூக்காம்பாடி கிராமத்தில் முருகன் கோவில், பச்சையம்மன் கோவில், அய்யப்பன் கோவில், படவேட்டம்மன் கோவில், சீனிவாச பெருமாள் கோவில் ஆகிய 5 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜைகள் முடித்து விட்டு கோவில் பூசாரி மற்றும் நிர்வாகிகள் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றனர்.

    இதையடுத்து அந்த 5 கோவில்களிலும் நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். கோவில்களில் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த உண்டியல்களை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் நகைளை திருடி சென்று உள்ளனர்.

    நேற்று காலையில் கோவில்களின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் 5 கோவில்களிலும் நடந்த திருட்டு சம்பவத்தில் 6 கிராம் தங்கம் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் மர்ம நபர்களால் திருடப்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தொடர்ந்து இதுகுறித்த புகாரின் போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலை அருகே பிளஸ்-1 மாணவி மர்மமான முறையில் மரத்தில் தூக்கில் பிணமாக கிடந்தார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகில் உள்ள கிளிபட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் ரம்யா (வயது 16). இவர் பிளஸ்-1 படித்து வந்தார். சம்பவத்தன்று இரவு சுமார் 7.30 மணியளவில் வீட்டில் இருந்த ரம்யா கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியே சென்று உள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் ரம்யாவை பல இடத்தில் தேடியுள்ளனர்.

    அப்போது ரம்யா அந்த பகுதியில் உள்ள ஒருவரின் நிலத்தில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி ரம்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்த கணவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
    திருவண்ணாமலை:

    சென்னை உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 80). இவரது மனைவி அலமேலு (67). இவர்களது மகன் ஆறுமுகம் (47). இவருக்கும் வேட்டவலம் அருகில் உள்ள தாழனூர்சந்து பகுதியை சேர்ந்த நாமகிரி என்பவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    ஆறுமுகம் அவரது மனைவி நாமகிரிக்கு வரதட்சணை கொடுமை செய்து உள்ளார். இது குறித்து நாமகிரி திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்த விசாரணை திருவண்ணாமலை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. 

    இந்த நிலையில் நேற்று இவ்வழக்கை மாஜிஸ்திரேட்டு கண்ணன் விசாரித்தார். இதில் நாமகிரிக்கு வரதட்சணை கொடுமை செய்த அவரது கணவர் ஆறுமுகத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் ஆறுமுகத்தின் தந்தை பாலகிருஷ்ணனுக்கும், தாய் அலமேலுவிற்கும் தலா 6 மாத சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தும் தீர்ப்பு கூறினார்.
    அழகுசேனை ஏரிக்கரை அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த வேளாண் உதவி அலுவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள அழகுசேனை கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 82), ஓய்வு பெற்ற வேளாண்மை உதவி அலுவலர். இவர், நேற்று மொபட்டில் வேலூர்-திருவண்ணாமலை மெயின் ரோட்டில் அழகுசேனை ஏரிக்கரை அருகே செல்லும் போது, அந்த வழியாக சென்ற கார் திடீரென மொபட் மீது மோதியது.

    இதில் முனியப்பன் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்து கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திருவண்ணாமலை போலீசார் மூலம் முககவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு குறும்படம் எடுக்கப்பட்டு உள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகத்திற்கு இணையாக மாவட்ட காவல் துறையும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முகக்கவசம் அணிவதை போலீசார் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் திருவண்ணாமலை போலீசார் மூலம் முக கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு குறும்படம் எடுக்கப்பட்டு உள்ளது. அதில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து அந்த வீடியோ பதிவில் திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது.
    கீழ்பென்னாத்தூர் அருகே சாராயம் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில், இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் திருவண்ணாமலை அருகில் உள்ள தட்டரணை கிராம பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது பதுக்கி வைத்திருந்த 750 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது. கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆங்குணம் பகுதியில் சாராயம் கடத்தியதாக அதேப்பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 45) என்பவரை கைதுசெய்து 50 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    ×