என் மலர்
திருவண்ணாமலை
தேசூரை அடுத்த தக்கன்ராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு (வயது 52). இவர் தேசூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம்.மையத்தில் பணம் எடுக்க சென்றார்.
அப்போது இவருக்கு முன்பு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரிடத்தில் பாபு தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரூ.20 ஆயிரம் எடுத்து தரும்படி கூறினார்.
அப்போது பாபு கொடுத்த ஏ.டி.எம்.கார்டை வைத்துக்கொண்டு வேறு ஒரு ஏ.டி.எம்.கார்டை அந்த நபர் எந்திரத்தில் செலுத்தி பணம் இல்லை என்று கூறி பாபுவிடம் கொடுத்துவிட்டு ஓடி விட்டார். ஆனால் பாபுவின் செல்போனுக்கு ரூ.20 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.
இது குறித்து தேசூர் போலீசில் பாபு புகார் செய்தார். அதன்பேரில் தேசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தேசூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு சென்று கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது தன்னிடம் போலி கார்டை கொடுத்து விட்டு ஓடியவரின் அடையாளத்தை பாபு காண்பித்தார்.
பல்வேறு கோணங்களில் நடத்திய விசாரணையில் அந்த மர்மநபர் வந்தவாசியை அடுத்த சலுக்கை கிராமத்தில் வசிக்கும் ரகுராமன் மகன் விஜயன் (28) என்பது தெரியவந்தது. அவரை பிடித்து நடத்திய விசாரணையில் பாபுவின் ஏ.டி.எம்.கார்டு மூலம் ரூ.20 ஆயிரம் திருடியதை ஒப்புக்கொண்டார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இதனை தொடர்ந்து விஜயனை தேசூர் போலீசார் கைது செய்து ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் கொரோனா 2-வது பரவல் சற்று குறைந்ததால் அருணாசலேஸ்வரர் கோவில் திறக்கப்பட்டு வந்தது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இருந்தபோதிலும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்ததால் திருவிழா நிகழ்ச்சிகளில் மக்கள் அதிகம் கூடாமல் தடுக்கும் வகையில் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பக்தர்கள் கோவில் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதை தடுக்கும் வகையில் நேற்று (1-ந்தேதி) முதல் நாளை (3-ந்தேதி) வரை 3 நாட்கள் முக்கிய கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், சுற்றுலாத்தலங்களுக்கு செல்லவும் திடீரென தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா கொடியேற்றம் நடந்த போதிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. கோவில் ஊழியர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இன்று ஆடி கிருத்திகை என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருவண்ணாமலைக்கு வந்தனர்.
அவர்கள் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் வேதனை அடைந்த பக்தர்கள் கோவில் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் கிரிவலம் சென்று விட்டு தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர். இதேபோல் வெளி மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய முடியாமல் வேதனை அடைந்தனர்.
திடீரென கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்ற அறிவிப்பு வெளியானதால் அதுபற்றி பொதுமக்கள் பலர் அறியாமல் வந்ததாக கூறினர்.
வந்தவாசியை அடுத்த கீழ்செம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரின் மனைவி மல்லிகா (வயது 43). இவர் நேற்று முன் தினம் தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் மாட்டுக்கு புல் அறுத்துக்கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர்களின் நிலத்துக்கு அருகில் உள்ள ஆறுமுகத்தின் கரும்புத்தோட்டம் வழியாக சென்றுள்ளார். அங்கு, காட்டுப்பன்றிக்காக வைத்திருந்த மின் வேலியில் சிக்கிய மல்லிகா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தெள்ளார் போலீசாருக்கு கணவர் ஏழுமலை தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் சோனியா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கரும்புத்தோட்டத்தில் மின்வேலி அமைத்த விவசாயி ஆறுமுகத்தை நேற்று கைது செய்தனர். கைதான ஆறுமுகம் தென்னிந்திய நதிநீர் இணைப்பு சங்க திருவண்ணாமலை மாவட்ட தலைவராக உள்ளார்.
வாணாபுரம்:
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாவுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வவேல். இவரின் மனைவி வளர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்வவேல் இறந்து விட்டார். அவர்களுக்கு 3 பிள்ளைகள். முதலாவதாக பிறந்தவர் ஸ்டாலின். எம்.ஏ.பி.எட் படித்துள்ளார்.
தற்போது அவர் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 2-வதாக பிறந்தவர் சிவன்யா. திருநங்கையாக மாறி விட்டார்.
3-வதாக பிறந்தவர் தமிழ்நிதி, தச்சம்பட்டு போலீஸ் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார்.
திருநங்கை சிவன்யா, பி.காம்.பட்டதாரியாவார். பள்ளி படிப்பை அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து, திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் பி.காம் படித்தார். சிவன்யா தொடர்ந்து அரசு நடத்தும் போட்டித் தேர்வுக்கு தயாரானார்.
அவர் போலீஸ் துறையில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படித்து, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் வெற்றி பெற்றார்.
அதைத்தொடர்ந்து உடல் தகுதி தேர்வு, நேர்காணல் உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளிலும் வெற்றி பெற்று தமிழகத்தின் 2-வது திருநங்கை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 26-ந்தேதி சிவன்யா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான ஆணையை தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றார்.
நாங்கள் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்களை மிகுந்த சிரமத்துக்கு இடையே பெற்றோர் படிக்க வைத்தனர். நான் திருநங்கையாக மாறியதும், என்னை தனிமைப்படுத்தாமல் எனது குடும்பத்தினர் நன்றாக வளர்த்தனர்.
எனக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்தனர். நான் தற்போது உயர்ந்த நிலையை அடைந்துள்ளேன். நான் போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு தற்போது நிறைவேறி உள்ளது.
என்னுடைய அடுத்த கனவு குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று துணை போலீஸ் சூப்பிரண்டாக வேண்டும் என்பதே எனது லட்சியம். திருநங்கைகளுக்கு அரசு இத்தகைய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தால் பல்வேறு அரசு துறைகளில் சாதித்துக் காட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து சிவன்யாவின் அண்ணன் ஸ்டாலின் கூறுகையில்:-
சமூகத்தில் இதுபோல் ஒதுக்கப்படும் திருநங்கைகளுக்கு அரசு ஆதரவு அளித்தால், அவர்களில் பலர் நல்ல பணிகளில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். திருநங்கை என சிவன்யாவை தாங்கள் ஒதுக்காமல் அவரிடம் அன்பு, பாசம் காட்டி அரவணைத்து எங்களின் குடும்ப உறுப்பினர்கள் ஊக்கம் அளித்ததால் தான், அவர் உயர்ந்த நிலையை அடைந்துள்ளார், என்றார்.
சென்னையில் ஒரு வருடம் பயிற்சி முடித்த பின்னர் சிவன்யாவுக்கு எந்த ஊரில் பணி ஒதுக்கப்படும் என்பது தெரியவரும்.
ஏற்கனவே தமிழகத்தில் முதல் முறையாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகாயாஷினி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பதவியேற்று தற்போது சென்னையில் பணியாற்றி வருகிறார்.
அந்த வரிசையில் தமிழகத்தில் 2-வதாக திருநங்கை சிவன்யா போலீஸ் துறையில் சப்இன்ஸ்பெக்டராக தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி அருணாசலேஸ்வரர் கோவில் உள்பட கிரிவலப்பாதையில் அஷ்டலிங்க கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. கொரோனா தொற்று குறைய தொடங்கியதை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கடந்த 5-ந் தேதி முதல் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின் படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்பட கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சாதாரண நாட்களிலும் ஏராளமான பக்தர்களும் கிரிவலம் செல்கின்றனர்.
மேலும் கடந்த வாரம் பவுர்ணமியன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வழக்கமாக பவுர்ணமி முடிந்து ஒரு வாரத்திற்குள் அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படும்.
அதன்படி நேற்று கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் கோவிலில் உள்ள திருகல்யாண மண்டபத்தில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் உண்டியல் காணிக்கையாக 354 கிராம் தங்கம், 512 கிராம் வெள்ளி, ரூ.79 லட்சத்து 74 ஆயிரத்து 868 பெறப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி இக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திருவருட்பா ஆசிரமம் உள்ளது. இங்கு திருவண்ணாமலை மாவட்ட நேரு யுவகேந்திரா, சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் ஆகியவை இணைந்து நேற்று கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின..
இதில் திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜாராமன்- சவுபர்ணிகா ஆகியோரின் 2-ம் வகுப்பு படிக்கும் மகள் சமந்தா என்ற 7 வயது சிறுமி யோகாசனங்களை செய்து விளக்கினார்.
கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளதை போல் 133 யோகாசனங்கள் செய்து விழிப்புணர்வு மற்றும் உலக சாதனை முயற்சியை மேற்கொண்டார்.
நிகழ்ச்சிக்கு நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் சிறுமி சமந்தா பத்மாசனம், ஜானுசிரசாசனம், யோகமுத்ரா, பர்வதாசனம், யோகபார சிரசாசனம், தனுராசனம் உள்பட 133 யோகாக்களை செய்து காண்பித்தார்.
முன்னதாக அவர் 4 பேப்பர் கப் மீது அமர்ந்து பத்மாசனம், தாடாசனம், பர்வதாசனம் ஆகியவை செய்து காண்பித்து அசத்தினார். முன்னதாக நிகழ்ச்சியை திருவண்ணாமலை கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையை சேர்ந்த நேரு தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல் மாறன் கலந்து கொண்டு யோகா செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிக்கு பரிசு வழங்கினார்.
முடிவில் யோகா ஆசிரியை கல்பனா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் செய்திருந்தனர்.
ஆரணியை அடுத்த ஒண்டிகுடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், லாரி டிரைவர். இவரின் மனைவி சரிதா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 5 வயதில் சஞ்சய் என்ற மகனும், 3 வயதில் தாரணிகா என்ற மகளும் உள்ளனர். 21-ந்தேதி வீட்டில் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தன. அப்போது குழந்தைகள் விளையாட்டாக கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டதாக தெரிகிறது.
அன்று மாலை சரிதா வீட்டுக்குள் நுழைந்ததும் டீ, போடுவதற்காக தீக்குச்சியை உரசினார். குபீரேன தீப்பிடித்து அறை முழுவதும் பரவியது. சரிதா சேலையிலும் தீப்பிடித்து எரிந்தது, அவர் கூச்சலிட்டு அலறினார்.
அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சரிதா பரிதாபமாக உயிரிழந்தார். ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க அனைவரும் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு போலீசார், நகராட்சி, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் தற்போது திருவண்ணாமலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் தொழில் ரீதியாக பல்வேறு கிராமங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு தினமும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். அதுமட்டுமின்றி அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காகவும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.
திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் மக்கள் சமூக இடைவெளியில்லாமலும், முககவசம் அணியாமலும் பலர் சுற்றி திரிகின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்பவர்கள், மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்களில் பலர் முககவசம் அணியாமல் செல்கின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
எனவே திருவண்ணாமலையில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க முககவசம் அணியாதவர்கள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் கண்காணிக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையத்தை சேர்ந்தவர் சாந்தராஜ் (வயது 53). ஆங்கில மருந்து, மாத்திரைகளை மொத்தமாக வாங்கி, மருந்து கடைகளுக்கு சப்ளை செய்து வந்தார். இவரது மனைவி மீரா (45). மகன் தேவகுமார் (23). இவர் திருவண்ணாமலையில் ஒரு மருந்து கடையில் வேலை செய்து வந்தார்.
இவர்களின் குலதெய்வமான பட்டணம் காத்த அம்மன் கோவில், போளூரை அடுத்த மண்டகொளத்தூர் கிராமத்தில் உள்ளது. நேற்று காலை சாந்தராஜ், தனது மனைவி மற்றும் மகனுடன் குலதெய்வ கோவிலுக்கு வந்துள்ளார்.
கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு சற்று தூரம் நடந்து சென்று உள்ளனர். அந்த பகுதியில் அண்ணாமலை என்பவரின் விவசாய கிணற்றில் 3 பேரும் திடீரென குதித்து விட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன், இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார், தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர்.
3 பேரும் விழுந்த கிணறு 45 அடி ஆழம் கொண்டதாகும்.் தீயணைப்பு படையினர் கிணற்றிலிருந்து மீரா, அவரது மகன் தேவகுமார் ஆகியோரது உடல்களை மீட்டனர். சாந்தராஜ் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
கிணற்று அருகில் ஒரு காகிதம் கிடந்தது. அதில் கடன் சுமையால் நாங்கள் மூவரும் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று சாந்தராஜ் குறிப்பிட்டுள்ளார்.
தாய்-மகன் பிணமாக மீட்கப்பட்ட நிலையில் சாந்தராஜை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் கிணற்றில் மூழ்கியிருக்கலாம் என கருதி கிணற்றில் உள்ள தண்ணீரை 3 மோட்டார்கள் மூலம் வெளியேற்றி வருகின்றனர்.
மீரா, தேவகுமார் உடல்களை பிரேத பரிசோதனைக்கு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து சப்- இன்ஸ்பெக்டர்கள் சங்கர், தரணி, செல்வராஜ், பாஷ்யம், ஆனந்தன் ஆகியோர் சாந்தராஜ் என்ன ஆனார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் சுமையால் தாய்-மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






