என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • சரவணன் எம்.எல்.ஏ. பேச்சு
    • நீர்வளத் துறை மூலம் ஏரியை புணரமிக்க பூமி பூஜை நடந்தது

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மட்டவெட்டு கிராமத்தில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான பெரிய ஏரி சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

    இந்த ஏரியில் தற்போது நீர்வலத் துறை மூலம் ரூ.1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பீட்டில் கரை பலப்படுத்துதல் புணரமைத்தல் மற்றும் மதகுகள் சரி செய்தல் ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை போடப்பட்டது.

    இதில் சரவணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்து பேசியதாவது :-

    கலசப்பாக்கம் தொகுதியானது முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பகுதியாகும் இந்த பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாவட்டத்தின் அமைச்சர் ஏ.வ. வேலு ஆகியோரின் தீவிர முயற்சியில் நீர் வளத்தை பெருக்குவதற்காகவும் விவசாயிகளின் நலன் கருதியும் ரூ.1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பீட்டில் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.

    ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஏரிகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக விவசாயிகள் என்னிடம் மனு கொடுத்து வருகிறீர்கள் அந்த ஆக்கிரமிப்பு யாரால் செய்யப்படுகிறது எந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களால் செய்யப்படுகிறது என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் தமிழக அரசுக்கு சொந்தமான ஏரியை முதலில் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்தால் அதனை கிராமத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தட்டிக் கேட்க வேண்டும்.

    தற்போது ஒரு கிராமத்திற்கு புதிய பள்ளி கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் அந்த கிராமத்தில் கட்டிடம் கட்டும் அளவிற்கு இடமில்லை என்று கைவிருக்கின்றனர்.

    இந்த நிலை நீடிக்காமல் பார்த்துக் கொள்வது பொது மக்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது விழிப்புணர்வுடன் இருந்து அரசு சொத்துக்களை காப்பாற்றுங்கள் இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் ஒன்றிய குழு தலைவர் அன்பரசிராஜசேகரன் ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணலதா உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சாலை பணிகள் நடந்து வருகிறது
    • மக்கும் குப்பை மக்காத குப்பையை பார்வையிட்டார்

    புதுப்பாளையம்:

    செங்கம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பா.முருகேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது புதுப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மக்கும் குப்பை மக்காத குப்பையை பார்வையிட்டார்.

    புதுப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் உஸ்னாபீ, புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், மரியதேவானந்த், உடன் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வபாரதி மனோஜ்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் அன்புசெல்வன், ரஞ்சித் குமார், மகேஷ்வரிமுருகன், உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து காரப்பட்டு புதுப்பாளையம் புதிதாக போடப்படும் சாலையை கலெக்டர் பார்வையிட்டார்.

    அப்போது காரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்திசீனு உடன் இருந்தார், பின்னர் முன்னூர்மங்கலம், புதூர்செங்கம், உண்ணாமலைபளைம், நாகப்பாடி, காரப்பட்டு ஆகிய ஊராட்சிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    • பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது
    • ஏராளமான மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

    வேட்டவலம்:

    வேட்டவலம் அடுத்த வேளானந்தல் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா நேற்று நடந்தது.விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் கருணாகரன் தலைமையில் தாங்கினார்.

    உதவி தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.தமிழ் ஆசிரி யை மகேஸ்வரி வரவேற்றார்.விழாவின் சிறப்பு விருந்தினர்களாக தனியார் கல்லூரி பேராசிரியர் திரையிசை பாடகர் செந்தில்வேலன், பட்டறைக்காடு அரசு பள்ளி தமிழாசிரியர் எழுத்தாளர் ஜெய்சங்கர், பறையம்பட்டு அரசு பள்ளி தமி ழாசிரியை லலிதா ஆகியோர் கலந்து கொண்டு தமிழ் மொழியின் பெருமைகள் மற்றும் தமிழ் இலக்கியங்களின் சிறப்புகள் குறித்து பேசினார்.

    விழாவில் கலந்து கொண்ட 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்தாளர் ஜெய்சங்கர் எழுதிய தேர்வு ரசிப்பபோம், மதிப்பெண் குவிப்போம் புத்தகம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண் டனர்.முடிவில் பள்ளி மாணவி விஜயகுமாரி நன்றி கூறினார்.

    • முகாம் அமைத்து கண்காணிப்பு
    • பொதுமக்கள் அச்சம்

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள துரிஞ்சிகுப்பம் பகுதியில் ஒற்றைக் கொம்புடைய யானை ஒன்று நேற்று முன்தினம் இரவு முதல் சுற்றி திரிந்து வருகிறது.

    இந்த ஒற்றை கொம்பு யானையை கண்ட அப்பகுதி மக்கள் செங்கம் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

    இதை தொடர்ந்து துரிஞ்சிகுப்பம் பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றைக்கொம்பு யானையை கண்காணித்து வருகின்றனர். மேலும் துரிஞ்சிகுப்பம், கல்லாத்தூர், ஊர்கவுண்டனூர் உள்ளிட்ட பகுதி பொதுமக்களுக்கு டாம்டாம் மூலம் இரவு நேரங்களில் வெளியில் வரக்கூடாது எனவும் ஒற்றைக் கொம்பு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் இந்த ஒற்றைக் கொம்பு காட்டு யானை ஜவ்வாதுமலை பகுதியில் கடந்த 10 வருடங்களாக சுற்றி வருவதாகவும் குறிப்பாக ஆலங்காயம், ஜமுனாமரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 வருடங்களாக சுற்றி வந்துள்ளது. மேலும் தற்போது முதல் முறையாக செங்கத்தை ஒட்டி உள்ள ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள துரிஞ்சிகுப்பம் பகுதிக்கு இந்த ஒற்றை கொம்பு யானை வழித்தடம் மாறி வந்துள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் செங்கம் வனத்துறை ரேஞ்சர் பழனிசாமி தலைமையில் வனத்துறை அலுவலர்கள் துரிஞ்சிகுப்பம், கல்லாத்தூர், ஊர்கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் முகாம் அமைத்து ஒற்றைக்கொம்பு யானையை கண்காணித்து வருகின்றனர்.

    • ஜோதி எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தினார்
    • பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    செய்யாறு:

    செய்யாறு டவுன் ஆரணி கூட்டு ரோட்டில் திருவண்ணாமலை மாவட்டம் யாதவ கூட்டமைப்பு செய்யாறு தொகுதி சார்பில் முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் 265 வது குருபூஜை விழா நடைபெற்றது.

    சிறப்பு விருந்தினராக ஜோதி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அழகு முத்து கோன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், நகர செயலாளர் வழக்கறிஞர் விஸ்வநாதன், வெம்பாக்கம் ஒன்றி குழு தலைவர் ராஜி, ஒன்றிய செயலாளர் திராவிட முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு எம்எல்ஏ ஜோதிஇனிப்புகள் வழங்கியும், அன்னதானமும் வழங்கினார்.

    • ஒருவர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அடுத்த சென்னாத்தூர் லாடவரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சம்பத் இவரது மனைவி ஜெயந்தி இவர்களுக்கு அருண்குமார், ராஜ்குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    மேலும் கடந்த 6-ந்தேதி சம்பத் ஜெயந்தி ஆரணியில் மளிகை பொருட்கள் வாங்கிக்கொண்டு தன்னுடைய பைக்கில் கிராமத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஆற்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் இவர்கள் ஓடி வந்த பைக் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் ஜெயந்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ஜெயந்தி இறந்துவிட்டார். இதில் சம்பத் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    இதுகுறித்து ஆரணி தாலுக்கா போலீசில் சம்பத் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபூதின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • ரூ.25 ஆயிரம் அபராதம்
    • திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு

    திருவண்ணாமலை:

    கலசபாக்கம் அடுத்த வெளுங்கனந்தல் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் துணை ராணுவத்தில் பணியாற்றியவர். இவரது மனைவி பரிமளா, இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இவர்களது இளைய மகன் வினோத்குமார் கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி அதே பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்றவர் திடீரென மாயமானார். அவரை பல இடத்தில் தேடியும் கிடைக்காததால் அது குறித்து ராமகிருஷ்ணன் கலசபாக்கம் போலீசில் தனது மகனை காணவில்லை என்று புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த சமயத்தில் ராமகிருஷ்ணனின் செல்போன் எண்ணிற்கு மர்ம நபர்கள் பேசி வினோத்குமாரை கடத்தி வைத்திருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் மாயமான வினோத்குமாருடன் பள்ளியில் படித்து வந்த வெளுங்கனந்தல் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவரது மகன் ராமசந்திரன் என்பவர் தான் வினோத்குமாரை பள்ளியில் இருந்து அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து ராமசந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவரது தாயார் சாந்தி தான் அழைத்து வர சொன்னதாக அவர் கூறினார்.

    பின்னர் போலீசார் சாந்தியிடம் விசாரணை நடத்தியதில், அவருக்கு பல லட்சம் ரூபாய் கடன் இருந்ததால் வினோத்குமாரை பணம் பறிக்கும் நோக்கத்தில் கடத்தியதும், போலீசார் விசாரணை நடத்துவதை அறிந்ததும் போலீசில் மாட்டி கொள்ளக் கூடாது என்று அச்சிறுவனை கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்ததையும் ஒப்பு கொண்டார். இதையடுத்து சாந்தியையும், அவரது மகன் ராமசந்திரனையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் சாந்தியின் உறவினர் நண்பர்கள் சென்னையை சேர்ந்த சுபாஷ், பசுபதி ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    மேலும் வினோத்குமார் கொலை சம்பவத்தின் போது ராமசந்திரனுக்கு 15 வயது என்பதால் அவரது வழக்கு விசாரணை திருவண்ணாமலை சிறார் நீதிமனறத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் நேற்று இவ்வழக்கை விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜமுனா தீர்ப்பு கூறினார். அதில் சிறுவன் வினோத்குமாரை கடத்தில் கொலை செய்த குற்றத்திற்காக சாந்திக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் சுபாஷ் மற்றும் பசுபதி மீது போதிய சாட்சியங்கள் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து சாந்தி பலத்த போலீஸ் காவலுடன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • 3 பேர் கைது
    • பரபரப்பு வாக்குமூலம்

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே மாயமான வாலிபரை அடித்து கொலை செய்து கிணற்றில் வீசிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வந்தவாசி அடுத்த பையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவன் (வயது 24). இவர் கடந்த 10-ந் தேதி கீழ்ப்பாக்கம் கிராமத்தில் சென்று விட்டு இரவு பைக்கில் புறப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது உறவினர்கள் கீழ்க்கடுங்காலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இந்த நிலையில் தேவனின் பைக், செல்போன், செருப்பு ஆகியவை சாத்தனூர் கூட்டுச்சாலை அருகே சாலையோரம் கிடந்துள்ளது. அருகில் ரத்தக்கரை இருந்ததால் போலீசார் தேவனை தீவிரமாக தேடி வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து கீழ்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (35), கோகுல்ராஜ் (22), கொவளை கிராமத்தைச் சேர்ந்த சேகர் (21) ஆகிய 3 பேரும் சேர்ந்து தேவனை கொலை செய்து விளாங்காடு கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் உடலை வீசியது போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கீழ்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தேவனின் உறவினர் வடிவேலு. இவருக்கு இதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் குடும்பத்தினரிடம் ஏலச்சீட்டு பணம் தர வேண்டுமாக கூறப்படுகிறது.

    தேவனை கடந்த 10-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை கீழ் பாக்கத்துக்கு வரவழைத்த‌ வடிவேலு தேவனை அழைத்துக் கொண்டு கார்த்திக் வீட்டிற்கு சென்று சீட்டு பணம் கேட்டுள்ளார்.

    அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை எடுத்து தேவன் இரவு பைக்கில் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார். இவரை பின்தொடர்ந்து வந்த கார்த்திக், கோகுல்ராஜ், சேகர் ஆகியோர் தேவனை வழிமடக்கி கொலை செய்து கிணற்றில் வீசி உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் போலீசிடம் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் வேலூர் டி.ஐ.ஜி. ஆனி விஜயா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஷ் கண்ணன் (வேலூர்), தீபா சத்யன் (ராணிப்பேட்டை), சுதாகர் (காஞ்சிபுரம்) ஆகியோர் தலைமையில் வந்தவாசி மற்றும் கீழ் கொடுங்காலூர், பையூர், கீழ்பாக்கம், கொவளை ஆகிய கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    கொலை செய்யப்பட்ட தேவனின் குடும்பத்துக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என் மன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்பினர் நேற்று காலை முற்றுகையிட்டனர். உரிய நிவாரணம் வழங்காமல் விட்டால் தேவனின் உடலை வாங்க மாட்டோம் எனவும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

    இந்த நிலையில் பையூர் கிராமத்திற்கு நேற்று பிற்பகல் நேரில் சென்று செய்யாறு கோட்டாட்சியர் வினோத்குமார் தேவனின் குடும்பத்துக்கு முதற்கட்டமாக ரூ. 6 லட்சத்திற்கான காசோலை மற்றும் அரிசி மளிகை பொருட்கள் ஆகியவற்றை நிவாரணமாக வழங்கினர்.

    • இன்று அதிகாலை பவுர்ணமி தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
    • கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    மாதந்தோறும் வரும் பவுர்ணமி மட்டுமின்றி முக்கிய விஷேச நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    ஆனி மாதத்திற்கான பவுர்ணமி இன்று (புதன்கிழமை) அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.52 மணிக்கு நிறைவடைகிறது.

    இன்று அதிகாலை பவுர்ணமி தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது. நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

    சென்னை, வேலூர் உள்பட முக்கியமான நகரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    • உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் குன்றுமேடு பகுதியை சேர்ந்தவர். கட்டிட மேஸ்திரி. இவரது மகன் தமிழ்ச்செல்வன் (19) தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த மாதங்களாக தமிழ்ச்செல்வனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிக்கை பெற்று வந்தார்.

    சிகிச்சை பெற்றும் பலனில்லை. இதனால் கடந்த 4ம்தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். தமிழ்செல்வனை விட்டார். சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துவிட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கண்ணமங்கலம் போலீசில் கணேசன் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • நந்திபகவானுக்கு தீபாராதனை நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை நந்திபகவானுக்கு பிரதோஷ வழிபாடு முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து பிரதோஷ நாயகர் நந்தி வாகனத்தில் உட்பிரகார உலா சிவகான பேரிகை முழங்க நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதேபோல் கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோவிலில் நந்திபகவானுக்கு பிரதோஷ வழிபாடு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. மேலும் நந்தி வாகனத்தில் சாமி உட்பிரகார உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 15 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    புதுப்பாளையம்:

    புதுப்பாளையம் அடுத்த புதுப்பாளையம் முதல் திருவண்ணாமலை செல்லும் வழியான காஞ்சி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் குட்கா மற்றும் புகையிலை விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போளூர் டி.எஸ்.பி குமார் மேற்பார்வையில் கடலாடி போலீசார் சென்று கடையில் சோதனை செய்தனர். அங்கு சுமார் 15 கிலோ குட்கா மற்றும் புகையிலை இருந்தது தெரியவந்தது.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதனைத் தொடர்ந்து மற்ற பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    ×