என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • பல்வேறு திட்டப்பணிகளை பார்வையிட்டார்
    • சொத்து சீராய்வு குறித்து ஆலோசனை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பேரூராட்சியில் நேற்று 15ம்தேதி வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜீஜாபாய் வருகை தந்து பல்வேறு திட்டப்பணிகளை பார்வையிட்டார்.

    மேலும் பிடாரி அம்மன் குளம் சீரமைப்பு, கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி, சொத்து வரி சீராய்வு செய்ய அளவீடு பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், துணை தலைவர் குமார், செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • ஏழைகளுக்கு உணவுப் பொட்டலம் மற்றும் குடிநீர் பாட்டில் வழங்கினர்
    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உதவும் கரங்கள் அமைப்பு சார்பில், செய்யாறு நகர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர், பிச்சைக்காரர், ஆதரவற்றோர் மற்றும் வறுமையில் பசியால் வாடுபவர்களைக் கண்டறிந்து அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று நாள்தோறும் உதவும் கரங்கள்அமைப்பு சார்பில் இலவசமாக உணவுப் பொட்டலம் மற்றும் குடிநீர் பாட்டல் வழங்கும் விதமாக அமுதசுரபி என்கின்ற இலவச அன்னதான திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

    செய்யாறு ஸ்ரீசக்தி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செய்யாறு உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் தி.எ.ஆதிகேசவன் தலைமை தாங்கினார். திருவத்திபுரம் நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பார்வதி சீனுவாசன், ஒன்றியக்குழுத் தலைவர் என்.வி.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு விருந்தினர்களாக செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் எம்.எஸ்.தரணிவேந்தன், ஒ.ஜோதி, எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்று தலா ரூ.2 ஆயிரம் வீதம் செலுத்தி திட்டத்தின் புரவலராக இணைத்துக் கொண்டு அமுதசுரபி அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்து ஏழைகளுக்கு உணவுப் பொட்டலம் மற்றும் குடிநீர் பாட்டில் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் கே.ரகுராமன், கவுன்சிலர்கள் ஆர்.கே. விஸ்வநாதன், ஞானவேல், சிட்டிபாபு, வழக்கறிஞர் ஜான்பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தொண்டு நிறுவன நிர்வாகிகள் சி.ரவிபாலன், ஜெ.சண்முகம், டி.பி.சரவணன், அன்னதான திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கா.முருகன், ஆர்.காந்தி, எஸ்.சம்பத், த.சுரேஷ் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

    • கலெக்டர் மாணவர் விடுதியில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு
    • ஆவணங்களை பராமரிக்கவில்லை என்று குற்றச்சாட்டு

    திருவண்ணாமலை:

    கலசபாக்கத்தில் அரசு ஆதி திராவிடர் மாணவர்கள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் வார்டனாக ரவி என்பவர் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் இந்த மாணவர் விடுதியில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விடுதியில் சேர்க்கப்பட்டுள்ள 23 மாணவர்களில் 13 மாணவர்கள் மட்டுமே விடுதியில் தங்கியிருந்து தெரிய வந்தது.

    மேலும் முறையான ஆவணங்களை விடுதியில் பராமரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விடுதியின் வார்டன் ரவியை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டு உள்ளார்.

    • வெளி ஆட்களை வைத்து திட்ட பணிகள் செய்வதாக குற்றச்சாட்டு
    • வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த பெரணாம்பாக்கம், கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் நடைபெறும் திட்டப் பணிகளை வெளி ஆட்களை வைத்து திட்ட பணிகள் செய்வதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் பணியாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வை ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் பெரணம்பாக்கம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நடைபெறும் திட்டப் பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் முருகனுக்கு தகவல் தெரிவிக்காமலும், மேலும் திட்ட பணிகளை 100 நாள் பணியாளர்களை வைத்து செய்யாமல் வெளி ஆட்களை வைத்து செய்வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் முருகன் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் முருகன், தலைமையில் 100 நாள் பணியாளர்கள் 50க்கும் மேற்பட்ட பெண்கள் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் 100 நாள் பணியாளர்கள் கூறுகையில் எங்களுக்கு கூலி சரிவர வழங்குவது கிடையாது, நடைபெற்று வரும் திட்டப் பணிகளை வெளி ஆட்கள் வைத்து திட்டப்பணிகள் செய்து வருகின்றனர், என்று கூறினர். பின்னர் தகவல் அறிந்து சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால், சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது அவரிடம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், மற்றும் 100 நாள் பணியாளர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் இதுகுறித்து பணி மேற்பார்வையாளர், மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    இதையடுத்து அங்கிருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.இதனால் சிறிது நேரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

    • நிதியை முறைகேடு செய்வதாக பல்வேறு புகார் வந்தது
    • பள்ளி மாணவனுக்கு அறிவுரை வழங்கினார்

    திருவண்ணாமலை:

    கலசபாக்கம் யூனியனில் 45 பஞ்சாயத்துகள் உள்ளன இந்த பஞ்சாயத்துகளில் நூறு நாள் திட்டத்தின் கீழ் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குளம் தூர்வாருதல் ஏரி கரை பலப்படுத்துதல் கழிவு நீர் கால்வாய் சுத்தப்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்கள் சரியான முறையில் ஈடுபடுத்தப்படாமலும் மேலும் வெளியூர் சென்றுள்ள நபர்கள் மீது பொய்யாக கணக்கு காட்டி தமிழக அரசின் நிதியை முறைகேடு செய்வதாக உட்பட பல்வேறு புகார்கள் வந்தாக கூறப்படுகிறது.

    இதனை அடுத்து கலசப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் அன்பரசிராஜசேகரன், பீ.டி.ஓ கோவிந்தராஜுலு ஆகியோர் பாடகம் கிராமத்தில் நடைபெற்ற 100 நாள் பணியினை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு நூறு நாள் பணியில் 71 பேர் ஈடுபட்டிருந்தனர்.

    இதில் வருகை பதிவேட்டின் படி ஆய்வு செய்தபோது 23 பேர் வருகை பதிவேட்டின் படியும் 34 பேர் பணி செய்யும் இடத்தில் இல்லாமலும் 14 பேர் மற்றவர்களுக்காக வந்திருந்ததும் தெரியவந்தது. இதனால் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க வேண்டும் இல்லையென்றால் துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆவணம் செய்யப்படும் என தெரிவித்தார்.

    அப்போது 18 வயது ஆகாத ஒரு சிறுவனும் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தான் அவனிடம் யூனியன் சேர்மன் உன் பெயரில் நூறு நாள் அட்டை உள்ளதா என்று கேட்டபோது இல்லை நான் எனது அக்காவிற்கு பதிலாக வந்து உள்ளேன் நான் பள்ளியில் படிக்கிறேன் என்று கூறியதும் வேதனை அடைந்த சேர்மன் தயவு செய்து படிக்கும் வயதில் படிப்பை மட்டும் பார் என்று அறிவுரை வழங்கினார்.

    • செய்யாறில் ஜோதி எம்.எல்.ஏ. ஆய்வு
    • அதிகாரிகளுக்கும், ஆலோசனை வழங்கினார்

    செய்யாறு:

    செய்யாறு டவுன், ஆற்காடு சாலையில் செயல்பட்டு வரும், பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் ரூ.3.25 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் விருந்தினர் தங்கும் விடுதி கட்டிடப் பணியினை ஜோதி எம்எல்ஏ நேற்று ஆய்வு செய்தார்.

    கட்டிட வரைபடத்தினை பார்வையிட்டு அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் ஆலோசனை வழங்கினார். ஆய்வின் போது கோட்ட பொறியாளர் பிரமிளா, ஒப்பந்ததாரர்கள் கதிரவன், குமரவேல், கோபி மற்றும் ஒன்றிய செயலாளர் ஞானவேல், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரேசன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

    • மூலவர் மற்றும் நந்தியம்பெருமானுக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் உடையான்குன்றில் பழமையான காட்டுக்குன்றீசுவரர் கோவில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதை முன்னிட்டு 13ம்தேதி புதன்கிழமை காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன், மாலை யாகசாலை பிரவேசம், முதல் கால யாகபூஜைகளும் நடந்தது.இரவில் அஷ்டபந்தன சாற்றுதலும், நேற்று வியாழக்கிழமை காலை கோபூஜை, இரண்டாம் கால யாகபூஜைகளும் நடைபெற்றது. தொடர்ந்து விமான கலச கும்பாபிஷேகம் மூலவர் மற்றும் நந்தியம்பெருமானுக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது.பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி, கொளத்தூர் முன்னாள் தலைவர் சரவணன், கண்ணமங்கலம் பேரூராட்சி முன்னாள் தலைவர் கோவர்த்தனன், விண்ணமங்கலம் ரவி, மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் மோகன், திருநாவுக்கரசு, அன்பரசு, முருகன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.

    • சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்
    • மாதர் சங்கத்தினர் சிறுமிக்கு பாராட்டு

    ஆரணி :

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பையூர் கிராமத்தை சேர்ந்த இன்ஜினியர் மணிகண்டன் பல் மருத்துவர் சவிதா தம்பதியினருக்கு தீஷ்ணா (3) ஸ்வதிக்கா 11 மாத கைக்குழந்தை உள்ளது.

    மணிகண்டன் சவிதா தம்பதியினர் தன்னுடைய தாய் முருவாம்பாளுடன் ஓரே குடும்பமாக வசித்து வருகின்றனர்.

    இதில் 3 வயது சிறுமி தீஷ்ணா தனி திறமையுடனும் சுறுசுறுப்பாகவும் இருந்துள்ளார்.

    சுமார் 76 விலங்குகள் 30 பறவைகள் உள்ளிட்ட 120 விலங்குகளை 1 நிமிடம் 14 விநாடிகளிலும் 51 மருந்து உபகரணங்கள் 2 நிமிடத்தில் டிவி மற்றும் லேப்டாப்பில் பார்த்து சரளமாக சொல்லி அசத்தி வருகின்றார்.

    இதனை கலாம் வேல்டு ரெக்கார்டு மற்றும் இண்டியன் புக்ஸ் ஆப் ரெக்கார்டு ஆகிய நிறுவனங்கள் சிறுமி தீஷ்னாவின் இந்த செயலை கண்டு வியப்படைந்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க பதிவு செய்து 3 வயது சிறுமிக்கு உலக சாதனை விருது வழங்கி கவுரவித்தனர்.

    இந்த விருதை பெற்ற தீஷ்னாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மிகவும் மிகழ்ச்சியடைந்து ள்ளதாகவும் எங்கள் குடும்பத்திற்கு பெருமைசேர்த்து ள்ளாகதாவும் என்று ஆனந்த கண்ணீருடன் தெரிவித்தனர்.

    இன்னும் பள்ளி படிப்பை ஆரம்பிக்காமலேயே விலங்குகள் மற்றும் மருந்து

    உபகரணங்கள் பெயரை சரளமாக சொல்லி அசத்தும் சிறுமி வருங்காலத்தில் உயரிய பதவிக்கு வரவேண்டும் என்றும் மேலும் பல உலக சாதனைகளை படைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் மாதர் சங்கத்தினர் சிறுமிக்கு பாராட்டுகள் தெரிவித்து வாழ்த்தி வருகின்றனர்.

    • ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது பழங்குடியின மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • 10 சாமி சிலைகளும் 200 ஆண்டு பழமை வாய்ந்த ஐம்பொன்னால் ஆன சிலைகள் ஆகும்.

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி அருகில் மலமஞ்சனூர் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குருமன்ஸ் இன பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குலதெய்வமான வீரபத்திர சுவாமியை வணங்கி வருகின்றனர்.

    மலமஞ்சனூர் கிராமத்தில் உள்ள பச்சையம்மன் கோவில் அருகில் மலை ஒன்று உள்ளது. இந்த மலை மீதுதான் குருமன்ஸ் இன மக்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வீரபத்திர சுவாமிக்கு விழா எடுப்பது வழக்கம். இந்த விழாவிற்கான சாமிசிலைகளை அங்குள்ள பாறையின் குகைப் பகுதியில் பத்திரமாக வைத்திருப்பார்கள். மூன்றாண்டுக்கு ஒருமுறை அதை எடுத்து ஆற்றில் நீராட்டி பின்னர் பூஜைக்கு கொண்டு வந்து கொண்டாடுவார்கள். அப்படி இவர்கள் சாமி கும்பிடுவதற்காக பாறை குகையில் 2 அடி உயரமுள்ள வீரபத்திரசாமி, சிவன், பார்வதி போன்ற 10 சாமி சிலைகள்வைத்திருந்தனர்.

    இந்த 10 சாமி சிலைகளும் 200 ஆண்டு பழமை வாய்ந்த ஐம்பொன்னால் ஆன சிலைகள் ஆகும்.

    தற்போது இவர்கள் விழா கொண்டாடுவதற்காக பாறை குகையில் வைத்திருந்த சிலையை எடுக்க சென்ற போது சிலைகளை காணவில்லை.

    இதுகுறித்து கோவில் நிர்வாகி ஆவுடையான் தானிப்பாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐம்பொன் சிலைகளை திருடிச்சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.

    200 ஆண்டு பழமை வாய்ந்த ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது பழங்குடியின மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு போளூர் சாலையில் உள்ள நிர்மலா நகர் பகுதியில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சேத்துப்பட்டு வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையம். புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    இந்த கட்டிடத்தை கடந்த 9-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடம் வளாகத்தில் திருவண்ணாமலை மாவட்டவேளாண் துணை இயக்குனர் (நுண்ணீர் பாசனம்) சேத்துப்பட்டு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நாராயணமூர்த்தி, சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால், வேளாண்மை அலுவலர் இலக்கிய, ஆகியோர் மரக்கன்று, அலுவலகத்தில் இனிப்பு, வழங்கினர்.

    நிகழ்ச்சியில் சேத்துப்பட்டு பேரூராட்சி மன்ற தலைவர் சுதா முருகன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் திலகவதி செல்வராஜன், ஆரணி வேளாண்மை செயற்பொறியாளர் கிருஷ்ணன், மற்றும் மேலாண்மை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீசில் தாய் புகார்
    • வாலிபர் போக்சோவில் கைது

    ஆரணி:

    ஆரணி பகுதியில் சேர்ந்த 16 வயதுடைய மாணவி அப்பகுதியில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த அரிகரன்(23) என்பவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மாணவி தனது தாயாரிடம் சம்பவம் பற்றி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவியின் தாயார் ஆரணி நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து அரிகரனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • சிறப்பு கண்காட்சியை மாணவிகள் பார்வையிட்டனர்
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்.

    போளூர்:

    போளூர் பேரூராட்சி சார்பில் தூய்மை பணி வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    போளூர் பேரூராட்சியில் செயற்பொறியாளர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். பேரூராட்சியின் செயலாளர் முகமது ரிஜ்வான் அனைவரையும் வரவேற்றார். போளூர் பேரூராட்சியின் தலைவர் ராணி சண்முகம் கொடி அசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    இந்தத் தூய்மை பணி ரத ஊர்வலம் போளூர் முக்கிய வீதிகள் வழியாக பஜார் வீதி செந்தாரப்பட்டி தெரு பஸ் நிலையம் போன்ற வழியாக சென்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அடைந்தது.

    பின்னர் பேரூராட்சியின் திட்டக் குழு மேலாண்மை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கண்காட்சி போளூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பார்வையிட்டனர்.

    இதில் பேரூராட்சி மன்ற தலைவர் தூய்மைப்பணி குறித்து மாணவிகளுக்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுதா, போளூர் பேரூராட்சியின் துணைத் தலைவர் சாந்தி நடராஜன், மல்லிகா கிருஷ்ணமூர்த்தி, ஜோதி குமரன், ரங்கதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×