என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Inauguration of Amudasurabi free food donation scheme"

    • ஏழைகளுக்கு உணவுப் பொட்டலம் மற்றும் குடிநீர் பாட்டில் வழங்கினர்
    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உதவும் கரங்கள் அமைப்பு சார்பில், செய்யாறு நகர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர், பிச்சைக்காரர், ஆதரவற்றோர் மற்றும் வறுமையில் பசியால் வாடுபவர்களைக் கண்டறிந்து அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று நாள்தோறும் உதவும் கரங்கள்அமைப்பு சார்பில் இலவசமாக உணவுப் பொட்டலம் மற்றும் குடிநீர் பாட்டல் வழங்கும் விதமாக அமுதசுரபி என்கின்ற இலவச அன்னதான திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

    செய்யாறு ஸ்ரீசக்தி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செய்யாறு உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் தி.எ.ஆதிகேசவன் தலைமை தாங்கினார். திருவத்திபுரம் நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பார்வதி சீனுவாசன், ஒன்றியக்குழுத் தலைவர் என்.வி.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு விருந்தினர்களாக செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் எம்.எஸ்.தரணிவேந்தன், ஒ.ஜோதி, எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்று தலா ரூ.2 ஆயிரம் வீதம் செலுத்தி திட்டத்தின் புரவலராக இணைத்துக் கொண்டு அமுதசுரபி அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்து ஏழைகளுக்கு உணவுப் பொட்டலம் மற்றும் குடிநீர் பாட்டில் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் கே.ரகுராமன், கவுன்சிலர்கள் ஆர்.கே. விஸ்வநாதன், ஞானவேல், சிட்டிபாபு, வழக்கறிஞர் ஜான்பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தொண்டு நிறுவன நிர்வாகிகள் சி.ரவிபாலன், ஜெ.சண்முகம், டி.பி.சரவணன், அன்னதான திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கா.முருகன், ஆர்.காந்தி, எஸ்.சம்பத், த.சுரேஷ் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

    ×