என் மலர்
உள்ளூர் செய்திகள்

காட்டுக்காநல்லூர் குன்றீசுவரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
காட்டுக்காநல்லூர் குன்றீசுவரர் கோவில் கும்பாபிஷேகம்
- மூலவர் மற்றும் நந்தியம்பெருமானுக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் உடையான்குன்றில் பழமையான காட்டுக்குன்றீசுவரர் கோவில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு 13ம்தேதி புதன்கிழமை காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன், மாலை யாகசாலை பிரவேசம், முதல் கால யாகபூஜைகளும் நடந்தது.இரவில் அஷ்டபந்தன சாற்றுதலும், நேற்று வியாழக்கிழமை காலை கோபூஜை, இரண்டாம் கால யாகபூஜைகளும் நடைபெற்றது. தொடர்ந்து விமான கலச கும்பாபிஷேகம் மூலவர் மற்றும் நந்தியம்பெருமானுக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது.பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி, கொளத்தூர் முன்னாள் தலைவர் சரவணன், கண்ணமங்கலம் பேரூராட்சி முன்னாள் தலைவர் கோவர்த்தனன், விண்ணமங்கலம் ரவி, மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் மோகன், திருநாவுக்கரசு, அன்பரசு, முருகன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.