என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலசப்பாக்கம் பகுதியில் 100 நாள் திட்டப் பணிகளை ஒன்றிய குழு தலைவர் ஆய்வு
- நிதியை முறைகேடு செய்வதாக பல்வேறு புகார் வந்தது
- பள்ளி மாணவனுக்கு அறிவுரை வழங்கினார்
திருவண்ணாமலை:
கலசபாக்கம் யூனியனில் 45 பஞ்சாயத்துகள் உள்ளன இந்த பஞ்சாயத்துகளில் நூறு நாள் திட்டத்தின் கீழ் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குளம் தூர்வாருதல் ஏரி கரை பலப்படுத்துதல் கழிவு நீர் கால்வாய் சுத்தப்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்கள் சரியான முறையில் ஈடுபடுத்தப்படாமலும் மேலும் வெளியூர் சென்றுள்ள நபர்கள் மீது பொய்யாக கணக்கு காட்டி தமிழக அரசின் நிதியை முறைகேடு செய்வதாக உட்பட பல்வேறு புகார்கள் வந்தாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து கலசப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் அன்பரசிராஜசேகரன், பீ.டி.ஓ கோவிந்தராஜுலு ஆகியோர் பாடகம் கிராமத்தில் நடைபெற்ற 100 நாள் பணியினை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு நூறு நாள் பணியில் 71 பேர் ஈடுபட்டிருந்தனர்.
இதில் வருகை பதிவேட்டின் படி ஆய்வு செய்தபோது 23 பேர் வருகை பதிவேட்டின் படியும் 34 பேர் பணி செய்யும் இடத்தில் இல்லாமலும் 14 பேர் மற்றவர்களுக்காக வந்திருந்ததும் தெரியவந்தது. இதனால் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க வேண்டும் இல்லையென்றால் துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆவணம் செய்யப்படும் என தெரிவித்தார்.
அப்போது 18 வயது ஆகாத ஒரு சிறுவனும் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தான் அவனிடம் யூனியன் சேர்மன் உன் பெயரில் நூறு நாள் அட்டை உள்ளதா என்று கேட்டபோது இல்லை நான் எனது அக்காவிற்கு பதிலாக வந்து உள்ளேன் நான் பள்ளியில் படிக்கிறேன் என்று கூறியதும் வேதனை அடைந்த சேர்மன் தயவு செய்து படிக்கும் வயதில் படிப்பை மட்டும் பார் என்று அறிவுரை வழங்கினார்.