என் மலர்
நீங்கள் தேடியது "மாணவர்கள் குறைவாகவே இருந்தனர்"
- கலெக்டர் மாணவர் விடுதியில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு
- ஆவணங்களை பராமரிக்கவில்லை என்று குற்றச்சாட்டு
திருவண்ணாமலை:
கலசபாக்கத்தில் அரசு ஆதி திராவிடர் மாணவர்கள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் வார்டனாக ரவி என்பவர் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் இந்த மாணவர் விடுதியில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விடுதியில் சேர்க்கப்பட்டுள்ள 23 மாணவர்களில் 13 மாணவர்கள் மட்டுமே விடுதியில் தங்கியிருந்து தெரிய வந்தது.
மேலும் முறையான ஆவணங்களை விடுதியில் பராமரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விடுதியின் வார்டன் ரவியை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டு உள்ளார்.






