என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • ஒரு கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாலுகா போலீசார் நேற்று மல்லவாடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பைக்கிள் வந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தீவிர சோதனை நடத்தினர். விசாரணையில் அவர் மல்லவாடி பகுதியைச் சேர்ந்த குப்பன் (வயது 23), என்பது தெரிய வந்தது. அவர் ஒரு கிலோ எடையுள்ள கஞ்சாவை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதனை அடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • மேய்ச்சலுக்கு சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே உள்ள வடகாது அத்திமூர் ஏழுமலை மகன் குரு நிலத்தில் நேற்று காலை அவ்வழியே மேய்ச்சலுக்கு வந்த காட்டெருமை மின் சாரம் தாக்கி இறந்தது.

    இது குறித்து தகவலறிந்த போளூர் வனத்துறை அலுவலர் குமார், கிராம நிர்வாக அலுவலர் இளையகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் கால்நடை மருத்துவர் டாக்டர் ராஜ்குமார் மற்றும் குழுவினர் பிரேத பரிசோதனை நடத்தினர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • மின் கம்பத்தில் மோதியது
    • தீயணைப்பு துறையினர் வெடிப்பொருட்களை பத்திரமாக மீட்டனர்

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே கல்குவாரிகளுக்கு பாறைகளை வெடிக்க பயன்படுத்தும் பொருட்களான ஜெலட்டின் குச்சிகள் ஏற்றி வந்த வேன் சிப்காட் வளாக பகுதி சாலையின் நடுவே மின்விளக்கு கம்பத்தில் மோதி தலைகுப்புற கவிந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் வேன் டிரைவர் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா சித்தாமூர் கிராமத்தை சேர்ந்த ராஜா (49) சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இது குறித்து தகவல் அறிந்து தூசி போலீசார் மற்றும் செய்யார் தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெடிப்பொருட்களை பத்திரமாக மீட்டனர்.

    பின்னர் டிரைவரிடம் விசாரித்த போது செய்யார் பகுதியில் உள்ள கல்குவாரிகளுக்கு செங்கல்பட்டு தாலுகாவில் இருந்து 95 பெட்டிகளில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 19 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகளை ஏற்றி வந்தது தெரியவந்தது.

    • காதலன் திருமணம் செய்யாததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கல்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகள் மௌனிகா (வயது 19).

    இவர் கண்ணமங்கலம் பகுதியில் உள்ள தனியார் ஜவுளி கடையில் வேலை செய்து வந்தார். கல்லூரி படிப்பு படித்த போது வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இரு வீட்டில் பேசி திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் வாலிபர் தனது அக்காவின் திருமணம் முடிந்தபின், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என தாமதம் செய்து வந்தார்.

    கடந்த 13-ந் தேதி வாலிபர் வீட்டுக்கு சென்ற மௌனிகா திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். ஆனால் அவர் மறுத்து தனது அக்காவின் திருமணம் முடிந்தபின் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து மெளனிகா விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    பின்னர் மௌனிகாவை சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்துவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக மௌனிகாவின் தாயார் சாந்தி கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழுகையிலும் கலந்து கொண்டார்
    • அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த கேட்டவாரம்பாளையம் கிராமத்தில் உள்ள மசூதியில் நேற்று சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வருகை தந்து ஆய்வு செய்தார். பின்பு அங்கு நடைபெற்ற தொழுகையிலும் கலந்து கொண்டு இஸ்லாமிய மக்களிடையே குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்றார்.

    பின்னர் இதைத் தொடர்ந்து, காந்தபாளையம், வீரளூர், கீழ்பாலூர், கடலாடி, எர்ணமங்கலம், மோட்டூர், கலசப்பாக்கம், ஆகிய இடங்களில் அங்குள்ள மசூதிகளுக்கு நேரில் சென்று அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்றனர்.

    அப்போது இஸ்லாமியர் மசூதியை அரசாங்கத்தில் சரியான முறையில் பதிவீடு செய்து உள்ளீர்களா? மேலும் அரசு வழங்கும் திட்டங்கள் வருகிறதா இல்லையென்றால் அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார். அப்போது உடன் கலசப்பாக்கம் தி. பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ., ஒன்றிய குழு தலைவர் அன்பரசிராஜசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • 2 பேர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊத்தூர், கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், வயது 65 விவசாயி.

    இவரது மனைவி சரோஜா, இவர்களது பேத்தி நிஷா, ஆகியோர் பத்தியாவரம் ஊத்தூர் கிராமத்திற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது. இதில் ராஜேந்திரன், சரோஜா, நிஷா, ஆகியோர் கிழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் இவர்களை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜேந்திரன், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தர்.

    சரோஜா, நிஷா, ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ் ஜெயகுமார், வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றார்.

    • ரூ.1 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்தது வருகிறது
    • 2 இடங்களில் புதிதாக விடுதி கட்ட மனு

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் கட்டப்படும் பள்ளி கட்டிடத்தினை அதன் தலைவர் மதிவாணன் நேற்று பார்வையிட்டார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் செயல்பாடு எப்படி மாணவர்களின் கல்வித் திறன் எப்படி உள்ளது மேலும் கட்டிடத்தின் வசதிகள் குறித்து புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடங்கள் பார்வையிடுவதற்காக இங்கு வந்துள்ளேன்.

    தற்போது பட்டறை காடு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் ரூ.46 லட்சம் மதிப்பீட்டிலும் ஆட்டியானூர் பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 46 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பு வரை கொண்ட கட்டிடமும் அரசு பழங்குடியினர் நல ஒன்று உறைவிட உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் மூன்று வகுப்பறை கட்டிடம் ரூ. 51.60 லட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    மலைவாழ் மக்களின் வாழ்க்கை திறன் உயர்வதற்காக தாட்கோ மூலம் கடனுதவி பெறுவதற்காக வரும் செவ்வாய்க்கிழமை ஜமுனாமரத்தூர் யூனியன் அலுவலகத்தில் சரவணன் எம்.எல்.ஏ. தலைமையில் அனைத்துப் பகுதி மக்களையும் அழைத்து விழிப்புணர்வு கூட்டம் போடப்பட்டு அதன் மூலம் யார் யாருக்கு என்னென்ன தொழில் செய்ய வேண்டுமோ அவர்களுக்கெல்லாம் வங்கிகள் மூலம் 50 சதவீத மானியத்தில் கடன் உதவி அளிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளேன்.

    மேலும் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் மற்றும் மாவட்டத்தின் அமைச்சர் எ.வ.வேலுவிடமும் 2 இடங்களில் ஹாஸ்டல் புதிதாக கட்டுவதற்கும் மேலும் கூடுதலாக ஆசிரியர்களை நியமிப்பதற்கும் மனு கொடுத்து உடனடியாக பணிகளை செய்து முடிக்க உள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.

    ஆய்வின் போது எம்எல்ஏ சரவணன், வேலூர் மாவட்ட தாட்கோ செயற்பொறியாளர் சுதா, உதவி செயற்பொறியாளர்கள் இமாம்காசிம், கண்ணன், திருவண்ணாமலை மாவட்ட தாட்கோ மேலாளர் ஏழுமலை, யூனியன் சேர்மன் ஜீவா, துணைச் சேர்மன் மகேஸ்வரி, பிடிஓ பிரகாஷ் உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • வரதட்சணை கொடுமையால் இறந்ததாக குற்றச்சாட்டு
    • உறவினர்கள் சாலை மறியல்

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 28 ) இவருக்கு கடந்த 2 வருடத்திற்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா ஆயர்பாடி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகள் பூவரசி (22) பி.எஸ்.சி பட்டதாரி முடித்த பெண்ணுடன் திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.ஜெயக்குமார் பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஜெயக்குமார் தனது வீட்டில் பூவரசியுடன் இருந்து வந்துள்ளார். நேற்று குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

    மாலையில் பூவரசி வீட்டில் உள்ள அறையில் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அதன் பிறகு வீட்டின் அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கில் நிலையில் பூவரசி கிடந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பூவரசியை மீட்டபோது அவர் இறந்தது தெரியவந்தது. குறித்து தகவல் அறிந்த கலசப்பாக்கம் போலீசார் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து பூவரசின் தந்தை ஆறுமுகம் எனது மகள் வரதட்சணை கொடுமையால் துன்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    எனவே இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என இன்று காலை கலசப்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு முன்பு உறவினர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சமரசம் செய்து ஆர்டிஓ விசாரணைக்கு பிறகு தான் இது குறித்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கையில் ஈடுபட முடியும் என சமரசம் செய்து வைத்தனர்.

    இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாள் ஓன்றுக்கு சுமார் 300 லிருந்து 500 டன் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது
    • ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் களம்பூர் பகுதிகளில் சுமார் 200-கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன.

    5 சதவீதம் ஜி.எஸ்.டி இந்த அரிசி ஆலை தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    ஆரணியில் இருந்து உற்பத்தி செய்யும் அரிசி சென்னை பெங்களுரு கோயம்புத்தூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபட்டு வருகின்றன.

    நாள் ஓன்றுக்கு சுமார் 300 லிருந்து 500 டன் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்நிலையில் மத்திய அரசு அரிசிக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி வரியை அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் அரிசி உற்பத்தியாளர்கள் அரிசி வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கபடுவதாக தெரிவித்தனர்.

    200 ஆலைகள் மூடல் மேலும் மத்திய அரசை கண்டித்து இன்று ஆரணியில் சுமார் 200கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் அடைத்து இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தற்போது மத்திய அரசு அறிவித்திருக்கும் 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரி யால் அரிசி விலை உயர வாய்ப்புள்ளதாகவும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    • அம்பேத்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்
    • நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசி நகராட்சி க்குட்பட்ட பகுதி புதிய பஸ் நிலையம் அருகே நகர ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு சொந்தமான கட்டிடம் இதுவரை இல்லாத நிலையில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது.

    இதற்கு போதிய இட வசதி இல்லாததால் மருத்துவர்கள் நோயாளிகள் பெரும் சிரமப்பட்டு வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தேசிய நகர்ப்புற நல திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகர் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு வந்தவாசி திமுக அம்பேத்குமார் எம்.எல்.ஏ., திமுக மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு நகர ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்து பல்வேறு பூஜைகள் செய்தனர். விழாவில் திமுக மாவட்ட அவை தலைவர் கே ஆர் சீதாபதி நகர மன்ற தலைவர் ஜலால் நகர மன்ற துணைத் தலைவர் சீனிவாசன் ஒன்றிய செயலாளர் ராதா நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன் மருத்துவ அலுவலர் ஆனந்தன் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கை
    • ஓடை புறம்போக்கு

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள குப்பம் கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையான மேற்படி கிராம சர்வே எண்.62 ஓடை புறம்போக்கில் 0.82.0 பரப்பளவில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு அளவீடு செய்யப்பட்டு போளூர் தாசில்தார் சண்முகம், மண்டல துணை தாசில்தார் தட்சிணாமூர்த்தி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி, சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் உதயகுமார் கண்ணமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் குமார், குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் அனிதாமுரளி, சந்தவாசல் உள்வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

    • பதிவேடுகள் வழக்குகள் அதன் விவரங்கள் போன்றவற்றை கேட்டறிந்தார்
    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் நேற்று இரவு 7.20மணி அளவில் போளூர் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய எஸ்.பி. ஆக பொறுப்பேற்றுக் கொண்ட கார்த்திகேயன் கடந்த ஒரு மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக போளூர் போலீஸ் நிலையத்தில் திடீரென்று ஆய்வு செய்தார்.

    அப்போது இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் அவரை வரவேற்றனர்.

    போலீஸ் நிலையத்தில் உள்ள பதிவேடுகள் வழக்குகள் அதன் விவரங்கள் போன்றவற்றை கேட்டறிந்தார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார் பொதுமக்களுடைய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வாகன சோதனை அதிகப்படுத்துவோம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    மேலும் பொது மக்களுடைய மனுக்களை உடனே விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    ×