என் மலர்
திருவண்ணாமலை
- 2 பேர் கைது
- ஜெயிலில் அடைப்பு
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த திண்டிவனம் ஊராட்சி அத்திமூர் கிராமத்தில் வசிப்பவர் ஒப்பந்ததாரர் ராஜாராம். இவர், திண்டிவனம் ஊராட்சியில் ரூ.2 லட்சத்தில் கால்வாய் அமைத்துள்ளார். இப்பணி கடந்தாண்டு டிசம்பர் மாதம் முடிந்துள்ளது.
இந்நிலையில், கால்வாய் அமைக்கும் பணி நிறைவு பெற்ற தற்கான சான்று கொடுக்க 10 சதவீதம் கமிஷன் என்ற அடிப்படை யில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தில் பணியாற்றும் பணி மேற்பார்வையாளர் புருஷோத்தமன் கட்டாயப்படுத்தியுள்ளார்.
இது குறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ராஜாராம் புகார் கொடுத்தார். அவர்களது அறிவுரையின்பேரில், போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியில்இருந்த பணி மேற்பார்வையாளர் புருஷோத்தமனிடம் ரசாயனம் தடவிய லஞ்சப் பணம் ரூ.20 ஆயிரத்தை ராஜாராம் நேற்று கொடுக்க முயன்றுள்ளார்.
லஞ்சப் பணத்தை, தற்காலிக பணியாளர் ராஜ்குமார் மூலம் புருஷோத்தமன் பெற்றார்.
அப்போது அங்கு மறைந்திருந்தலஞ்சஒழிப்பு டி.எஸ்.பி. வேல்முருகன் தலைமையிலான போலீசார் புருஷோத் தமன் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
அைத தொடர்ந்து கைதான 2 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
- உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்தார்
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள செம்மாம்பாடி, கிராமத்தைச் சேர்ந்தவர் மன்ணு (வயது 65). கூலித் தொழிலாளி. இவர் உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காததால் விரக்தி அடைந்த மண்ணு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி மண்ணு, இறந்து விட்டார். இது குறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி
- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் தினமும் சேரும் குப்பைகள் மகளிர் குழு மற்றும் துப்புரவு, தூய்மைக் காவலர்கள் வீடு வீடாக சென்று நடமாடும் குப்பை வண்டிகளில் பெற்று, திருவண்ணாமல செல்லும் மெயின்ரோடு பகுதியில் உள்ள வளமீட்பு பூங்காவில் சேர்க்கின்றனர். இங்குள்ள பணியாளர்கள் மக்கும் குப்பைகளை மண்புழு உரமாக மாற்றியும், மக்காத குப்பைகளை மலைபோல் சேர்த்து வருகின்றனர்.
இந்த வளமீட்பு பூங்கா எதிரே தனியார் பள்ளி உள்ளது. இங்குள்ள குப்பைகள் மூலம் துர்நாற்றம், கொசுத்தொல்லையால் மாணவ மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இங்கு சேர்ந்த குப்பைகளை மாற்றம் செய்ய வேறு இடம் கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குப்பைகளை சேர்க்க மட்டும் தான் பணி நடக்கிறது. சேரும் குப்பைகளை உரிய முறையில் அகற்றி துர்நாற்றம் வீசாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
- சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தன. தகுதியற்ற நபர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன, வீடு கட்டுவதற்கு ஆணை பெற்றுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட முதல் மற்றும் 2-ம் கட்ட தவணைத் தொகையை பயன்படுத்தாமல், சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொண்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக கூறப்பட்டது.
இது குறித்து முந்தைய கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மற்றும் தற்போதைய கலெக்டர் முருகேஷ் ஆகியோரிடம் ஆரணி எம்.பி., விஷ்ணு பிரசாத் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்து கலெக்டர் முருகேஷ் கடந்த 3 வாரங்களாக ஆய்வு செய்து வருகிறார்.
மாவட்டத்தில் உள்ள 18 ஒன்றியங்களிலும், தனித்தனியாக ஆய்வு நடத்தப்படுகிறது. அப்போது நிலுவையில் உள்ள பணிகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கலெக்டர் கேள்வி எழுப்பினார். மேலும் அவர், நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், கலசப்பாக்கம் ஒன்றியத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டதின் கீழ் 2016-17-ம் ஆண்டு முதல் 2019-20-ம் ஆண்டு வரை பணிகளை தொடங்காதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில், முதல் தவணை தொகையை பெற்றுக்கொண்டு, 175 பயனாளிகள் வீடு கட்டும் பணியை தொடங்காமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க கலசப்பாக்கம், கடலாடி, போளூர் மற்றும் மங்கலம் போலீஸ் நிலையங்களில் வட்டார வளர்ச்சி அலுவலகர் வீ.கோவிந்தராஜிலு புகார் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில்:-
"கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் (2016-17 முதல் 2019-20 வரை) வீடு கட்ட வேலை உத்தரவு வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு முதல் தவணை தொகையாக ரூ.26,029, சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இவர்களில் 175 பயனாளிகள், வீடு கட்டும் பணியை தொடங்கவில்லை. மேலும், வீடு கட்டுவதற்காக வழங்கப்பட்ட அரசு பணத்தை, வீடு கட்ட பயன்ப டுத்தாமல் முறைகேடு செய்துள்ளனர். இவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கலசப்பாக்கம் ஒன்றியத்தில் மட்டும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.45,62,075 நிதி மோசடியாக பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல், மாவட்டத்தில் உள்ள இதர ஒன்றியங்களிலும் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கும் பணியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- பல்வேறு குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் கூறினர்
- 2 மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கலாம்பாடி ஊராட்சியில் சுமார் 2,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
பூட்டு போட்டு போராட்டம்
ஊராட்சியில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும், மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் புதிய அட்டைகள் வழங்க ஒரு நபருக்கு 1500 ரூபாய் கேட்பதாகவும், வீடுகளுக்கு தனிநபர் உறிஞ்சி குழியை தானே கட்டி தருவதாக பொதுமக்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாகவும், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஒரு பயனாளியிடம் தலா 30 ஆயிரம் ரூபாய் வசூல் செய்ததாகவும் உள்ளிபல்வேறு முறைகேடுகளை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், 100 நாள் வேலை திட்டத்தில் புதிய அட்டை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக புதிய அட்டை வழங்கப்பட்டது. மேலும், பொது மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் முறைகேடு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது.
- முத்தனூர் அருகே சென்ற போது பின்னால் வந்த டிராக்டர் பைக் மீது மோதியது. இதில் 3பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
- குழந்தை துரைமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தானகவுண்டம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 30).
இவரது மனைவி மணிமேகலை (25) தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
தம்பதிக்கு 1½ வயதில் துரைமணி என்ற குழந்தை இருந்தது. இன்று ராஜதுரை, மணிமேகலை குழந்தை துரைமணி ஆகிய 3 பேரும் பைக்கில் செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக சென்று கொண்டிருந்தனர்.
முத்தனூர் அருகே சென்ற போது பின்னால் வந்த டிராக்டர் பைக் மீது மோதியது. இதில் 3பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். குழந்தை துரைமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய மணிமேகலையை மீட்டு ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராஜதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து புதுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண்கள், சிறுவர்கள் உள்பட 17 பேர் படுகாயம்
- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
ஆரணி, ஜூலை.18-
திருவண்ணா மலை மாவட்டம் ஆரணி அருகே அப்ப தாங்கல் கூட்ரோடு அருகில் ஆரணியி லிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ்கள் சென்னை யிலிருந்து போளுர் நோக்கி வந்த அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துகு ள்ளானது.
இதில் பயணம் செய்த பயணிகள் சிவசங்கரி, அம்பிகா, லட்சுமி, விஜயா, உள்ளிட்ட 5 பெண்களும் முரளிதரன், பாரதிராஜா, ராஜா, கோபி கிருஷ்ணன் உள்ளிட்ட 7 ஆண்களுக்கும் மற்றும் 3சிறுவர்கள் மற்றும் அரசு பஸ் டிரைவர்கள் ராஜேந்திரன், பாஸ்கர் கண்டக்டர்கள் ஆனந்தன், ரஞ்சித் உள்ளிட்ட 17 பேர் படுகாயமடைந்தனர்.
போலீசார் மீட்டு 108 ஆம்பூலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து 17பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- மாணவி ஸ்ரீமதி சாவிற்கு நீதி கேட்டு போராட்டம்
- போலீசார் அறிவுரையை ஏற்று கலைந்து சென்றனர்
திருவண்ணாமலை:
கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 13-ந் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் உறவினர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்து நிலையில் நேற்று போராட்டம் தீவிரமடைந்து கலவரமாக மாறியது.
இந்த நிலையில் திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் ரெயில்வே கேட் அருகில் இளைஞர்கள் ஒன்றுகூடி உயிரிழந்த ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு கையில் கருப்பு கொடிகளை ஏந்தியும், பதாகைகளை ஏந்தியும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த திருவண்ணாலை டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு குணசேகரன் தலைமையிலான போலீசார் மற்றும் தாசில்தார் சுரேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதின் உடன்பாடு ஏற்பட்டதால் வாலிபர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- டாக்டர் கம்பன் வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள பழைய நகர மன்ற அலுவலகம் எதிரில் நடைபாதை சிறு வியாபாரிகள் நல சங்கத்தின் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் அனைத்து அமைப்புசாரா மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக திமுக மருத்துவ அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே. கம்பன் கலந்து கொண்டு சங்கப் பெயர் பலகை திறந்து வைத்து கட்சி கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் மாவட்ட அமைப்பாளர் நேரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தலையில் பலத்த காயம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள சித்தாமூர் கிராமம், பாடசாலை தெருவை சேர்ந்த ஏழுமலை வயது 55, விவசாயி.
இவரது மனைவி பச்சையம்மாள் வயது 50, பச்சையம்மாளுக்கு கண் பரிசோதனை செய்ய அவரது மகன் சந்திரசேகரன் பைக்கில் பச்சையம்மாளை அழைத்து க்கொண்டு செய்யாறு பால் குளிரூட்டும் நிலையம் எதிரில் வந்தவாசி செய்யாறு சாலையில் இரு சக்கர வாகனத்தில் செய்யாறு நோக்கி வந்து கொண்டிருந்தபோது பைக்கில் இருந்து நிலைத்திடுமாறு பச்சையம்மாள் கீழே விழுந்தார்.
இதில் பச்சையம்மாள் தலையில் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டது. செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இது சம்பந்தமாக அனக்காவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
- 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு
- முதல் பரிசாக பைக் வழங்கப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேட்டில் நேற்று முன்தினம் காளைவிடும் திருவிழா நடைபெற்றது. காலை 7 மணிஅளவில் காளைவிடும் விழா தொடங்கியது.
கலசபாக்கம் எம்.எல்.ஏ. சரவணன் கலந்து கொண்டு காளைகளின் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், முன்னாள் தலைவர் ஆர் வி சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு வேகமாக ஓடின.
இதில் வேகமாக ஓடி முதலிடம் பெற்ற காளைக்கு முதல் பரிசாக மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. அத்துடன் 40-க்கும் மேற்பட்ட காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
- சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது
- சிவனடியார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேவார திருவாசகம் மாநாடு 5-ம்ஆண்டாக தொடங்கியது.
இந்த மாநாட்டில் திருவாவடுதுறை ஆதினம் சைவ சித்தாந்த பயிற்சி மைய அமைப்பாளர் பழனிச்சாமி, "அழியா மரபு வழியே ஆகும்' என்ற தலைப்பிலும், குடவாசல் ஆதின புலவர் வி.ராமமூர்த்தி, திருவாவடுதுறை திருமுறை ஆசிரியர் அ.வேலுசாமி, வேத உள்ளுரையான் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். முன்னதாக காட்டுக்காநல்லூர் கிராமத்தில் ராமநாதீஸ்வரர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து வல்லம் கீழ்வல்லம் அச்சுதாசர் ஜீவமுக்தி ஆலயத்திலிருந்து பன்னிரு திருமுறைகள் ஊர்வலமாக மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்களுக்கு விளக்கேற்றும் பணி செய்து வரும் ப.ஜெயராமன் இடபக்கொடி ஏற்றி வைத்தார். கோ.பலராமன் கொடி கவி பாடினார்.
பிற்பகலில் ஈரோடு அம்பலத்தரசு, சோளிங்கர் மு.செல்வநாதன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் திருவாசகம் சிறப்புகள் குறித்து விளக்கினர். மாலையில் மழையூர் சதாசிவம் குழுவினர் சிறப்பு திருமுறை இன்னிசை பாடினர். காலை அண்டர் நாயகர் தொண்டர்கள் பெண் அடியார்கள் திருவிளக்கு ஏற்றி சிறப்பு திருமுறை விண்ணப்பம் செய்கின்றனர்.
மேலும் தேவாரம் திருவாசகம் குறித்து பல்வேறு சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.






