என் மலர்
நீங்கள் தேடியது "Lockdown and protest"
- பல்வேறு குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் கூறினர்
- 2 மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கலாம்பாடி ஊராட்சியில் சுமார் 2,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
பூட்டு போட்டு போராட்டம்
ஊராட்சியில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும், மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் புதிய அட்டைகள் வழங்க ஒரு நபருக்கு 1500 ரூபாய் கேட்பதாகவும், வீடுகளுக்கு தனிநபர் உறிஞ்சி குழியை தானே கட்டி தருவதாக பொதுமக்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாகவும், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஒரு பயனாளியிடம் தலா 30 ஆயிரம் ரூபாய் வசூல் செய்ததாகவும் உள்ளிபல்வேறு முறைகேடுகளை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், 100 நாள் வேலை திட்டத்தில் புதிய அட்டை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக புதிய அட்டை வழங்கப்பட்டது. மேலும், பொது மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் முறைகேடு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது.






