என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்வாய் பணி நிறைவு சான்றிதழ் கொடுக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்
    X

    கால்வாய் பணி நிறைவு சான்றிதழ் கொடுக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்

    • 2 பேர் கைது
    • ஜெயிலில் அடைப்பு

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த திண்டிவனம் ஊராட்சி அத்திமூர் கிராமத்தில் வசிப்பவர் ஒப்பந்ததாரர் ராஜாராம். இவர், திண்டிவனம் ஊராட்சியில் ரூ.2 லட்சத்தில் கால்வாய் அமைத்துள்ளார். இப்பணி கடந்தாண்டு டிசம்பர் மாதம் முடிந்துள்ளது.

    இந்நிலையில், கால்வாய் அமைக்கும் பணி நிறைவு பெற்ற தற்கான சான்று கொடுக்க 10 சதவீதம் கமிஷன் என்ற அடிப்படை யில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தில் பணியாற்றும் பணி மேற்பார்வையாளர் புருஷோத்தமன் கட்டாயப்படுத்தியுள்ளார்.

    இது குறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ராஜாராம் புகார் கொடுத்தார். அவர்களது அறிவுரையின்பேரில், போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியில்இருந்த பணி மேற்பார்வையாளர் புருஷோத்தமனிடம் ரசாயனம் தடவிய லஞ்சப் பணம் ரூ.20 ஆயிரத்தை ராஜாராம் நேற்று கொடுக்க முயன்றுள்ளார்.

    லஞ்சப் பணத்தை, தற்காலிக பணியாளர் ராஜ்குமார் மூலம் புருஷோத்தமன் பெற்றார்.

    அப்போது அங்கு மறைந்திருந்தலஞ்சஒழிப்பு டி.எஸ்.பி. வேல்முருகன் தலைமையிலான போலீசார் புருஷோத் தமன் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

    அைத தொடர்ந்து கைதான 2 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×