என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • வருகிற 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • 1-ந் தேதி வளைகாப்பு உற்சவம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை முதல் பங்குனி வரை 12 மாதங்களும் உற்சவங்கள் நடைபெறும்.

    அருணாசலேஸ்வரர் ்கோவிலில் உள்ள அம்மன் சன்னதியில் வரும் 23-ம் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கடக லக்னத்தில் சிவாசாரியர் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்று விழா நடைபெற உள்ளன. அன்று விநாயகர் மற்றும் உற்சவர் பராசக்தி அம்மன் கொடிமரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    தொடர்ந்து தினமும் காலை மாலை அம்பாள் மாடவீதி உலா நடைபெறும். நிறைவு நாளான ஆடிப்பூரம் 10 நாள் ஆகஸ்ட் 1-ந் தேதி திங்கட்கிழமை மாலை கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்க தீர்த்தக் கரையில் உள்ள வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மாள் எழுந்தருல்வார். வளைகாப்பு உற்சவம் நடைபெறும். தொடர்ந்து அம்பாள் வீதி உலா நடக்கிறது.

    இரவு 10 மணிக்கு மேல் கோவில் வளாகத்தில் அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா நடைபெறுகிறது.

    • போக்சோ சட்டத்தில் கைது
    • ேபாலீசார் விசாரணை

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே உள்ள வெங்களத்தூர் கிராமத்தை சேர்ந்த 45 வயது விவசாயி ஒருவர் அப்பகுதியை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி அழுது கொண்டே தனது தாயாரிடம் கூறி உள்ளார்.

    சிறுமியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பிரியா வழக்கு பதிவு நடத்தி விவசாயியை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • 2000 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு
    • ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருவண்ணாமலை:

    சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளதை யொட்டி திருவண்ணாமலை நகராட்சி ஈசான்ய மைதானத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் வரையப்பட்ட மாபெரும் கோலத்தை கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டார்.

    மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் 44 - வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெற உள்ளது.

    இப்போட்டிகளில் 187 நாடுகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிக்கான தொடக்க விழா மிக பிரம்மாண்டமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 28.07.2022 அன்று நடைபெற உள்ளது.

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு ஆய்வு கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஒருங்கிணைந்து, மாவட்டங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென அறிவுறுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து சர்வதேச செஸ் போட்டி குறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகிறது.

    இதனை தொடர்ந்து திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் தமிழ்நாடு அரசு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் வரையப்பட்ட மாபெரும் கோலத்தை பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் நான்சி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் சையத் சுலைமான், திருவண்ணாமலை நகரமன்றத்தலைவர் நிர்மலா கார்த்திவேல்மா றன், மகளிர் சுயஉதவிக்குழு உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • பணம் தராமல் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
    • ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு

    செய்யாறு:

    செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    சங்க மாவட்ட தலைவர் ஹரிதாஸ் தலைமையில் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் 2021-2022 பருவ ஆண்டில் சர்க்கரை ஆலைக்கு அனுப்பிய கரும்புக்கு கடந்த 5 மாதங்களாக பணம் தராமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

    ஆலையின் இருப்பில் உள்ள சர்க்கரையை விற்க அனுமதி வழங்கவில்லை, ஆலையிலிருந்து பெற்ற 22 கோடி மதிப்பிலான இணை மின்சாரத்திற்கு உரிய பணம் வழங்கவில்லை எனவும், கடன் பெற அனுமதிக்காமல் காலம் தாழ்த்துகின்றனர் எனவும், கரும்புக்கு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் வெட்டுக் கூலியை ஆலய நிர்வாகமே வழங்க வேண்டும், நுழைவு வாயிலில் எடை மேடை அமைக்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • 7 வாகனங்கள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    போளூர்:

    போளூர் அருகே வெண்மணி புறவழிச் சாலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபி ரகாஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக 2 பேரை சந்தேகத்தின் ேபரில் விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் பதில் அளித்தனர்.

    தொடர்ந்து விசாரணையில் அத்திமூர் பகுதியை சேர்ந்த முருகன் (எ) வாயாடி முருகன் (வயது 51) வீர கோயில் தெரு அத்திமுறை பகுதியை சேர்ந்த ரோகித் என தெரியவந்தது.

    ஆகிய இருவருமே வாகன திருட்டில் ஈடுபடுவது தெரியவந்தது. இவர்கள் இருவரும் பல்வேறு பகுதிகளில் இதுவரை சுமார் 7 பைக்குகளை திருடியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்துனர்.

    மேலும் வழக்குபதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூட்டை உடைத்து கைவரிசை
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த கீழ்நாச்சிபட்டு மன்னம்மாள் நகரைச் சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 59). இவர் திருவண்ணாமலையில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார்.

    காலையில் விற்பனைக்கு சென்று இரவு தான் வீடு திரும்புவது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் வியாபாரத்துக்கு மனைவியுடன் முருகதாஸ் வெளியே வந்து விட்டார். பின்பு இரவு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளதை பார்த்து முருகதாஸ் அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைக்கப்பட்டு அதிலிருந்து 2 சவரன் தங்க நகை மற்றும் ரொக்கப் பணம் 30 ஆயிரம் திருடு போனது தெரியவந்துள்ளது.

    இது குறித்து திருவண்ணா மலை தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிறது
    • ஏ.சி.சண்முகம் தகவல்

    ஆரணி:

    ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சிக்கு பட்ட ஏ.சி.எஸ் நகரில் அமைந்துள்ள ஏ.சி.எஸ் கல்வி குழுமத்தில் கடந்த மாதம் 17ந் தேதி வெங்கடா ஜலபதி கோவில் புதியதாக கட்டபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் வருகிற 29-ந் தேதி திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் இருந்து உற்சவர் சாமிகள் 7ரத வாகனத்தில் கொண்டு வரப்படுகின்றன. 30-ந் தேதி காலையில் வெங்கடஜலபதி பெருமாள் கோவிலில் சுப்ரபாத சேவை தோமாலை உற்சவம் உள்ளிட்ட உற்சவங்கள் காலை முதல் மாலை வரை நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரி விளையாட்டு அரங்கில்70 சிவாச்சாரியர்களை கொண்டு திருப்பதி திருமலை சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறள்ளன.

    அடுத்த மாதம் ஆகஸ்ட்-4ந் தேதி வரையில் நடைபெறுகின்றன.

    இதற்கான ஏற்பாடுகளை ஏ.சி.எஸ் கல்வி குழும தலைவர் ஏ.சி.சண்முகம் லலிதா லட்சுமி சண்முகம் ஏ.சி.எஸ். அருண்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    விழாவில் திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி நிர்வாக அலுவலர் தர்மாரெட்டி தமிழ்நாடு புதுச்சேரி கோவில் கமிட்டி தலைவர் ஏ.ஜி.சேகரரெட்டி தமிழகத்தை சேர்ந்த கோவில் கமிட்டி உறுப்பினர்கள் எம்.எல்.ஏ நந்தகுமார் சீனிவாசன் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக ஏ.சி.எஸ். கல்வி குழும தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.

    • இன்று மாலை நடைபெறுகிறது
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரம்ம தீர்த்தக்கரையில் மேற்கு நோக்கி கால பைரவர் எழுந்தருளி உள்ளார்.

    இவருக்கு ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்று வருகின்றன. அதேபோல் அமாவாசை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரங்களில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.

    அதன்படி இன்று ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு மேல் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேகம் ஆராதனை நடைபெற உள்ளன.

    • சத்தம் போட்டதால் கழுத்தை அறுத்த விபரீதம்
    • பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் விறகு எடுத்து கொண்டி ருந்த பெண்ணிடம் ஆட்டோ டிரைவர் தவ றாக நடக்க முயன்றார். அந்த பெண் சத்தம் போட்டதால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடியவரை போலீசார் கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையை சேர்ந்தவர் சிவன் (வயது 33). இவர் திருவண்ணாமலையில் தங்கி ஆட்டோ ஓட்டி வருகி றார். நேற்று மதியம் இவர் நல்லவன்பாளையம் அருகே சமுத்திரம் ஏரிக்கரை பகு திக்கு இயற்கை உபாதைக் காகஒதுங்கினார். அப்போது அந்த பகுதியில் பெண் ஒருவர் தனியாக விறகு எடுத்துக் கொண்டிருந்தார்.

    சுற்றிலும் ஆட்கள் யாரும் இல்லாததால் அதனை பயன்படுத்தி கொண்ட சிவன் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை கண்டு அவர் கையில் வைத் திருந்த சின்ன கத்தியால் பெண்ணின் கழுத்தை அறுத் துவிட்டு தப்பி ஓடினார். சத் தம் கேட்டு வந்த அக்கம்பக் கத்தினர் காயம் அடைந்த பெண்ணை மீட்டு திருவண் ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    சிலர் தப்பியோடிய ஆட்டோடிரைவரை துரத்தி சென்றனர். இதற்கிடையில் ஆட்டோவில் பெட்ரோல் தீர்ந்து விடவே சிவன் ஆடடோவை சிறிதுதூரம் தள்ளிக் கொண்டே சென்றார்.

    பின்னர் ஆட்டோவில் வைத்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து ஊற் றிக் கொண்டு தப்பித்து செல்ல முயன்றார். சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேல் அவரை விரட்டி சென்றவர் கள் தேனி மலைப்பகுதியில் மடக்கிப் பிடித்தனர். அப் போது சிவன் மதுபோதையில். இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் சிவனை திருவண்ணாமலை தாலுகா போலீசில் ஒப்ப டைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவனை கைது செய்தனர்.

    கழுத்து அறுபட்ட பெண்ணுக்கு ஆஸ்ாத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரூ.90 கோடியில் மதகுகள் சீரமைக்கும் பணி நிறைவு பெறுகிறது
    • 150 கிராமங்கள் மற்றும் முக்கிய நகரங்கள் குடிநீர் வசதி பெறுகிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 1958 -ல் கட்டப்பட்டது. இந்த அணை 119 அடி உயரம் கொண்டதாகும்‌ திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரம் விவசாய நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறுகின்றன.

    இந்த மாவட்டங்களில் உள்ள 88 ஏரி குளங்களில் சாத்தனூர் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இது மட்டுமின்றி திருவண்ணாமலை நகரம் மற்றும் செங்கம் உட்பட குறைந்தது 150 கிராமங்கள் மற்றும் முக்கிய நகரங்கள் குடிநீர் வசதி பெறுகிறது.

    1958-ல் அணை கட்டப்பட்டதிலிருந்து அணையின் மதகுகள் சரி செய்யப்படவில்லை. மொத்தம் 20 மதகுகள் உள்ளன.இதில் 9 மதகுகள் 20 அடி உயரம் மற்றவை 15 அடி உயரம் கொண்டதாகும். அனைத்து மதகுகளும் 40 அடி அகலம் கொண்டவை.

    மதகுகள் சீரமைக்கப்படாததால் 119 அடி கொண்ட சாத்தனூர் அணையில் இதுவரை 99 கன அடி மட்டுமே தண்ணீர் தேக்கி வைத்திருந்தனர். கடந்த 2017-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. மதகுகள் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறியது.

    இதனை தொடர்ந்து தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணையை சீரமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இங்குள்ள மதகு சீரமைக்கும்பணி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மதகுகளை வலுப்படுத்தவும் அணையை சீரமைக்கவும் ரூ‌.90 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தது.இதில் 201 குடியிருப்பு, மற்றும் அணையை சுற்றி 15 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

    தற்போது சாத்தனூர் அணையில் புதிய மதகுககள் சீரமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    பருவ மழைக்கு முன்பாக இந்த பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதனால் இந்த ஆண்டிலிருந்து சாத்தனூர் அணையில் மொத்த உயரமான 119 அடி வரை கூடுதலாக தண்ணீர் சேமித்து வைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்‌

    மேலும் முன்னதாக அணையின் பாதுகாப்பு குறித்து தணிக்கை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    • 7 வயது சிறுமி பலாத்கார வழக்கில் கோர்ட்டு உத்தரவு
    • இழப்பீடு வழங்க பரிந்துரை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட் டம் ஆரணியை அடுத்த மேல் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிபாலன். இவரது நண்பர் கள் பாலாஜி, கார்த்திக்.இதில் பாலாஜி என்பவர் மேல்நகர் பகுதியில் கோழி இறைச்சி கடை வைத்து நடத்தி வந்தார்.

    7 வயது சிறுமி பலாத்காரம்

    கடந்த 2013-ம் ஆண்டு அக் டோபர் மாதம் இவர்கள் 3 பேரும் சேர்ந்து 7 வயது மதிக் கத்தக்க 3-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்று கோழி இறைச்சி கடையில் வைத்து கூட்டு பலாத்காரத் தில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து பாதிக்கப் பட்ட சிறுமி அவரது பெற் றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதைய டுத்து சிறுமியின் பெற்றோர் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண் ணாமலை மாவட்ட ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத் தில் அமைந்துள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடை பெற்று வந்தது.

    தலா 20 ஆண்டு சிறை

    இந்த 3 பேர்களில் சமீபத் தில் மணிபாலன் சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார். இந்த நிலையில் வழக்கு விசா ரணை தொடர்பாக அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார்.

    இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசா ரித்து வந்த நீதிபதி பார்த்தசா ரதி தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை கடத்தி பலாத்கா ரம் செய்த பாலாஜி (வயது 36) மற்றும் கார்த்திக் (32) ஆகியோருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.2ஆயி ரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க நீதி பதி பரிந்துரை செய்தார்.

    • குழந்தை வரம் வேண்டி பெண்கள் சிறப்பு வழிபாடு
    • ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவிலில் கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கி மகாபாரத அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது.

    நேற்று காலை கோவில் முன்பு தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நாடக நடிகர் ஒருவர் அர்ச்சுனன் வேடமனிந்து தபசு மரம் ஏறி ஈசனிடம் பாசுபதாஸ்திரம் பெறும் நிகழ்ச்சியை நடித்து காட்டினார்.

    தவத்தை கலைக்க சிவனும் பார்வதியும் வேடன் வேடத்தியாக வந்து அர்ச்சுனனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் தபசு மரத்தை சுற்றி திருமணமாகி குழந்தை வரம் வேண்டி பெண்கள் வணங்கினர்.

    வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிஅளவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியுடன், மாலையில் தீமிதி விழா நடக்கிறது. மறுநாள் 25-ந்தேதி தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா சம்பத், ஊராட்சி தலைவர் வள்ளியம்மாய் ராஜேந்திரன், துணை தலைவர் மணிமேகலை அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமிசிவலிங்கம், முன்னாள் தலைவர் மாணிக்கவேலு மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×