என் மலர்
திருவண்ணாமலை
- 9 வயது சிறுவன் பலி
- போலீசார் விசாரணை
வாணாபுரம்:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள கீழ்ராவந்தவாடி பகுதியைச் சேர்ந்தவர் மணி . இவரது மகன் சந்தோஷ் (வயது 9) அதே பகுதியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் வாணாபுரம் அருகே சே.கூடலூரில் தனது உறவினர் டிராக்டரில் அமர்ந்து சென்று கொண்டிருந்தான். ஏரிக்கரை அருகே சென்றபோது டிராக்டர் திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்தது.
இதில் படுகாயம் அடைந்த சந் தோசை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் . அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
இதுகுறித்த புகாரின்பேரில் வாணாபுரம் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பரணி கிருத்திகை என்பதால் கூட்டம் குறைந்தது
- இரவில் சாமி வீதிஉலா
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நேற்று முதல் ஆடி வெள்ளி விழா தொடங்கியது.
ஆனால் நேற்று பரணி காவடிகள் முருகன் கோவிலுக்கு பக்தர்கள் எடுத்து சென்றதால் கூட்டம் குறைந்து காணப்பட்டது என உள்ளூர் பக்தர் ஒருவர் தெரிவித்தார்.
இரவில்அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா நடந்தது அப்போது கரகாட்டம் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
ரேணூகாம்பாள் கோவில் அருகே மலைமீது உள்ள முருகர் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடந்தது. இரவில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி உலா நடக்கிறது.
- பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
- 10-ம் நாளன்று பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடக்கிறது.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் ஆடிப்பூரம் பிறம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது.
விழாவை முன்னிட்டு விநாயகர், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து 10 நாட்களுக்கு தினமும் காலையும் மாலையும் விநாயகர் பராசக்தி அம்மன் கோவிலின் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.
10-ம் நாளன்று பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், அன்று இரவு உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளன.
- திருமணமான 4 மாதத்தில் பரிதாபம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
விழுப்புரம் மாவட்டம் கிடார் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் என்பவரது மகன் வீரமுத்து (வயது 27). இவர் கடந்த 2018-ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தார்.
2019-ம் ஆண்டு முதல் திருவண்ணாமலை ஆயுதப்படை போலீசில் பணியாற்றி வந்தார் இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவரது மனைவியுடன் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பின்புறம் உள்ள ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் ஆடி மாதம் பிறந்த காரணத்தால் வீரமுத்து அவரது மனைவியை மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
நேற்று அவர் பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். மாலையில் வீரமுத்துவின் மனைவி அவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு செல்போனை எடுத்து வீரமுத்து பேசாத காரணத்தால் சந்தேகமடைந்த அவரது மனைவி உடனடியாக வீரமுத்துவின் நண்பர் ஒருவருக்கு தகவல் தெரிவித்து அவரை நேரில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
அப்போது வீரமுத்து தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீரமுத்து தற்கொலைக்கு காரணம் என்ன என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
- துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார்
- நேரில் பார்வையிட்டு ஆய்வு
வேட்டவலம்:
வேட்டவலம் பேரூராட்சியில் ரூ 14 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட 5 மினி டேங்குகள் மற்றும் சிமெண்ட் சாலைகளை துணை சபாநாயகர் கு.பிச் சாண்டி திறந்து வைத்தார்.
வேட்டவலம் பேரூராட்சியில் கீழ்பென்னாத்தூர் எம். எல்.ஏ தொகுதி நிதி 2021-2022-ன் கீழ் பேரூராட்சிக்குட்பட்ட தேரடிவீதி, தாழனூ ரான் சந்து, திருக்கோவிலூர் ரோடு, சின்னக்கடை தெரு, பாரதி தெரு ஆகிய பகுதிகளில் ரூ 10 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணற்றுடன் கூடிய 5 மினி டேங்குகள் மற்றும் திரு.வி.க தெரு, புனித அந்தோனியார் தெரு ஆகிய பகுதி களில் ரூ.4 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலைகள் ஆகியவற்றை நேற்று துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமை தாங்கி பொது மக்களின் பயன்பாடிற்கு திறந்து வைத்தார்.
முன்னாதாக அண்ணாநகர் பகுதியில் பேரூராட்சியின் சார்பில் செயல்பட்டு வரும் வளம் மீட்பு பூங்காவில் மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரிக்கும் பணி மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் செயல் அலுவலர் சுகந் தி,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் முருகையன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் ஜெயலட்சுமி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழரசி, புவனேஸ்வரி,அன்சர் அலி மணிப்பிள்ளை, டேவிட், சங்கர் வைத்தீஸ்வரி மற்றும் முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சூழ்ந்ததால் ஆத்திரம்
- அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் சமரசம்
ஆரணி :
திருவண்ணா மலை மாவட்டம் ஆரணி அருகே ராட்டினமங்கலம் ஊராட்சி க்குட்பட்ட பழையகாலனி பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
தற்போது குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் மற்றும்கால்வாய் சூழ்ந்து கொண்டதால் குடியிருப்பு வாசிகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஊராட்சி மன்றத்திலும் மற்றும் ஆரணி ஓன்றிய அலுவலகத்திலும் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ராட்டின மங்கலம் பெண்கள் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நுழைந்த பெண்கள் சேர்மன் அறையின் முன்பு தரையில் அமர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரசம் செய்து 2 தினங்களில் கழிவு நீர் கால்வாய் சரி செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.
இச்சம்பவம் அப்ப குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உர விற்பனையாளர்களுக்கு வேளாண்மை அதிகாரி அறிவுரை
- விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
கூடுதல் இணைப் பொருட்கள் விவசாயிகளுக்கு கட்டாயப்படுத்தி வழங்கக் கூடாது என்று உர விற்பனையாளர்களுக்கு வேளாண்மை இணை இயக்குனர் பாலா அறிவுரை வழங்கி உள்ளார்.
ஒருங்கிணைப்பு கூட்டம்
திருவண்ணாமலை வட்டாரத்தில் உரங்கள் தொடர்பாக வரும் புகார்களை நிவர்த்தி செய்வது மற்றும் விவசாயிகளுக்கு உரங்கள் இடையூறின்றி விநியோகம் செய்வது தொடர்பான திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை துறை சார்பில் ஒருங்கிணைப்பு கூட்டம் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வேளாண்மை இணை இயக்குனர் பாலா தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
உர உரிமம் பார்வைக்கு படும் படி வைக்கப்பட வேண்டும். உர உரிமம் காலாவதி ஆகும் முன் புதுப்பிக்கப்பட வேண்டும். உர உரிமத்தில் அனுமதி பெற்ற இடத்தில் மட்டும் விற்பனை நடைபெற வேண்டும். உரம் இருப்பு, விற்பனை விலை குறித்த தகவல் பலகை வைக்கப்பட வேண்டும்.
அரசு நிர்ணயித்த விலைக்கு மிகாமல் உரங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும். கூடுதல் இணைப் பொருட்கள் விவசாயிகளுக்கு கட்டாயப்படுத்தி வழங்கக் கூடாது. கொள்முதல் பட்டியல் இல்லாத பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. அனைத்தும் உர நிறுவனங்களின் பிரதிநிதிகளும் வேளாண்மை இயக்குனரின் மாதாந்திர இலக்கின்படி உரங்களை விநியோகம் செய்ய வேண்டும்.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலக்கின் படி கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் மற்றும் மொத்த, சில்லரை உர விற்பனை நிலையங்களுக்கும் மாதாந்திர இலக்கினை முழுமையாக விநியோகம் செய்ய வேண்டும். மேலும் மாத இறுதி வரை உரங்களை விநியோகம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
விவசாயிகள் மண் பரிசோதனையின் அடிப்படையில் வழங்கப்படும் மண்வள அட்டையை பயன்படுத்தி தங்களின் சாகுபடி பரப்பிற்கு தேவையான அளவு உரங்களை மட்டுமே வாங்க வேண்டும். உரம் வாங்க செல்லும் போது தங்களுடைய ஆதார் அட்டை நகல் மற்றும் அடங்கல் நகலினை எடுத்து சென்று உரங்களை பெற்று கொள்ள வேண்டும்.
விவசாயிகள் உரம் பெறுவதில் இடையூறுகள் ஏற்பட்டால் அதற்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திலும் மற்றும் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்திலும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் வேளாண் அதிகாரிகள், உர நிறுவனங்களின் பிரதிநிதிகள், மொத்த மற்றும் சில்லரை உர விற்பனையாளர்கள், கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளர், டான்பெட் மண்டல மேலாளர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மன்ற கூட்டரங்கில் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் ரமணன் முன்னிலை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் அமிர்தராஜ் வரவேற்றார்.
ஒன்றியக் குழு கூட்டம்
கூட்டத்தில் கடந்த 8 மற்றும் 9-ந் தேதிகளில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அரசு சார்பில் நடந்த விழாவில் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு புதிய அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து கொள்வது.
38 தீர்மானங்கள்
காடகமான் ஊராட்சியில் ஆதிச்சநல்லூரி செல்லும் சாலையில் தார் சாலை அமைப்பது, ஏந்தல் ஊராட்சியில் சிறுபாலம் கட்டுவது, அய்யம்பாளையம் ஊராட்சி பிள்ளையார் கோவில் குளத்திற்கு தடுப்பு சுவர் அமைப்பது, அடிஅண்ணாமலை ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் சிறுபாலம் மற்றும் பக்க கால்வாய் அமைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து மன்ற அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்ட 38 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பக்தவச்சலம், சாந்தி விஜயன், சுபாசெல்வமணி, தினகரன், முருகன், யுவராஜா உள்பட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் (நிர்வாகம்) கோபி நன்றி கூறினார்.
- 23-ம் ஆண்டாக நடக்கிறது
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்து வருகின்றனர்
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் குமரகிரி ஸ்ரீ பால முருகன் கோவிலில் நாளை (சனிக்கிழமை) ஆடி கிருத்திகை 23-ம் ஆண்டு விழா கொண்டாடப்படுகின்றது. இன்று பரணி காவடியை முன்னிட்டு முருகருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.
நாளை சனிக்கிழமை ஆடி கிருத்திகை முன்னிட்டு காலை 4 மணிக்கு மகாபிஷேகம், காலை 10 மணிக்கு அன்னதானம் சுபம் குரூப்ஸ், மாலை 6 மணிக்கு நாதஸ்வரம், பம்பை, சிலம்பாட்டம் மாலை 7 மணிக்கு வான வேடிக்கை நடைபெறுகின்றது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு ஸ்ரீ பாலமுருகன் வள்ளி தெய்வானையுடன் சர்வ அலங்காரத்துடன் தேரில் கோவில் வருதல் போன்றவை நடைபெறுகின்றன.
இந்த கோவிலில் பால விநாயகர் சதுர்த்தி, ஆடி கிருத்திகை பெருவிழா, கந்த சஷ்டி, பால்குடம் விழா, அன்னதானம் தைப்பூச விழா, தை கிருத்திகை விழா, பொங்கல் புத்தாண்டு விழா, பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் திரு வீதி உலா விழா, வைகாசி விசாகம் விழா, பிரதி மாதம் பிரதோஷ பூஜை, மாதாந்திர கிருத்திகை, ஆங்கில புத்தாண்டு, போன்றவை இந்த ஆலயத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் ஆகும்.
விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
- இந்த விழா வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி வரை நடக்கிறது
- 1-ந்தேதி உண்ணாமலை அம்மன் சன்னதி முன்புறம் தீமிதி உலா நடைபெற உள்ளது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
மேலும் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து கோவிலில் சாமி தாிசனம் செய்து விட்டு கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திக்கை தீப திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், ஆடிப்பூர பிரம்மோற்சவம் என பல்வேறு நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு காலையிலும், மாலையில் விநாயகர் உற்சவ உலா நடைபெற உள்ளது. தொடர்ந்து நாளை காலை சுமார் 6 மணியில் இருந்து 7.30 மணிக்குள் உண்ணாமலை அம்மன் சன்னதியின் முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து விழா நாட்களில் காலையும், மாலையும் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் உற்சவம் மாட வீதியுலா நடைபெறுகிறது. இந்த விழா வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி வரை நடக்கிறது. 1-ந் தேதி காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலையில் வளைகாப்பு உற்சவமும், பின்னர் பராசக்தி அம்மன் கோவில் வீதி உலாவும் நடைபெற உள்ளது.
அதனைத்தொடர்ந்து அன்று இரவு 12 மணிக்கு மேல் உண்ணாமலை அம்மன் சன்னதி முன்புறம் தீமிதி உலாவும், பின்னர் அம்மன் வீதியுலாவும் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் அலுவலர்கள், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
- அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நடந்தது. கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட அவைத்தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார்.
தணிக்கை குழு உறுப்பினரும், சட்டபேரவை துணை தலைவருமான கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சீதாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் வரவேற்றார்.
கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு தீர்மானங்களை விளக்கி பேசினார்.
கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீ்ர்மானங்கள் விவரம் வருமாறு:-
திருவண்ணாமலையில் கடந்த 8-ந் தேதி அண்ணா நுைழவு வாயில் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலை ஆகியவற்றை திறந்து வைக்க வருகை தந்த முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட கழகம் சார்பில் நன்றி தெரிவிப்பது, கடந்த 9-ந் தேதி அன்று திருக்கோவிலூர் சாலையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், 246 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, கீழ்பென்னாத்தூரில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் 2 லட்சமாவது மையத்தை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது ஆகிய தீர்மானங்கள் நிைறவேற்றப்பட்டது.
கூட்டத்தில் கழக மருத்துவரணி துைண தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதரன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஜோதி, பொருளாளர் பன்னீர்செல்வம், துணை செயலாளர் பாரதிராமஜெயம், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் கு.கருணாநிதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன், தெற்கு மாவட்ட அமைப்பாளர்கள் கே.வி.மனோகரன், டி.வி.எம்.நேரு, பொன்.முத்து, இரா.ஜீவானந்தம், ஏ.ஏ.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், சுந்தரபாண்டியன், மெய்யூர் சந்திரன், ஆறுமுகம், ராமஜெயம், பொதுக்குழு உறுப்பினர் பிரியா விஜயரங்கன் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வடக்கு மாவட்ட துணை செயலாளர் லோகநாதன் நன்றி கூறினார்.
- நாளை நடக்க ஏற்பாடு
- கலெக்டர் அறிவிப்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்துறை மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்க உள்ளனர்.
எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவித்தும் தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தும் பயன் அடையுமாறு திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.






