என் மலர்
திருவண்ணாமலை
- பராமரிப்புப் பணிகள் நடக்கிறது
- 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் துண்டிப்பு
வேட்டவலம்:
ராஜன்தாங்கல் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால்.ராஜன்தாங்கல், கொளத்தூர், சாணிப்பூண்டி, கீழ்க்கரிப்பூர், இசுக்கழிகாட்டேரி, கோணலூர், அண்டம்பள்ளம், ஆனானந்தல், மதுராம்பட்டு, நாடழகானந்தல், கெங்கப்பட்டு, செல்லங்குப்பம், காட்டுமலையனூர், மற்றும் பொலக்குணம், ஆகிய பகுதிகளுக்கு காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின் வாரியச் செயற்பொறியாளர் (கிழக்கு) ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
- அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் திரளானோர் பங்கேற்க அழைப்பு
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை செயலாளரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடிபழனிச்சாமி தமிழகத்தில் தி.மு.க. அரசு தற்போது உயர்த்துள்ள மின் கட்டண உயர்வை கண்டித்தும் பொதுமக்களில் அத்தியாவசிய தேவையான பொருட்களின் விலைவாசி உயரவை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரில் திங்கள்கிழமை திமுக அரசை கண்டித்து நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 25 ஆயிரத்து மேற்பட்ட மேற்பட்ட தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.
மேலும் கூட்டத்தில் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏக மனதாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெ டுக்கப்பட்டமைக்கு தெற்கு மாவட்ட சார்பில் நன்றி தெரிவித்தும், பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட சார்பில் அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தமைக்கு நன்றி தெரிவித்தும், அ.திமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் பன்னீர்செல்வம் தலைமையில், சமூக விரோதிகள் சென்று பொருட்களை சூறையாடி மற்றும் பொருட்களை திருடி சென்றதை வன்மையாக கண்டித்தும், திமுக ஆட்சியில் மின்சார கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, வீட்டு வரி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- ஏமாற்றத்துடன் கண் கலங்கியவாறு திரும்பி சென்றனர்
- 12 ஆயிரத்து 940 பேர் தேர்வு எழுதினர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் இன்று டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு 42 மையங்களில் நடந்தது. சுமார் 12ஆயிரத்து 940பேர் தேர்வு எழுதினர்.
ஆரணி டவுன் கோட்டை அருகே உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் மையத்தில் தேர்வு எழுத மாணவர்கள் ஆர்வத்துடன் வருகைபுரிந்தனர்.
மேலும் காலை 9 மணிக்கு மேல் தேர்வு எழுத வரும் நபர்களை அனுமதி கிடையாது என்று கூறியதால் சுமார் 100க்கும் மேற்பட்டோர் அதிர்ச்சியடைந்ந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டு தேர்வு மையத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் ஆனால் வருவாய் துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.
பின்னர் தகவலறிந்த வந்த சப்-கலெக்டர் தனலட்சுமியின் வாகனத்தை வழிமறித்து தேர்வு எழுத அனுமதிக்க கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் காலதாமதம் ஏற்பட்டதால் அனுமதி கிடையாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனால் தேர்வு எழுத வந்தவர்கள் விழிபிதுங்கி நின்று என்ன செய்வது என்று தெரியாமல் கண்கலங்கியவாறு திரும்பி சென்றனர்.
- சரவணன் எம்.எல்.ஏ. அதிகாரிகளுக்கு உத்தரவு
- கிரிவலப்பாதையில் குட்டை போல் தண்ணீர் தேங்கியிருந்தது.
திருவண்ணாமலை:
எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் மலை சுற்றும் பாதையில் மழை நீர் தேங்கி வெளியில் செல்ல விடாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சரவணன் எம்.எல்.ஏ. உத்தரவிட்டுள்ளார்.
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவிலில் ஆடி கிருத்திகை விழாவையொட்டி பல்வேறு முன்னேற்பாடு பணிகளை கலசப்பாக்கம் சரவணன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
அப்போது கோவிலின் அடிவாரத்தில் உள்ள குளத்தை பார்வையிட்டு மலை உச்சிக்குச் சென்று காவடி எடுத்து வரும் பக்தர்களுக்கு தனி வழி பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தனி வழி என அனைத்தையும் பார்வையிட்டார். பின்பு மலையை சுற்றி வரும் கிரிவலப் பாதையும் பார்வையிட்ட போது ஆங்காங்கே மழை நீர் தேங்கி குட்டை போல் இருந்தன.
இதனை உடனடியாக தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவிலில் சுற்றி உள்ள கிரிவலை பாதை முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தாசில்தார் மற்றும் அதிகாரிகளிடம் ஆடி கிருத்திகை விழா முடிந்தவுடன் அனைத்தையும் உடனடியாக அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்.
ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு கொரோனா தடுப்பூசிகள் போடும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு சென்ற எம்எல்ஏ இதுவரை எத்தனை பேர் இங்கு தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது மருத்துவ குழுவினர் இதுவரை யாரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரவில்லை என்று பதில் அளித்தனர். உடனே பூஸ்டர் தடுப்பூசியை எனக்கு போடுங்கள் என்று உட்கார்ந்தார். எம்.எல்.ஏ. போட்டு எழுந்தவுடன் உடன் வந்திருந்த கட்சியினர் 30-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.
இதனை அங்கிருந்து வேடிக்கை பார்த்த பொதுமக்களில் 20க்கும் மேற்பட்டோர் ஒரு மணி நேரத்தில் சுமார் 50 பேர் 2 தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.
நிகழ்சியில் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் ஹரிஹரன், தாசில்தார் தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் முருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.
- 108 ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததாக குற்றச்சாட்டு
- ஆடி கிருத்திகைக்கு கோவிலுக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே களம்பூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சரவணன் பிரியா தம்பதியினருக்கு திவாகர் (6) உதய அரசு (3) ஆகிய 2மகன்கள் உள்ளனர்.
நேற்று ஆடி கிருத்திகை தினத்தை முன்னிட்டு வீட்டின் அருகே உள்ள முருகன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதில் 3 வயது குழந்தை உதயஅரசை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்கு வந்த பின்னர் திடிரென உதயஅரசுக்கு மயக்க நிலை ஏற்பட்டதால் உடனடியாக களம்பூர் ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு கொண்டு வந்து அனுமதித்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மேல்சிகிச்சைக்கு செல்ல சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காலதாமதாமாக 108 ஆம்புலன்ஸ் வந்ததாக கூறப்படுகிறது.
ஆரணி அரசு மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினர்கள் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் வராத காரணத்தினால் 3வயது குழந்தை இறந்து விட்டதாக குற்றசாட்டினார்கள்.
பின்னர் தங்களின் குழந்தையை பிரேத பரிசோதனை கூடத்திற்கு எடுத்து செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறி ஆஸ்பத்திரி வளாகத்தில் கதறி அழுதனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி குழந்தை உடலை ஒப்படைத்தனர்.
- மனைவி, 2 மகள்கள் உள்ளனர்
- போலீசார் விசாரணை
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் அடுத்த கார்ணாம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 40). தொழிலாளி. இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் 2 மக ள்களும் உள்ளனர்.
கனகராஜ் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக பைக்கில் கார்ணாம் பூண்டி கிராமத்தில் இருந்து களஸ்தம்பாடி கிராமத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
கழிக்குளம் கிராமத்தில் உள்ள ஏரிகரை பகுதியில் அருகே வரும்போது சாலையின் நடுவே பாலம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டி இருந்தனர். இதனை கவனிக்காத கனகராஜ் அதில் நிலை தடுமாறி பாலம் கட்டும் பள்ளத்தில் விழுந்தார்.
கனகராஜன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். படுகாயம் அடைந்த பள்ளத்தில் விழுந்து கிடந்த கனகராஜை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கனகராஜன் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
- பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது
- 200க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை கண் மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு, 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
மேலும் பார்வை குறைபாடு உள்ள நபர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. கண்புரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இலவச அறுவை சிகிச்சைக்காக பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்
- திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 10-ம் வகுப்பு மாணவியை வாலிபர் கர்ப்பமாக்கியுள்ளார்.
- மாணவி அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பிரியா வழக்கு பதிவு செய்து, வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த மாத்தூர் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே ஊரை சேர்ந்த சந்தோஷ் (வயது22). இவர் டிராக்டர் டிரைவராக உள்ளார். சந்தோசும், மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியுடன் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். அது பற்றி சந்தோஷிடம் கூறியதற்கு வெளியில் சொன்னால் உன்னை உயிரோடு விடமாட்டேன் என்று மாணவியை மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த மாணவி இதுகுறித்து தன் தாயாரிடம் கூறினார்.
இதுகுறித்து அவர்கள் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் பிரியா வழக்கு பதிவு செய்து, சந்தோஷை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- தென்பெண்னை ஆற்றில் 4 ஆயிரம் கனஅடி வெள்ளம்
- விவசாயிகள் மகிழ்ச்சி
செங்கம்:
கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.இதனால் கே.ஆர். எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.எனவே அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து செங்கம் அடுத்த நீர்ப்பதுறை வழியாக ஆற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மேலும் அங்குள்ள சென்னியம்மன் பாறை கோவிலும் மூழ்கழுத்தபடி வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது.இதையடுத்து தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.
இன்று காலை அணைநீர் மட்டம் 104 அடியை எட்டியது. அணைக்கு 4 அயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.
இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- 23 பேருக்கு ஆணை வழங்கப்பட்டது
- பணிகளை தாமதமாக செய்யக்கூடாது
கண்ணமங்கலம்:
கணணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தில் கடந்த நிதியாண்டில் 23 பயனாளிகள் பிரதமர் வீடு கட்ட ஆணை வழங்கியும், சிலர் வீடு கட்டும் பணிகளை தாமதமாக செய்து வருகின்றனர்.
இதையடுத்து பயனாளி களுக்கு ஆலோசனை கூட்டம் நேற்று கிராம சேவை மையத்தில் மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி தலைமையில் நடைபெற்றது.
வண்ணாங்குளம் ஊராட்சி தலைவர் சங்கீதா விக்னேஷ், காட்டுக்கா நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ரேணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பணி மேற்பார்வையாளர் சுஜாதா வரவேற்று பேசினார்.
இந்த முகாமில் கலந்து கொண்ட வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ஜானகி ஆலோசனை வழங்கிப் பேசுகையில், பிரதமர் வீடு கட்டி வரும் பயனாளிகள் விரைந்து முடித்தால் உடனடியாக பணப்பட்டுவாடா வங்கி மூலம் கணக்கில் வரவு வைக்கப்படும்என்றார்.இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் உள்பட பயனாளிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் ஊராட்சி செயலர் தயாளன் நன்றி கூறினார்.
- 15 உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பு
- ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்
செய்யாறு:
செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜி.அசோக், ஆசிரியர்விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ்பாபு வரவேற்றார்.
கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவராக சி. உமா மகேஸ்வரி, துணைத் தலைவராக எம் மகாலட்சுமி மற்றும் 15 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் ஞானமணி சின்னதுரை, அகமத் மற்றும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
- கட்டுமான பணிகள் நடப்பதால் நடவடிக்கை
- கிழக்கு மாட வீதியில் செயல்படும்
செய்யாறு:
செய்யாறு நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் புதிய கடைகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் வழக்கமாக நடைபெறும் வாரச்சந்தை இனி செய்யாறு டவுன், ஆக்ஸ்போர்ட் பள்ளி அருகில் திருவத்தூர் கிழக்கு மாட வீதியில் நடைபெறும் என்று நகராட்சி ஆணையாளர் கி. ரகுராமன் தெரிவித்துள்ளார்.






