என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்"

    • அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் திரளானோர் பங்கேற்க அழைப்பு
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை செயலாளரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடிபழனிச்சாமி தமிழகத்தில் தி.மு.க. அரசு தற்போது உயர்த்துள்ள மின் கட்டண உயர்வை கண்டித்தும் பொதுமக்களில் அத்தியாவசிய தேவையான பொருட்களின் விலைவாசி உயரவை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டு உள்ளார்.

    அதன்படி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரில் திங்கள்கிழமை திமுக அரசை கண்டித்து நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 25 ஆயிரத்து மேற்பட்ட மேற்பட்ட தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.

    மேலும் கூட்டத்தில் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏக மனதாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெ டுக்கப்பட்டமைக்கு தெற்கு மாவட்ட சார்பில் நன்றி தெரிவித்தும், பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட சார்பில் அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தமைக்கு நன்றி தெரிவித்தும், அ.திமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் பன்னீர்செல்வம் தலைமையில், சமூக விரோதிகள் சென்று பொருட்களை சூறையாடி மற்றும் பொருட்களை திருடி சென்றதை வன்மையாக கண்டித்தும், திமுக ஆட்சியில் மின்சார கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, வீட்டு வரி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×