என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police have issued a flood warning through Tandora."

    • தென்பெண்னை ஆற்றில் 4 ஆயிரம் கனஅடி வெள்ளம்
    • விவசாயிகள் மகிழ்ச்சி

    செங்கம்:

    கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.இதனால் கே.ஆர். எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.எனவே அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து செங்கம் அடுத்த நீர்ப்பதுறை வழியாக ஆற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    மேலும் அங்குள்ள சென்னியம்மன் பாறை கோவிலும் மூழ்கழுத்தபடி வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது.இதையடுத்து தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.

    இன்று காலை அணைநீர் மட்டம் 104 அடியை எட்டியது. அணைக்கு 4 அயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.

    இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×