என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேட்டவலம் பேரூராட்சியில் டேங்குகள், சிமெண்ட் சாலைகளை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்த காட்சி.
ரூ.14 லட்சத்தில் புதிதாக 5 மினி டேங்குகள், சிமெண்டு சாலைகள் அமைப்பு
- துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார்
- நேரில் பார்வையிட்டு ஆய்வு
வேட்டவலம்:
வேட்டவலம் பேரூராட்சியில் ரூ 14 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட 5 மினி டேங்குகள் மற்றும் சிமெண்ட் சாலைகளை துணை சபாநாயகர் கு.பிச் சாண்டி திறந்து வைத்தார்.
வேட்டவலம் பேரூராட்சியில் கீழ்பென்னாத்தூர் எம். எல்.ஏ தொகுதி நிதி 2021-2022-ன் கீழ் பேரூராட்சிக்குட்பட்ட தேரடிவீதி, தாழனூ ரான் சந்து, திருக்கோவிலூர் ரோடு, சின்னக்கடை தெரு, பாரதி தெரு ஆகிய பகுதிகளில் ரூ 10 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணற்றுடன் கூடிய 5 மினி டேங்குகள் மற்றும் திரு.வி.க தெரு, புனித அந்தோனியார் தெரு ஆகிய பகுதி களில் ரூ.4 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலைகள் ஆகியவற்றை நேற்று துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமை தாங்கி பொது மக்களின் பயன்பாடிற்கு திறந்து வைத்தார்.
முன்னாதாக அண்ணாநகர் பகுதியில் பேரூராட்சியின் சார்பில் செயல்பட்டு வரும் வளம் மீட்பு பூங்காவில் மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரிக்கும் பணி மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் செயல் அலுவலர் சுகந் தி,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் முருகையன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் ஜெயலட்சுமி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழரசி, புவனேஸ்வரி,அன்சர் அலி மணிப்பிள்ளை, டேவிட், சங்கர் வைத்தீஸ்வரி மற்றும் முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






