search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போளூர் குமரகிரி ஸ்ரீ பால முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா
    X

    போளூர் குமரகிரி ஸ்ரீ பால முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா

    • 23-ம் ஆண்டாக நடக்கிறது
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்து வருகின்றனர்

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் குமரகிரி ஸ்ரீ பால முருகன் கோவிலில் நாளை (சனிக்கிழமை) ஆடி கிருத்திகை 23-ம் ஆண்டு விழா கொண்டாடப்படுகின்றது. இன்று பரணி காவடியை முன்னிட்டு முருகருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.

    நாளை சனிக்கிழமை ஆடி கிருத்திகை முன்னிட்டு காலை 4 மணிக்கு மகாபிஷேகம், காலை 10 மணிக்கு அன்னதானம் சுபம் குரூப்ஸ், மாலை 6 மணிக்கு நாதஸ்வரம், பம்பை, சிலம்பாட்டம் மாலை 7 மணிக்கு வான வேடிக்கை நடைபெறுகின்றது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு ஸ்ரீ பாலமுருகன் வள்ளி தெய்வானையுடன் சர்வ அலங்காரத்துடன் தேரில் கோவில் வருதல் போன்றவை நடைபெறுகின்றன.

    இந்த கோவிலில் பால விநாயகர் சதுர்த்தி, ஆடி கிருத்திகை பெருவிழா, கந்த சஷ்டி, பால்குடம் விழா, அன்னதானம் தைப்பூச விழா, தை கிருத்திகை விழா, பொங்கல் புத்தாண்டு விழா, பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் திரு வீதி உலா விழா, வைகாசி விசாகம் விழா, பிரதி மாதம் பிரதோஷ பூஜை, மாதாந்திர கிருத்திகை, ஆங்கில புத்தாண்டு, போன்றவை இந்த ஆலயத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் ஆகும்.

    விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×