என் மலர்
நீங்கள் தேடியது "Trafficking ganja on bike"
- ஒரு கிலோ சிக்கியது
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா போலீசார் நேற்று மல்லவாடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பைக்கிள் வந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தீவிர சோதனை நடத்தினர். விசாரணையில் அவர் மல்லவாடி பகுதியைச் சேர்ந்த குப்பன் (வயது 23), என்பது தெரிய வந்தது. அவர் ஒரு கிலோ எடையுள்ள கஞ்சாவை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
இதனை அடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.






