என் மலர்
நீங்கள் தேடியது "Guest accommodation under construction"
- செய்யாறில் ஜோதி எம்.எல்.ஏ. ஆய்வு
- அதிகாரிகளுக்கும், ஆலோசனை வழங்கினார்
செய்யாறு:
செய்யாறு டவுன், ஆற்காடு சாலையில் செயல்பட்டு வரும், பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் ரூ.3.25 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் விருந்தினர் தங்கும் விடுதி கட்டிடப் பணியினை ஜோதி எம்எல்ஏ நேற்று ஆய்வு செய்தார்.
கட்டிட வரைபடத்தினை பார்வையிட்டு அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் ஆலோசனை வழங்கினார். ஆய்வின் போது கோட்ட பொறியாளர் பிரமிளா, ஒப்பந்ததாரர்கள் கதிரவன், குமரவேல், கோபி மற்றும் ஒன்றிய செயலாளர் ஞானவேல், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரேசன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.






