என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடித்து கொன்றோம்"

    • 3 பேர் கைது
    • பரபரப்பு வாக்குமூலம்

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே மாயமான வாலிபரை அடித்து கொலை செய்து கிணற்றில் வீசிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வந்தவாசி அடுத்த பையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவன் (வயது 24). இவர் கடந்த 10-ந் தேதி கீழ்ப்பாக்கம் கிராமத்தில் சென்று விட்டு இரவு பைக்கில் புறப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது உறவினர்கள் கீழ்க்கடுங்காலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இந்த நிலையில் தேவனின் பைக், செல்போன், செருப்பு ஆகியவை சாத்தனூர் கூட்டுச்சாலை அருகே சாலையோரம் கிடந்துள்ளது. அருகில் ரத்தக்கரை இருந்ததால் போலீசார் தேவனை தீவிரமாக தேடி வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து கீழ்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (35), கோகுல்ராஜ் (22), கொவளை கிராமத்தைச் சேர்ந்த சேகர் (21) ஆகிய 3 பேரும் சேர்ந்து தேவனை கொலை செய்து விளாங்காடு கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் உடலை வீசியது போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கீழ்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தேவனின் உறவினர் வடிவேலு. இவருக்கு இதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் குடும்பத்தினரிடம் ஏலச்சீட்டு பணம் தர வேண்டுமாக கூறப்படுகிறது.

    தேவனை கடந்த 10-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை கீழ் பாக்கத்துக்கு வரவழைத்த‌ வடிவேலு தேவனை அழைத்துக் கொண்டு கார்த்திக் வீட்டிற்கு சென்று சீட்டு பணம் கேட்டுள்ளார்.

    அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை எடுத்து தேவன் இரவு பைக்கில் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார். இவரை பின்தொடர்ந்து வந்த கார்த்திக், கோகுல்ராஜ், சேகர் ஆகியோர் தேவனை வழிமடக்கி கொலை செய்து கிணற்றில் வீசி உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் போலீசிடம் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் வேலூர் டி.ஐ.ஜி. ஆனி விஜயா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஷ் கண்ணன் (வேலூர்), தீபா சத்யன் (ராணிப்பேட்டை), சுதாகர் (காஞ்சிபுரம்) ஆகியோர் தலைமையில் வந்தவாசி மற்றும் கீழ் கொடுங்காலூர், பையூர், கீழ்பாக்கம், கொவளை ஆகிய கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    கொலை செய்யப்பட்ட தேவனின் குடும்பத்துக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என் மன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்பினர் நேற்று காலை முற்றுகையிட்டனர். உரிய நிவாரணம் வழங்காமல் விட்டால் தேவனின் உடலை வாங்க மாட்டோம் எனவும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

    இந்த நிலையில் பையூர் கிராமத்திற்கு நேற்று பிற்பகல் நேரில் சென்று செய்யாறு கோட்டாட்சியர் வினோத்குமார் தேவனின் குடும்பத்துக்கு முதற்கட்டமாக ரூ. 6 லட்சத்திற்கான காசோலை மற்றும் அரிசி மளிகை பொருட்கள் ஆகியவற்றை நிவாரணமாக வழங்கினர்.

    ×