என் மலர்
நீங்கள் தேடியது "Tamil Literary Forum"
- பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது
- ஏராளமான மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
வேட்டவலம்:
வேட்டவலம் அடுத்த வேளானந்தல் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா நேற்று நடந்தது.விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் கருணாகரன் தலைமையில் தாங்கினார்.
உதவி தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.தமிழ் ஆசிரி யை மகேஸ்வரி வரவேற்றார்.விழாவின் சிறப்பு விருந்தினர்களாக தனியார் கல்லூரி பேராசிரியர் திரையிசை பாடகர் செந்தில்வேலன், பட்டறைக்காடு அரசு பள்ளி தமிழாசிரியர் எழுத்தாளர் ஜெய்சங்கர், பறையம்பட்டு அரசு பள்ளி தமி ழாசிரியை லலிதா ஆகியோர் கலந்து கொண்டு தமிழ் மொழியின் பெருமைகள் மற்றும் தமிழ் இலக்கியங்களின் சிறப்புகள் குறித்து பேசினார்.
விழாவில் கலந்து கொண்ட 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்தாளர் ஜெய்சங்கர் எழுதிய தேர்வு ரசிப்பபோம், மதிப்பெண் குவிப்போம் புத்தகம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண் டனர்.முடிவில் பள்ளி மாணவி விஜயகுமாரி நன்றி கூறினார்.






