என் மலர்
திருவண்ணாமலை
- கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று காலை 8.14 மணிக்கு தொடங்கி, நாளை காலை 9.22 மணிக்கு நிறைவடைகிறது.
- தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. மகா தீபத்தை தரிசிக்க திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மலையில் மகா தீபத்தை தரிசித்தபடி, விடிய விடிய கிரிவலம் சென்று வழிபட்டனர்.
இந்நிலையில், கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று காலை 8.14 மணிக்கு தொடங்கி, நாளை காலை 9.22 மணிக்கு நிறைவடைகிறது.
எனவே, தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.
சிறப்பு பஸ்கள் இன்றும் இயக்கப்படுகிறது. மேலும், பக்தர்களின் வசதிக்காக நாளை வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தொடர்ந்து 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும்.
- நாளை அதிகாலை ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்கிறார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று அதிகாலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாலையில் பஞ்சமூர்த்திகள் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் கொடி மரத்துக்கு முன்பாக உள்ள தீப தரிசன மண்டபத்தில் தங்க விமானங்களில் பஞ்ச மூர்த்திகள் தனித்தனியாக எழுந்தருளினர்.
சரியாக மாலை 6 மணிக்கு கோவில் கொடிமரம் முன், இறைவிக்கு இறைவன் தன் உடலின் சரிபாதியை கொடுத்ததை விளக்கும் விதமாக அர்த்தநாரீஸ்வரர் வலம் வந்து ஒரு நிமிடம் தரிசனம் தந்தார்.
அப்போது சிவாச்சாரியார்கள் பஞ்சமுக தீபாராதனை காட்ட பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று கோஷமிட சங்கு, தாளம், பெருந்தாள், பேரிகைகள் முழங்க சிவதொண்டர்கள் ஆனந்த நடனமாட, மலையை நோக்கி தீப்பந்தங்கள் காட்ட, அதிர்வேட்டுகள் முழங்க 2 ஆயிரத்து 668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மீது தீபம் ஏற்றப்பட்டது.
அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர்விக்கப்படும். மகாதீபத்தை வருகின்ற 16-ந்தேதி வரை தரிசிக்கலாம்.
11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.
நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பல்வேறு வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீபராசக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பவனி நடைபெற்றது.
தீபத்திருவிழாவின் தொடர் நிகழ்வாக, இன்று இரவு ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நாளை வியாழக்கிழமை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன.
நாளை அதிகாலை ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்கிறார்.
+2
- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் இன்று காலைசிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது.
- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
விழாவின் ஒரு பகுதியாக இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை அருணாசேலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையாருக்கு அரோகரோ கோஷம் எழுப்பி மகா தீபத்தை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதைதொடர்ந்து, அண்ணாமலையார் கோயில் நுழைவாயிலில் தீபம் ஏற்றப்பட்டது.
தீபத்தை காண சுமார் 8 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் மகாதீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் மூலம் திருவண்ணாமலைக்கு வந்து குவிந்துள்ளனர். பக்தர்களுக்கு உதவுவதற்காக 83 சிறப்பு பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மகா தீபத்திற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. தீபம் ஏற்றப்படும் திரிக்காக 100 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்பட்டுள்ளது.
தீபத்தை ஏற்ற நாள்தோறும் 2 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. தீபம் ஏற்றப்படும் தீப கொப்பரையானது செம்பினால் செய்யப்பட்டது. கொப்பரையில் ஏற்றப்படும் மகா தீபம் 11 நாட்கள் எரியும்.
தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரம் மற்றும் கோவிலை சுற்றி வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் 4 டி.ஐ.ஜி., 27 போலீஸ் சூப்பிரண்டுகள் என 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நேற்று முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் திருவண்ணாமலை நகரமே போலீசாரின் முழு கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள மதுரை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 24.70 லட்சத்தில் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தெய்வானை முனியப்பன் தலைமை வகித்தார், செய்யாறு ஒன்றிய குழு தலைவர் பாபு, அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய செயலாளர் ஞானவேல், பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உறவினர்கள் மறியல்
- ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
செய்யாறு:
செய்யாறு டவுன் வைத்தியர் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் விமல் (வயது 18) ராணிப் பேட்டை மாவட்டம் கலவை யில் உள்ள தனியார் என்ஜி னீயரிங் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். தினமும் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பும் அவர் ஆற்காடு சாலையில் உள்ள டயர் கடையில் பகுதி நேர தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் மாணவர் விமல், அவரது வீட்டுகுளியலறையில் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
இது குறித்து விமலின் தாயார் அலமேலு செய்யாறு போலீசில் புகார் செய்தார். அந்தப் புகாரில், டயர் கடை உரிமையாளர் பூதேரிபுல்லவாக்கம் கிராமத் தைச் சேர்ந்த ஒரு பெண்னுடன் போனில் பேசிக் கொண்டு இருந்ததை டயர் கடை உரிமையாளர் மனைவியிடம் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டயர் கடையில் வேலை செய்யும் மற்றொரு கூலி தொழிலாளி, விமல் ஆகியோரிடம் விசாரித்ததாகவும், பின்னர் தனது மகன் விமலை தகாதமுறையில் திட்டியதாகவும், அதன் காரணமாக விமல் மனமுடைந்து தற் கொலை செய்து கொண்ட தாகவும் தெரிவித்து உள்ளார்.
தற்கொலைக்குக் காரணமாக இருந்த டயர் கடை உரிமை யாளரை கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
அந்தப் புகாரில் அடிப்ப டையில் செய்யாறு போலீ சார் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர், இறந்த விமலின் உடலைகைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடி வுற்ற நிலையில் விமலின் உடலை வாங்க மறுத்தும், டயர் கடை உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி நேற்று மாலை அண்ணா சிலை முன்பு சாலையில் விமலின் உறவினர்கள் மற்றும் வெங்கட்ராய ன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு, சப்- இன்ஸ்பெக்டர் சங் கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
- அன்னதானம் வழங்கப்பட்டது
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த செம்பூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் மற்றும் ஸ்ரீ தீப்பாஞ்சம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு வாஸ்துசாந்தி, பிரவேசபலி, கோபுர கலசம் நிறுவுதல், சுவாமி சிலைகள் நிறுவுதல், முதல் கால வேள்வி பூஜை உள்ளிட்டவை நடந்தது.
இதனைத் தொடர்ந்து கோவில் கோபுர கலசங்களின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
பின்னர் ஸ்ரீசெல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீதீப்பாஞ்சம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில் வந்தவாசி சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- இன்று 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
- திருவண்ணாமலை நகரில் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே காட்சியளிக்கின்றனர்.
திருவண்ணாமலை அருணாசேலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் மகாதீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் மூலம் திருவண்ணாமலைக்கு வந்து குவிந்து வருகின்றனர். அவர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான சிறப்பு பஸ்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்கப்படுவதால் அந்த பஸ்களும் நிரம்பியவாறு திருவண்ணாமலைக்கு வந்து கொண்டிருக்கின்றன.
இதனையொட்டி திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் நகராட்சித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறையால் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு சாலையின் இரு புறங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கிரிவலப்பாதை அடிக்கடி தூய்மை பணியாளர்களால் தூய்மை செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை நகருக்கு வரும் 9 இணைப்பு சாலைகளிலும் சோதனை சாவடிகள் அமைத்து உரிய சோதனைக்கு பின்னரே வாகனங்களை போலீசார் நகருக்குள் அனுமதித்த வருகின்றனர்.
தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரம் மற்றும் கோவிலை சுற்றி வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் 4 டி.ஐ.ஜி., 27 போலீஸ் சூப்பிரண்டுகள் என 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நேற்று முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் திருவண்ணாமலை நகரமே போலீசாரின் முழு கட்டுபாட்டிற்குள் வந்துள்ளது.
திருவண்ணாமலை நகரில் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே காட்சியளிக்கின்றனர். அனைத்து பகுதிகளிலும் போலீசார் பேரிகார்டுகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் இருந்தது போன்று தீபத் திருவிழாவின் போது பொதுமக்களுக்கு இடையூறாக போலீஸ் வாகனங்கள் அடிக்கடி சென்று வருவதை தவிர்க்க வேண்டும் என்று தீபத் திருவிழா ஆலோசனை கூட்டத்தின் போது காவல் துறையினருக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கலெக்டர் முருகேஷ் ஆகியோர் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் நேற்று திருவண்ணாமலை நகரில் எங்கு பார்த்தாலும் போலீசாரின் வாகனங்களே அணிவகுத்து சென்றன. ஒவ்வொரு உயர் அதிகாரிகளின் வாகனங்களின் பின்புறமும் அதிரடிப்படையினர் வாகனங்களும் அதிகவேத்தில் சென்றன. இன்று டிசம்பர் 6-ந் தேதி என்பதால் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மகா தீபத்திற்கு முந்தைய நாளிலேயே திருவண்ணாமலை நகர சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக இருசக்கர வாகனங்களில் சென்று வர முடியாத அளவிற்கு ஆங்காங்கே தடுப்பு அமைக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர். கிரிவலப்பாதையிலும் தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
- திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
- கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று மாலை 6 மணிக்கு மலையுச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை :
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இக்கோவிலுக்கு பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையை பக்தர்கள் அண்ணாமலை என்று பெயர் சூட்டி சிவனாக வணங்கி வருகின்றனர். பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்வார்கள்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில், இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று மாலை 6 மணிக்கு மலையுச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. இதில் 30 முதல் 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
- காமராஜுக்கும், பரிமளாவுக்கும் மீண்டும் கள்ளத்தொடர்பு சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டது.
- தாய், மகளின் கதறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு சென்றனர். அதற்குள் காமராஜ் தப்பி ஓடிவிட்டார்.
செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வீரானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பரிமளா (வயது 46). இவரது கணவர் துரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
பரிமளா தனது மகன் லோகேஷ் மகள்கள் ராஜேஸ்வரி (16) ரோகிணி ஆகியோருடன் வசித்து வந்தார்.
பரிமளா, வீரானந்தல் அருகே உள்ள அடிவாரம் கிராமத்திற்கு விவசாய வேலைக்கும், காட்டுப்பகுதியில் விறகு வெட்டுவதற்கும் சென்று வந்தார். அப்போது அடிவாரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காமராஜ் (48) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு 4 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பரிமளா, 'எனது மகள்கள் வளர்ந்துவிட்டனர். நம்முடைய பழக்கத்தை நிறுத்திக்கொள்ளலாம்' என்று காமராஜிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சமீபத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், பரிமளாவும், அவரது 2-வது மகள் ராஜேஷ்வரி (16) இருவரும் அடிவாரம் பகுதியில் உள்ள காட்டிற்கு நேற்று விறகு வெட்ட சென்றனர்.
அப்போது, அங்கிருந்த காமராஜுக்கும், பரிமளாவுக்கும் மீண்டும் கள்ளத்தொடர்பு சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த காமராஜ், தான் வைத்திருந்த கத்தியால், பரிமளாவின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரி வெட்டினார்.
இதை பார்த்து அலறி கூச்சலிட்ட பரிமளாவின் மகள் ராஜேஷ்வரி தாயை காப்பாற்ற முயன்றார். அவரையும் காமராஜ் வெட்டினார்.
தாய், மகளின் கதறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு சென்றனர். அதற்குள் காமராஜ் தப்பி ஓடிவிட்டார்.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பரிமளா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புதுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜேஷ்வரியை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராஜேஷ்வரி வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இருவரது உடலையும் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து அதேபகுதியில் பதுங்கியிருந்த காமராஜை கைது செய்தனர்.
- மனைவி மீது சந்தேகம் அடைந்த ரஞ்சித் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
- கவுசல்யாவின் தாயார் செல்வராணி கொடுத்த புகாரின் பேரில் அனக்காவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா அனுப்பத்தூர் ரோடு தெருவை சேர்ந்தவர் ராஜா மகன் ரஞ்சித் (வயது 27). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் எதிர் வீட்டில் உள்ள நெடுஞ்செழியன் என்பவரது மகள் கவுசல்யா (23) என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கவுசல்யா செய்யாறு சிப்காட் ஷூ தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், ரஞ்சித்துக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அடிக்கடி தகராறு செய்து வந்தார். அப்போது உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்துள்ளனர்.
இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தம்பதியிடைய தகராறு ஏற்பட்டது. அப்போது அனக்காவூர் போலீசில் கவுசல்யா புகார் செய்தார். இதையடுத்து போலீசார் ரஞ்சித்தை எச்சரித்து ஒழுங்காக குடும்பம் நடத்த அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை மனைவி மீது சந்தேகம் அடைந்த ரஞ்சித் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் ஆத்திரமடைந்த ரஞ்சித் கவுசல்யாவின் கழுத்தை அவரது தாலி கயிற்றாலும், துப்பட்டாவாலும் இறுக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து தனது 1½ வயது மகன் கபிலேஷை தூக்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த அனக்காவூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் கன்னியப்பன், மனோகர் ஆகியோர் விரைந்து வந்து கவுசல்யாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கவுசல்யாவின் தாயார் செல்வராணி கொடுத்த புகாரின் பேரில் அனக்காவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.
- கால்நடைகளுக்கு நோய் தொற்று பாதிப்பு இருக்கிறதா என பரிசோதிக்கப்படுகிறது
- ரேக்ளா ரேஸ் வண்டிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற தீபத்திரு விழாவின் முக்கிய அம்ச மாக, பாரம்பரிய குதிரை சந்தை ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பர வல் காரணமாக தீபத்திரு விழாவில் குதிரை சந்தை நடைபெறவில்லை. இந் நிலையில், இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்து டன் குதிரை சந்தை நேற்று தொடங்கியது.
அதன்படி, கிரிவலப் பாதையில் உள்ள அரசு கலைக் கல்லூரி சந்தைத் திடலில், குதிரை சந்தை களைகட்டியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விற் பனைக்காக குதிரைகள் கொண்டுவரப்பட்டுள் ளன. அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கால் நடை சந்தைக்கு பல்வேறு வகையான மாடுகள் விற்ப னைக்காக கொண்டுவரப் பட்டுள்ளன.
அதேபோல், குதிரை சந்தை அமைந் துள்ள பகுதிகளில் விதவிதமான ரேக்ளா ரேஸ் வண்டிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை, பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வை யிட்டனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயன்பாட்டில் இருந்த குதிரை வண்டிக ளின் பயன்பாடு பெரும் பாலும் குறைந்துவிட்டது.ஆனாலும், திருவண்ணா மலை தீபத்திருவிழாவில் பராம்பரியமாக குதிரை சந்தை தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குதிரை சந்தை மற்றும் கால்நடை சந்தையில், சிறப்பு கால் நடை மருத்து முகாம் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. விற்பனைக்கு கொண்டுவ ரும் கால்நடைகளுக்கு நோய் தொற்று பாதிப்பு இருக்கிறதா என பரிசோ திக்கப்படுகிறது.
- அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை
- அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் பங்கேற்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வேங்கிகாலில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
அக்ரிகிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் நாராயணன் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை போளூர், கீழ்பென்னாத்தூர் செங்கம் ஆகிய தொகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டன.






