என் மலர்
திருவண்ணாமலை
- 2024-ம் ஆண்டு ஒரு புதிய பாரதத்தை படைப்போம் என்று சூளுரை
- பிறந்த நாள் பரிசாக இமாசல பிரதேச வெற்றியை காங்கிரஸ் தொண்டர்கள் அளித்ததாக பெருமிதம்
திருவண்ணாமலை:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தளபதி பேரவை தலைவர் ஏ.ஆர்.ரகுமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த பிறந்தநாளில் தாங்கள் நல்ல மனநிலையோடும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்வைப் பெற்று தாங்கள் பொது வாழ்வில் இன்னும் மலர்ந்திட காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களின் அனைத்து ஆசைகளையும் பூர்த்தி செய்திட உங்களுக்கு தொடர்ந்து தளபதி பேரவை வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த பிறந்த நாளில் காங்கிரஸ் கட்சி இமாசல பிரதேசத்தில் வெற்றி பெற்றிருப்பது அங்கே காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உங்களுக்கு வழங்கிய பிறந்தநாள் பரிசு என்றும் இந்த பரிசுத்தோடு வருகிற 2004-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று புதிய பாரதத்தை படைக்க உங்களுக்கு தொடர்ந்து நம்முடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்று 2024-ம் ஆண்டு ஒரு புதிய பாரதத்தை நாம் படைப்போம் என்றும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் இந்த பிறந்த நாளில் உங்களுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்குகிறோம்.
தளபதி பேரவை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறி உள்ளார்.
- கார்த்திகை தீப விழாவின் போது தூய்மை பணியில் ஈடுபட்டனர்
- நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 6-ந் தேதி மாலை கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது.
இதையொட்டி திருவண்ணாமலைக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக வந்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் இருந்து நேற்று காலை வரை பவுர்ணமி நீடித்ததால் தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.
கிரிவலப் பாதையை தூய்மை பணி மேற்கொள்ள 20-க்கும் மேற்பட்ட நகராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் திருவண்ணாமலை நகரத்திற்கு வந்தனர்.
தூய்மை பணியில் ஈடுபட்ட அவர்களை திருவண்ணாமலை நகராட்சி சார்பில் பாராட்டி உணவு மற்றும் பரிசுகள் வழங்கி வழி அனுப்பும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமை தாங்கி தூய்மை பணியாளர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
மேலும் அவர்களுக்கு உணவை பரிமாறினார். அப்போது நகரமன்றத் துணைத்தலைவர் ராஜாங்கம், தூய்மை அருணை மேற்பார்வையாளர் கார்த்தி வேல்மாறன், நகராட்சி ஆணையாளர் முருகேசன், நகராட்சி பொறியாளர் நீலேஸ்வர், நகராட்சி மேலாளர் பிரகாஷ் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
- மது வாங்கி கொடுத்து தாக்குதல்
- வாலிபர் கைது
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த துரிஞ்சிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் மணிகண்டன் (27). போளூர் அடுத்த பூங்கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் பூங்காவனம் மகன் தங்கதுரை (30). இருவரும் சென்னையில் கட்டிட தொழிலாளர்களாக வேலை செய்து வந் தனர்.
அப்போது இருவ ரும் நண்பர்கள். அந்த அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணிகண்டன், தங்கதுரைக்கு ரூ.5 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தை அவர் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. பல முறை கேட்டும் கடனை திருப்பி தராததால் தங்கதுரைக்கும், மணி கண்டனக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் வேலை இல்லாததால் இருவரும் அவரவர் சொந்த கிராமங்களுக்கு வந்து, கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதி பூங்கொல்லைமேடு வழியாக சென்றுகொண்டிருந்த தங்கதுரையை, மணிகண்டன் மது அருந்த பைக்கில் அழைத்து சென்றுள்ளார். இருவருக்கும் போதை தலைக்கேறிய நிலையில், தங்கதுரை என்னிடமே கொடுத்த கடனை திரும்ப கேட்கிறாயா? என்று சொல்லியபடி அங்கிருந்த விறகு கட்டையால் மணிகண்டனை சரமாரியாக தலை மற்றும் முகத்தில் தாக்கியுள்ளார்.
இதையடுத்து அப்பகுதி மக்கள், ரத்த காயங்களுடன் மணிகண்டன் மயங்கி கிடப்பதாக அவரது, தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் உத வியுடன், மகனை மீட்டு போளூர் அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். இதையடுத்து அங்கிருந்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் நேற்று உ யிரிழந்தார்.
இதுகுறித்து மணி கண்டனின் தந்தை சிவக்குமார் கொடுத்த புகாரின்பேரில் போளூர் போலீசார் கொலை வழக்காக மாற்றி தங்க துரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- லாரியை மடக்கி பிடித்து போலீசார் சோதனை
- லாரி டிரைவர் கைது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட் டம் வெறையூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரேசன் அரிசி கடத் தப்பட்டு வருவதாக திருவண்ணாமலை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து நேற்று காலை அந்த பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது சின்னகல்லப் பாடி வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்ற லாரியை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அதில் 50கிலோ, 25கிலோ எடை கொண்ட ரேசன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது. இதன் மொத்த எடை 4900 கிலோ ஆகும். இதையடுத்து போலீசார் லாரியை ஓட்டி வந்த திருப் பத்தூர் பாரதிதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (வயது 43) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் வெறையூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து ரேசன் அரிசி வாங்கி அதனை கர்நாடக மாநிலத் திற்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் லாரியுடன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்
- சரவணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்காக பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று பெருமிதம்
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் யூனியனில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணியை சரவணன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணியானது நமது மாவட்டத்தில் கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கி அந்தந்த பகுதிகளில் தினமும் நடந்து வருகிறது.
இப்பேரனியின் நோக்கமே குழந்தை திருமணத்தை தடுத்தல் குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுத்தல் குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல் புதுமைப்பெண் திட்டத்தை அனைவரிடமும் கொண்டு சேர்த்தல் பெண் கல்வியை ஊக்குவித்தல் பாலின வன்முறைக்கு எதிரான செயல்களை தடுத்தல் பெண்களுக்கு சமூகத்தில் சம வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பிறந்த குழந்தைகளை நேரடியாக தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைத்தல் ஆகியவைகள் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைகளாகும் இவைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது தான் இப்பேரணியின் நோக்கம் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்காக பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இத்திட்டங்களின் மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் முன்னேற்ற பாதையில் செல்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் மேலும் நமது மாவட்டத்தின் அமைச்சர் எவ வேலு தனியார் நிறுவனங்களை அழைத்து வந்து வேலைவாய்ப்பு முகாமை ஏற்படுத்தினார் இம்முகாம்களில் ஆண்களை விட அதிக அளவு பெண்கள் தான் தேர்வானார்கள் எனவே பெண்கள் எதற்காகவும் வீட்டில் முடங்காமல் வெளியில் வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் அன்பரசிராஜசேகரன் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் எழிலரசி உட்பட அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மகளிர் திட்ட அணியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்
- ஏராளமான பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்தனர்.
- இன்று இரவு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவத்தில் பவனி வருகிறார்.
திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவின் நிறை வாக நடைபெறும் தெப் பல் உற்சவத்தின் 2ம் நாளான நேற்று அய்யங்கு ளத்தில் பராசக்தி அம் மன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்து அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடந்து முடிந்த கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக, அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் விமரிசையாக நடந்து வருகிறது. அதன் படி, தெப்பல் உற்சவத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் இரவு சந்திரசேகரர் தெப்பலில் பவனி வந்தார்.
அதைத்தொடர்ந்து, 2ம் நாளான நேற்று இரவு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பராசக்தி அம்மன் அய்யங்குளத்தில் பவனி வந்து பத்தர்களுக்கு அருள்பாலித் தார். அப்போது, அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்தனர்.
முன்னதாக, இரவு 8 மணி அளவில், அண்ணாமலையார் கோவிலில் இருந்து மேள தாளம் முழங்க பராசக்தி அம்மன் புறப்பாடு நடைபெற்றது.
தெப்பத்தை முன்னிட்டு, அய்யங்குளத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. குளத்துக்குள் பக்தர்கள் இறங்க அனுமதிக்கவில்லை. தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இன்று இரவு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவத்தில் பவனி வருகிறார்.
- பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது
- சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் உத்தமராய பெருமாள் கோயிலில் நேற்று 7-ந்தேதி விஷ்ணு கார்த்திகை தீப விழா முன்னிட்டு பூதேவி ஸ்ரீதேவி சமேத உத்தமராய பெருமாளுக்கு மாலையில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.தொடர்ந்து திருவீதி உலாவுக்குப் பின் மந்தைவெளி பகுதியில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கிராமப் பொதுமக்கள் செய்திருந்தனர். மேலும் கார்த்திகை தீபம் என்பதால் பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு தீபமேற்றி வழிபாடு செய்தனர்.
- உட்பிரகார உலா நடந்தது
- ஏராளமானோர் சாமி தரிசனம்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று இரவு பவுர்ணமி வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து கோகிலாம்பாள் சமேத கல்யாணசுந்தரேசுவரர் ரத உட்பிரகார உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை சிவனடியார்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
- சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
- விசாரணை நடத்த பக்தர்கள் வலியுறுத்தல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாதீ பத்திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை கோவிலில் பர ணிதீபம் ஏற்றப்பட்டது. அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட் டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முற்பட்டனர்.
எனினும் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பரணி தீப தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் வெளியே காத்திருந்தனர். எப்படியாவது உள்ளே சென்று விடலாம் என அவர்கள் முயன்ற வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில் பரணி தீப் அனுமதி சீட்டு சிலரால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்கப்பட்டதாக கூறப்படு கிறது. அனுமதி சீட்டினை சிலர் முறைகேடாக விற்பனை செய் வது போன்ற வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அருகே உள்ள துரிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் மகன் மணிகண்டன் (வயது 24). சென்னை அடையாறு சத்யா நகரில் கட்டிட மேஸ்திரியாக உள்ள இவரிடம் ஆத்துவாம்பாடி ஜோதி நகர கொல்லமேட்டில் வசிக்கும் பூங்காவனம் மகன் தங்கதுரை (36) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
அப்போது மணிகண்டனிடம் தங்கதுரை ரூ. 5 ஆயிரம் கடனாக வாங்கியிருந்தார். பின்னர் தங்கதுரை தனது ஊருக்கு வந்து பசுபதி என்பவர் வீட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார். இதனிடையே மணிகண்டன் கடந்த 4-ந் தேதி தனது ஊரில் நடந்த விழாவில் கலந்து கொள்ள வந்தபோது, தங்க துரையுடன் சேர்ந்து பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டில் மது அருந்தியதாக தெரிகிறது.
அப்போது தங்கதுரை, மணிகண்டனிடம் கொடுத்த பணத்தை கேட்பாயா? என தகராறு செய்து விறகு கட்டை யால் அடித்துவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தார். இதில் படு காயமடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள் ளார். இது குறித்து அவரது தந்தை சிவக்குமார், தனது மகனை 'கொலை செய்ய முயற்சி செய்து தங்கதுரை தாக்கியுள்ளார் என போளூர் போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் அய்யப் பன் ஆகியோர் தங்கதுரை மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
- ஏராளமான தற்காலிக கடைகளும் அமைக்கப்பட்டு இருந்தன
- கால்நடைத் துறை சார்பில் மருத்துவ முகாம் நடந்தது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில் நேற்று மாலை மகாதீபம் ஏற்றப்பட்டது. தீபத்திருவிழா வையொட்டி நடைபெறும் தேரோட்டத்தின் போது பாரம்பரியமாக குதிரை சந்தை, மாட்டு சந்தை நடை பெற்று வருகிறது.
இந்த ஆண்டிற்கான குதிரை, மாட்டு சந்தை கடந்த 3-ந் தேதி தொடங்கியது. திரு வண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அரசு கலைக் கல்லூரி அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்த மான சந்தை திடலில் நடந்த இந்த சந்தையில் குறைந்தஅள விலான மாடுகளே கொண்டு வரப்பட்டு விற்பனை நடை பெற்றது.
இந்த நிலையில் நேற்று சந் தையில் விற்பனை களை கட்டியது. குதிரை சந்தைக்காக திருவண்ணாமலை மட்டு மின்றி திருப்பூர், ஈரோடு, புதுக்கோட்டை, பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான குதிரைகள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதில் பல ரக குதிரைகள் சந்தைப்படுத்தப் பட்டு உள்ளது.
அதேபோல் மாட்டு சந்தை யிலும் பல்வேறு மாவட்டங் களில் இருந்து பல்வேறு வகை மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. ஏராளமான வியாபாரிகள், விவசாயிகள் அங்கு குவிந்து மாடு, குதிரைகளை வாங்கிச் சென்றனர்.
சந்தைக்கு அருகிலேயே மாடு மற்றும் குதிரைக்கு கட்டுவதற்கு தேவையான மணி, கயிறு விற்பனை செய்வதற்காக ஏராளமான தற்காலிக கடைகளும் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த கடைகளில் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்ற னர்.
மேலும் கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் ஏதும் ஏற்ப டாமல் இருக்க கால்நடைத் துறை சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. ஏராள மான மக்கள் இந்த சந்தையை நேரில் சென்று பார்வையிட்டனர். இதனால் குதிரை சந்தை நடைபெற்ற பகுதியில் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.
- வந்தவாசி வெண்குன்றம் கோவிலில் 1,440 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேடு, பெரியமலை திருமணிச்சேறை உடையார், சிவன் கோவிலில் கார்த்திகை மாத மகா தீப திருவிழா நடந்தது.
பின்னர் மாலையில் பெரியமலை உச்சியில்108 நெய் மூலம் பெரிய கொப்பரை செய்து வைத்து. சிவயோகி சித்தர் பெருமாள் சுவாமிகள், திருமணி சேறைஉடையார் சிவலிங்கத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்து பெரிய அகல் விளக்கை மேளதாளம் முழங்க கோவில் உச்சியில் உள்ள கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக சொல்வாக்கு சித்தர் லலிதாம்பிகை அம்மாள் பக்தர்களுக்கு விபூதி, குங்குமம், கயிறு, ஆகியவற்றை வழங்கி அருள் ஆசி வழங்கினார்.
நாதஸ்வர கலைஞர்களால் இன்னிசை கச்சேரி நடந்தது. பின்னர் பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.
கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் நேற்று 8-ம் ஆண்டாக கார்த்திகை தீப விழா சிறப்பாக நடைபெற்றது.
அர்த்தநாரீஸ்வரர் முன்னிலையில் 45 அடி உயர தீப கம்பத்தில் மகாதீபத்தை விழா குழுத்தலைவர் சரவணன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஆரணி ஜோதிடர் குமரேசன், மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி திருமால், ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணிஆனந்தன், துணை தலைவர் சாலம்மாள், அன்பரசு, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழு தலைவர் சிவ சரவணன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். இதேபோல் கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோவிலிலும் கார்த்திகை தீப விழா சிறப்பாக நடைபெற்றது. மாலை கோயில் முன்பு 108 அடி உயர சிவலிங்கம் மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சிவனடியார்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
கார்த்திகை தீபத்தையொட்டி நேற்று அனைத்து கோவில்க ளிலும் மகாதீபம் ஏற்றப்பட்டது. ஆரணி டவுன் புதுகாமூர் பகுதியில் அமைந்துள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் சிவன் கோவிலில் கசுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மகா அலங் காரம் செய்து தீபாராதத்துடன் நடைபெற்றது. மாலையில் கோவில் மேல்தளத்தில் பெரிய செப்பு கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதேபோன்று கோட்டை கயிலாயநாதர் கோவில், கோட்டை வேம்புலி அம்மன் கோவில், அரியாத்தம்மன் கோவில், பூமிநாதர் கோவில், அருணாசலேஸ்வரர் கோவில், வேதபுரீஸ்வரர் கோவில், பையூர் - சேவூர் பகுதியில் உள்ள விருப்பாச்சீஸ்வரர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பெரிய கொப்பரைகள், பெரிய அகண்டத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அனைத்து வீடுகளிலும், கடை, அலுவலகம், தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது.
வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1,440 அடி உயர மலை உச்சியில் மாலை 6 மணி அளவில் தவளகிரி ஈஸ்வரர் கோவிலின் கோபுரத்தின் மேல் வைக்கப்பட்ட அகண்டத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
மகா தீபம் ஏற்றப்பட்டபோது பக்தர்கள், 'அரோகரா', 'அரோகரா' என பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். தாசில்தார் முருகானந்தம் மேற்பார்வை யில் பாதுகாப்பு ஏற் பாடுகளை வந்தவாசி துணை சூப்பிரண்டு கார்த்திக் தலை மையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு போளூரில் சுமார் ஆயிரம் அடி உயரமுள்ள நரசிம்ம பெருமாள் மலை மீது மாலை தீபம் ஏற்றப்பட்டது. அதேபோல் போளூர் நற்குன்ற ஸ்ரீ பாலமுருகன் கோவில் மலை மீதும் தீபம் ஏற்றப்பட்டது.
கலசபாக்கம் அடுத்த பருவதமலையில் 4 ஆயிரத்து 568 உயரத்தில் மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில் உள்ளது. பவுர்ணமி,வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தென்மகா தேவமங்கலம், அருணகிரி மங்கலம், கோவில்மாதிமங்கலம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் நேற்று காலை தீபம் ஏற்றுவதற்காக கொப்பரைக்கு தீபாரா தனை செய்து மலை உச்சிக்கு எடுத்துச் சென்றனர்.
அங்கு மாலை 6 மணிக்கு கொப்பரையில் நெய் ஊற்றி மகாதீபம் ஏற்றபட்டது. இதனை யொட்டி நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலை மீது ஏறி சென்று சாமி தரிசனம் செய்தனர். பருவதமலை அடிவார பகுதியை சேர்ந்தவர்களும், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்களும் மலை மீது ஏற்றிய தீபத்தை பார்த்து வணங்கி விட்டு தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.






