என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோனியா காந்திக்கு தளபதி பேரவை சார்பில் பிறந்தநாள் வாழ்த்து
    X

    சோனியா காந்திக்கு தளபதி பேரவை சார்பில் பிறந்தநாள் வாழ்த்து

    • 2024-ம் ஆண்டு ஒரு புதிய பாரதத்தை படைப்போம் என்று சூளுரை
    • பிறந்த நாள் பரிசாக இமாசல பிரதேச வெற்றியை காங்கிரஸ் தொண்டர்கள் அளித்ததாக பெருமிதம்

    திருவண்ணாமலை:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தளபதி பேரவை தலைவர் ஏ.ஆர்.ரகுமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்த பிறந்தநாளில் தாங்கள் நல்ல மனநிலையோடும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்வைப் பெற்று தாங்கள் பொது வாழ்வில் இன்னும் மலர்ந்திட காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களின் அனைத்து ஆசைகளையும் பூர்த்தி செய்திட உங்களுக்கு தொடர்ந்து தளபதி பேரவை வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

    இந்த பிறந்த நாளில் காங்கிரஸ் கட்சி இமாசல பிரதேசத்தில் வெற்றி பெற்றிருப்பது அங்கே காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உங்களுக்கு வழங்கிய பிறந்தநாள் பரிசு என்றும் இந்த பரிசுத்தோடு வருகிற 2004-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று புதிய பாரதத்தை படைக்க உங்களுக்கு தொடர்ந்து நம்முடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்று 2024-ம் ஆண்டு ஒரு புதிய பாரதத்தை நாம் படைப்போம் என்றும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் இந்த பிறந்த நாளில் உங்களுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்குகிறோம்.

    தளபதி பேரவை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறி உள்ளார்.

    Next Story
    ×