என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடனை திருப்பி கேட்ட நண்பர் அடித்து கொலை
- மது வாங்கி கொடுத்து தாக்குதல்
- வாலிபர் கைது
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த துரிஞ்சிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் மணிகண்டன் (27). போளூர் அடுத்த பூங்கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் பூங்காவனம் மகன் தங்கதுரை (30). இருவரும் சென்னையில் கட்டிட தொழிலாளர்களாக வேலை செய்து வந் தனர்.
அப்போது இருவ ரும் நண்பர்கள். அந்த அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணிகண்டன், தங்கதுரைக்கு ரூ.5 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தை அவர் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. பல முறை கேட்டும் கடனை திருப்பி தராததால் தங்கதுரைக்கும், மணி கண்டனக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் வேலை இல்லாததால் இருவரும் அவரவர் சொந்த கிராமங்களுக்கு வந்து, கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதி பூங்கொல்லைமேடு வழியாக சென்றுகொண்டிருந்த தங்கதுரையை, மணிகண்டன் மது அருந்த பைக்கில் அழைத்து சென்றுள்ளார். இருவருக்கும் போதை தலைக்கேறிய நிலையில், தங்கதுரை என்னிடமே கொடுத்த கடனை திரும்ப கேட்கிறாயா? என்று சொல்லியபடி அங்கிருந்த விறகு கட்டையால் மணிகண்டனை சரமாரியாக தலை மற்றும் முகத்தில் தாக்கியுள்ளார்.
இதையடுத்து அப்பகுதி மக்கள், ரத்த காயங்களுடன் மணிகண்டன் மயங்கி கிடப்பதாக அவரது, தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் உத வியுடன், மகனை மீட்டு போளூர் அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். இதையடுத்து அங்கிருந்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் நேற்று உ யிரிழந்தார்.
இதுகுறித்து மணி கண்டனின் தந்தை சிவக்குமார் கொடுத்த புகாரின்பேரில் போளூர் போலீசார் கொலை வழக்காக மாற்றி தங்க துரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






