என் மலர்
திருவண்ணாமலை
- கடந்த 6-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
- மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் சுடர் விட்டு எரிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கடந்த 6-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை மீது காட்சி அளிக்கும். இந்த நிலையில் 5-வது நாளான இன்று அதிகாலையில் மிதமான சாரல் மழை பெய்தது. அந்த சமயத்தில் பலத்த சூறைக்காற்றும் வீசியது. இந்த காற்றிலும் 2,668 அடி உயரம் கொண்ட மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் சுடர் விட்டு எரிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தது. இதனை பக்தர்கள் பக்தி பரவத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.
- பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு
- போக்குவரத்து பாதிப்பு
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சிக்குபட்ட சுபான்ராவ்பேட்டை இருளர் காலனி பகுதியில் சுமார் 70 ஆண்டு காலமாக 15 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
பட்டா கேட்டு மாவட்ட நிர்வாகம் வருவாய் துறைகளுக்கு பல முறை மனு அளித்தனர்.
இதுவரை பட்டா வழங்காததால் ஆத்திரமடைந்த அவர்கள் ஆரணி செய்யார் சாலை சுபான்ராவ்பேட்டை கூட்ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த வருவாய் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில் சாலைமறியலை கைவிட்டனர்.
இதனால் ஆரணி செய்யார் சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்பட்டது.
- பக்தர்கள் வருகை அதிகரிப்பால் வருகிற 16-ந் தேதி வரை அமர்வு தரிசனம் ரத்து
- இன்று இரவு சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று (சனிக்கிழமை) நிறைவடைகிறது. மேலும் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகளவில் உள்ளதால் வருகிற 16-ந் தேதி வரை அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழா நாட்களில் தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி கடந்த 6-ந் தேதி நடைபெற்றது.
அன்று காலையில் கோவில் வளாகத்தில் பரணி தீபமும், மாலையில் 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. மகா தீபத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். தொடர்ந்து 7-ந் தேதி காலையில் இருந்து மறுநாள் 8-ந் தேதி காலை வரை பவுர்ணமி நீடித்ததால் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தெப்பல் உற்சவம் கடந்த 7-ந் தேதி தொடங்கியது.
இரவு கோவில் அருகில் உள்ள அய்யங்குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம். நேற்று முன்தினம் காலையில் அருணாசலேஸ்வரர் கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து இரவு பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் நேற்று சுப்பிரமணி சாமி தெப்பல் உற்சவமும் நடைபெற்றன.
இன்று (சனிக்கிழமை) மாலை சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவ டைகிறது. அப்போது சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வர உள்ளார்.
கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் கடந்த 6-ந் தேதி ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் மாலை நேரத்தில் ஏற்றப்பட்டு தொடர்ந்து காட்சி அளிக்கும்.
அதன்படி வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை மகா தீபம் காட்சி அளிக்கும். மகா தீபத்தை தரிசனம் செய்ய தொடர்ந்து பக்தர்கள் வருகை தருவதால் அருணாச லேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்ப டுகிறது.
இதனால் வருகிற 16-ந் தேதி வரை கோவிலில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
- திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தகவல்
- 4 மீ, உயரமும் 7மீ, அகலத்திலும் கற்செதுக்கு உருவங்கள் காணப்படுகின்றன
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள சிங்கமலை அடிவாரத்தில் 4 ஆயிரம் ஆண்டு கள் பழமையான கற்செதுக்கு உருவங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நடுவத்தின் வரலாற்று ஆய்வாளர்கள் பாரதிராஜா, சீனுவாசன், பால வெளி முருகன் ஆகியோர் குறிப்பிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"குகையின் மேற்கு நோக்கிய பாறையில் சுமார் 4 மீ., உயரமும், 7மீ., அகலத்திலும் கற்செதுக்கு உருவங்கள் காணப்படுகின்றன. குகையின் தரைப்பகுதியில் உள்ள இரு சிறிய பாறைகளை பயன்படுத்தி உயரமான இடங் களில் உருவங்களை செதுக்கி உள்ளனர்.
வலது பகுதியில் திமிலுடன் குகை சுவற்றின் மேற்பகுதியில் திமிலுடன் கூடிய காளையும், வால் பகுதியின் அருகே ஒரு மனிதனும் காணப்படுகிறது. இதற்கு கீழே கூடிய மற்றொரு காளையும், இதன் கழுத்து பகுதிக்கு கீழ் ஒரு மனிதனும், முகத்துக்கு முன்பு இரண்டு மனிதர்களும் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் ஒரு மனிதன் காணப் படுகிறார். உடல்வாகு பெற்ற காளையின் வால் பகுதியில் மனிதர்கள் என்பதை விளக்க, அவர்களது கைகள் வலிமையான புஜத்துடன் இடம் பெற்றுள்ளது.
இதேபோன்று பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன" என தெரிவித் துள்ளனர்.
ஓவிய ஆய்வாளர் காந்தி ராஜன் கூறும் போது, "குகை சுவற்றில் கால்நடை செதுக்கப்பட்டுள்ளன. திமிலுடன் எவ்வித ஆயுதங்களும் இல்லால் மனிதர்கள் காணப்படுவதால், அணுகு முறையில் செதுக்கப் பட்டிருக்கலாம். வேட்டை சமூகம், கால்நடை சமூகமாக மாறும் போது, வனத்தில் உள்ள மாடுகளை பிடித்து பழக்கப் படுத்துவது என்பது முக்கிய நிகழ்வாகும்.
இந்த கற்செதுக்கு களும், இதுபோன்ற ஒரு நிகழ்வை நினைவு கூற உருவாக்கப்பட்டிருக்கலாம்.
மேலும், பாறை சமூகம் சார்ந்த உருவங்கள் மாடுகளும், இதனை சுற்றி மாடுகளை பிடிப்பது போன்ற மாடுகளை பிடிப்பது போன்றகை பாவனையோடு மனிதர்கள் காணப்படுவதால், இன்றைய ஏறு தழுவுதல், ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஒத்த நிகழ்வாக கருதலாம்.
இந்த கற்செதுக்குகள் போலவே நீலகிரி மாவட்டம் கரிக்கையூர் மற்றும் மதுரை அடுத்த அணைக்கட்டி பாறை ஓவியங்களும் காணப்படுகின்றன. செத்தவரை அய்யனார் மலையில் உள்ள பாறை ஓவியங்களில் உள்ள காளைகளை போன்றே, இங்கேயும் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த கற்செதுக்கு உருவங் கள் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். இதுபோன்ற கற்செதுக்கு உரு வங்கள், வெகு சில இடங்களில் மட்டுமே கிடைத்து ள்ளது என்பதால், இந்த இடங்கள் பாதுகாக் கப்பட வேண்டும்" என்றார்.
- 3 மின் கம்பங்கள் சேதமடைந்தது
- மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் அவதி
வந்தவாசி:
வந்தவாசி- ஆரணி நெடுஞ்சா லையில் காற்றுடன் பெய்த மழையில் வேரோடு மரம் சாய்ந்தது. இதில் 3 மின் கம்பங்கள் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப் பட்டது. இதையடுத்து சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலை மற்றும் மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள னர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி- ஆரணி நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிக் காக, இருபுறங்களிலும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக தோண்டப் பட்ட பள்ளத்தால் சாலை யோரம் இருந்த ஒரு மரத் தின் வேர்ப்பகுதியில் வலுவிழந்திருந்ததாக தெரிகிறது. மாண்டஸ் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் காற்றுடன் மழை பெய்தது.
இதில் வந்தவாசி- ஆரணி நெடுஞ்சாலை யோரம் இருந்த ஒரு மரம் வேரோடு சாலையின் குறுக்கே சாய்ந்தது. இதனால் மின்கம்பிகள் அறுந்து, 3 மின்கம்பங்கள் உடைந்துசேதமானது.
இதனால் அப்ப குதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மின் சாரம் துண்டிக்கப்பட்டது.
மேலும் தகவல் அறிந்த நெடுஞ்சா லைத்துறை, மின்வாரிய அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து ஊழியர் கள் மூலம் சாலையில் வேரோடு சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தி போக் குவரத்தை சீரமைத்தனர். மேலும் மின்கம்பங்களை சீரமைத்து மின்சப்ளை வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- பூட்டை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
கலசபாக்கம் அடுத்த கேட்டவரம்பாளையம் ஆவின் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் உள்ளது. இங்கு பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது.
இதுகுறித்து பொறுப்பாளர் பாண்டியன் கடலாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். கேட்டவரம்பாளையம் ஆவின் தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையத்தின் ஜன்னல் மற்றும் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருக்கும் சி.சி.டி.வி. கேமராவை உடைக்கப்பட்டு அலுவலகத்தில் உள்ள முக்கிய பொருள்களையும் ஆவணங்களையும் திருட முயற்சி செய்துள்ளதாக புகார் செய்துள்ளார்.
இதன் பெயரில் கடலாடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- பாதுகாப்பு டேக் மூலம் கூட்டத்தில் தொலைந்த 14 குழந்தைகள் மீட்பு
- அடிப்படை வசதிகள் செய்ய 96 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கடந்த 6-ந் தேதி மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் 35 லட்சம் பக்தர்கள் மகாதீப தரிசனம் செய்தனர்.
கடந்த ஆண்டுகளை விடஅதிக எண்ணிக்கையில் அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் செய்து தரப்பட்டது.
176 இடங்களில் குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டது. 12 குடிநீர் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. 92 இடங்களில் 330 கழிப்பறைகள் அமைக்கப்பட்டது. 20 செப்டிக் டேங்க் கசடு நீக்கும் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. 1470 எண்ணிக்கையில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டன. 5000 தூய்மை பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்த ஆண்டு முதன் முறையாக அடிப்படை வசதிகளை செயல்படுத்தவும் கண்காணிக்கவும் 96 குழுக்கள் அமைக்கப்பட்டன. குறிப்பாக கிரிவலப் பாதை 14 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குழுக்கள் அமைக்கப்பட்டது.
திருவண்ணாமலை மற்றும் பிற பகுதிகளில் இருந்து வருகை தந்த தூய்மை பணிக்காக அமைக்கப்பட்ட குழுவினர் உடனுக்குடன் தூய்மை பணியினை மேற்கொண்டு குப்பைகளை அகற்றியதுடன் கிரிவலப் பாதை உள்ளிட்ட அனைத்து இடங்களையும் தூய்மையாக வைத்திருந்தனர்.
பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து பஸ்கள் 6520 நடைகள் இயக்கப்பட்டு சுமார் 6 லட்சம் பக்தர்கள் பயணம் செய்துள்ளனர். 05.12.2022 முதல் 08.12.2022 வரை 36 சிறப்பு ரயில்கள் உட்பட 75 தடவை இயக்கப்பட்டன. தற்காலிக பஸ் நிலையம் முதல் கிரிவலப் பாதை வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் 40 மினி பஸ்கள் மற்றும் 100 தனியார் பஸ்கள் என மொத்தம் 140 பஸ்கள் கட்டனாமின்றி இயக்கப்பட்டது. 101 இடங்களில் அன்னதானம் செய்யபட்டது.
சுமார் 20,52,470 பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது.
மருத்துவ முகாம்களில் 7.5 லட்சம் பக்தர்கள் பயன்பெற்றுள்ளனர். ரூ.7.24 லட்சம் மதிப்பிலான மாத்திரை மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளது.
20 எண்ணிக்கையில் 108 அவசர ஊர்தி வாகனங்கள், 15 பைக் ஆம்புலன்ஸ் மற்றும் 5 மலையேறும் அவசர கால மருத்துவ குழுக்கள் செயல்பட்டு சுமார் 400 நபர்கள் வரை பயனடைந்துள்ளனர்.
பாதுகாப்பு பணியில் 13,061 காவலர்கள் ஈடுபட்டனர். 85 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டது. 500 கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் 10 டிரோன் பயன்படுத்தப்பட்டது. 85 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டது. 15,000 குழந்தைகளின் கைகளில் பாதுகாப்பு டேக் கட்டப்பட்டது. இதன் மூலம் கூட்டத்தில் தொலைந்த 14 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
- 16-ந் தேதி வரை அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
- 16-ந் தேதி வரை மகா தீபம் காட்சி அளிக்கும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. அன்று காலையில் கோவில் வளாகத்தில் பரணி தீபமும், மாலையில் 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. மகா தீபத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். தொடர்ந்து 7-ந் தேதி காலையில் இருந்து மறுநாள் 8-ந் தேதி காலை வரை பவுர்ணமி நீடித்ததால் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தெப்பல் உற்சவம் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. 7-ந் தேதி இரவு கோவில் அருகில் உள்ள அய்யங்குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. நேற்று முன்தினம் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக அன்று காலையில் அருணாசலேஸ்வரர் கிரிவலம் நடைபெற்றது. சாமி கிரிவலம் சென்று கோவிலை அடைந்த பின்னர் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து அய்யங்குளத்திற்கு வந்தார். பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற்றது. அப்போது கடுமையான பனிப்பொழிவு இருந்தது. மக்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் தெப்பல் திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று இரவு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.
இன்று (சனிக்கிழமை) மாலை சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவடைகிறது. அப்போது சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வர உள்ளார்.
கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் கடந்த 6-ந் தேதி ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் மாலை நேரத்தில் ஏற்றப்பட்டு தொடர்ந்து காட்சி அளிக்கும். அதன்படி வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை மகா தீபம் காட்சி அளிக்கும். மகா தீபத்தை தரிசனம் செய்ய தொடர்ந்து பக்தர்கள் வருகை தருவதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. அதனால் வருகிற 16-ந் தேதி வரை கோவிலில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
- மஞ்சள், ரஸ்தாளி, கற்பூரம், செவ்வாழை உள்ளிட்ட வாழை மரங்கள் பயிரிடப்பட்டு உள்ளது.
- புயலால் சேதம் அடைந்த வாழை மரங்களை வருவாய்த்துறையினர் கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு, சந்தவாசல், வலாங்காடு, கொட்டாமேடு, வெள்ளூர், சின்ன புஷ்பகிரி உள்ளிட்ட இடங்களில் 500 ஏக்கரில் விவசாயிகள் வாழை பயிரிட்டு உள்ளனர்.
இதில் மஞ்சள், ரஸ்தாளி, கற்பூரம், செவ்வாழை உள்ளிட்ட வாழை மரங்கள் பயிரிடப்பட்டு உள்ளது. வாழை மரங்கள் குலை தள்ளி இன்னும் சிறிது நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது.
இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக இந்த பகுதியில் நேற்று மாலை முதல் விடிய, விடிய சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 1 லட்சம் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. இன்று காலை வாழை மரங்கள் சாய்ந்து கிடப்பதை கண்ட விவசாயிகள் கண்ணீர் சிந்தினர்.
ஏற்கனவே வாழை பயிரிடுவதற்காக ஒரு ஏக்கருக்கு ரூ.50,000 வரை வங்கியில் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்து இருந்ததாகவும், புயல் காரணமாக வாழை மரங்கள் வேரோடு சாய்ந்ததால் ரூ.50 லட்சம் வரை சேதம் அடைந்ததால் வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
புயலால் சேதம் அடைந்த வாழை மரங்களை வருவாய்த்துறையினர் கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராணிப்பேட்டை மாவட்டத்தில் மின்னல், பனப்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 20 செ.மீட்டர் மழை.
- மீனம்பாக்கம், திருத்தணி, புழல், அண்ணா பல்கலைக்கழகம், தாமரைபாக்கம் தலா 10 செ.மீ. மழை பெய்துள்ளது
திருவண்ணாமலை:
மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 செ.மீ. மழை பெய்துள்ளது.
அடுத்ததாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் மின்னல், பனப்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 20 செ.மீட்டரும், காஞ்சிபுரத்தில் 19 செ.மீ., செய்யாறு-18 செ.மீ., ஆவடி-17 செ.மீ., திருத்தணி, கே.வி.கே. காட்டுக்குப்பம் தலா 16 செ.மீ. மழை பெய்துள்ளது.
சென்னை அயனாவரம் தாலுகா அலுவலகம், குன்றத்தூர் தலா 15 செ.மீ., அரக்கோனம், உத்திரமேரூர், பெரம்பூர் (சென்னை)-தலா 14 செ.மீ., கும்மிடிப்பூண்டி, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், மகாபலிபுரம், சோழவரம், பள்ளிப்பட்டு, எம்.ஜி.ஆர். நகர் (சென்னை), ஆலந்தூர், ஊத்துக்கோட்டை தலா 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
அம்பத்தூர், செங்குன்றம், செங்கல்பட்டு, கொரட்டூர், சென்னை விமான நிலையம் தலா-12 செ.மீ., திருவள்ளூர், பொன்னேரி, நுங்கம்பாக்கம், பூந்தமல்லி, தண்டையார்பேட்டை, காவேரிப்பாக்கம், போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம், மதுராந்தகம், செம்பரம்பாக்கம், பூண்டி தலா 11 செ.மீ., மீனம்பாக்கம், திருத்தணி, புழல், அண்ணா பல்கலைக்கழகம், தாமரைபாக்கம், சின்னகலர் தலா 10 செ.மீ. மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
- மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சி அளிக்கும்.
- 6-ந்தேதி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலையில் மகா தீபத்தையொட்டி 35 லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்று உள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக கடந்த 3-ந் தேதி நடைபெற்ற தேரோட்டத்தின் போது 5 லட்சம் பக்தர்களும், கடந்த 6-ந் தேதி பரணி தீபம் மற்றும் மகாதீபம் ஏற்றப்பட்ட போது தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுமார் 35 லட்சம் பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் சென்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்புடன் தீபத்திருவிழா நடைபெற்றதால் கடந்த காலங்களை விட அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதன் அடிப்படையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னரே முன்னேற்பாடு பணிகள் தொடங்கப்பட்டு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டு முதன் முறையாக தீயணைப்பு துறை ராஜகோபுரம் உள்ளிட்ட 4 கோபுரங்கள் சுத்தம் செய்யப்பட்டது.
மேலும் 5 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு மாட வீதி மற்றும் கிரிவலப்பாதையில் உடனுக்குடன் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அரசு அலுவலர்கள் கொண்ட 96 குழுக்கள் அமைக்கப்பட்டு கடந்த 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை தினசரி 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணிபுரிந்தனர்.
மேலும் பக்தர்களின் வசதிக்காக கடந்த 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து பஸ்கள் 6 ஆயிரத்து 520 நடைகள் இயக்கப்பட்டு சுமார் 6 லட்சம் பக்தர்கள் பயணம் செய்துள்ளனர்.
கடந்த 5-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை 36 சிறப்பு ரெயில்கள் உட்பட 75 ரெயில்கள் இயக்கப்பட்டன. மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கடந்த 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை 85 மருத்துவ குழுக்கள் 680 மருத்துவர் மற்றும் மருத்துவர் சார்ந்த பணியாளர்களை கொண்டு சுழற்சி முறையில் செயல்பட்டன.
இம்மருத்துவ முகாம்களில் சுமார் 7 லட்சத்து 5 ஆயிரம் பக்தர்கள் பயன் பெற்றுள்ளனர். இதில் ரூ.7 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான மாத்திரை, மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளது. 20 எண்ணிக்கையில் 108 அவசர ஊர்தி வாகனங்கள், 15 பைக் ஆம்புலன்ஸ் மற்றும் 5 மலையேறும் அவசர கால மருத்துவ குழுக்கள் செயல்பட்டு சுமார் 400 நபர்கள் வரை பயனடைந்துள்ளனர். பாதுகாப்பு பணியில் 13 ஆயிரத்து 61 போலீசார் ஈடுபட்டனர். 500 கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டது. 85 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டது.
15 ஆயிரம் குழந்தைகளின் கைகளில் செல்போன் எழுதப்பட்ட டேக் கட்டப்பட்டது. இதன் மூலம் கூட்டத்தில் தொலைந்த 14 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தமிழ்நாடு அரசால் செய்யப்பட்ட விழா ஏற்பாடுகளையும், வசதிகளையும் முறையாக பயன்படுத்தி ஒத்துழைப்பு அளித்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கும், விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்து தர தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்ட முதல்- அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத் துறை, சட்டமன்ற துணை சபாநாயகர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கால் தவறி கீழே விழுந்தார்
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் தூசி அடுத்த மாமண்டூர், தர்மபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் மணிகண்டன் (வயது 35). கட்டிட தொழிலாளி.
திருமண மாகவில்லை இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டில் கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று மாலை வேலை செய்து கொண்டு இருந்தபோது திடீரென கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மணிகண்டன் தந்தை தூசி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






