என் மலர்
உள்ளூர் செய்திகள்

4 ஆயிரம் ஆண்டு பழமையான கற்செதுக்கு உருவங்கள் கண்ெடடுப்பு
- திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தகவல்
- 4 மீ, உயரமும் 7மீ, அகலத்திலும் கற்செதுக்கு உருவங்கள் காணப்படுகின்றன
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள சிங்கமலை அடிவாரத்தில் 4 ஆயிரம் ஆண்டு கள் பழமையான கற்செதுக்கு உருவங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நடுவத்தின் வரலாற்று ஆய்வாளர்கள் பாரதிராஜா, சீனுவாசன், பால வெளி முருகன் ஆகியோர் குறிப்பிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"குகையின் மேற்கு நோக்கிய பாறையில் சுமார் 4 மீ., உயரமும், 7மீ., அகலத்திலும் கற்செதுக்கு உருவங்கள் காணப்படுகின்றன. குகையின் தரைப்பகுதியில் உள்ள இரு சிறிய பாறைகளை பயன்படுத்தி உயரமான இடங் களில் உருவங்களை செதுக்கி உள்ளனர்.
வலது பகுதியில் திமிலுடன் குகை சுவற்றின் மேற்பகுதியில் திமிலுடன் கூடிய காளையும், வால் பகுதியின் அருகே ஒரு மனிதனும் காணப்படுகிறது. இதற்கு கீழே கூடிய மற்றொரு காளையும், இதன் கழுத்து பகுதிக்கு கீழ் ஒரு மனிதனும், முகத்துக்கு முன்பு இரண்டு மனிதர்களும் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் ஒரு மனிதன் காணப் படுகிறார். உடல்வாகு பெற்ற காளையின் வால் பகுதியில் மனிதர்கள் என்பதை விளக்க, அவர்களது கைகள் வலிமையான புஜத்துடன் இடம் பெற்றுள்ளது.
இதேபோன்று பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன" என தெரிவித் துள்ளனர்.
ஓவிய ஆய்வாளர் காந்தி ராஜன் கூறும் போது, "குகை சுவற்றில் கால்நடை செதுக்கப்பட்டுள்ளன. திமிலுடன் எவ்வித ஆயுதங்களும் இல்லால் மனிதர்கள் காணப்படுவதால், அணுகு முறையில் செதுக்கப் பட்டிருக்கலாம். வேட்டை சமூகம், கால்நடை சமூகமாக மாறும் போது, வனத்தில் உள்ள மாடுகளை பிடித்து பழக்கப் படுத்துவது என்பது முக்கிய நிகழ்வாகும்.
இந்த கற்செதுக்கு களும், இதுபோன்ற ஒரு நிகழ்வை நினைவு கூற உருவாக்கப்பட்டிருக்கலாம்.
மேலும், பாறை சமூகம் சார்ந்த உருவங்கள் மாடுகளும், இதனை சுற்றி மாடுகளை பிடிப்பது போன்ற மாடுகளை பிடிப்பது போன்றகை பாவனையோடு மனிதர்கள் காணப்படுவதால், இன்றைய ஏறு தழுவுதல், ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஒத்த நிகழ்வாக கருதலாம்.
இந்த கற்செதுக்குகள் போலவே நீலகிரி மாவட்டம் கரிக்கையூர் மற்றும் மதுரை அடுத்த அணைக்கட்டி பாறை ஓவியங்களும் காணப்படுகின்றன. செத்தவரை அய்யனார் மலையில் உள்ள பாறை ஓவியங்களில் உள்ள காளைகளை போன்றே, இங்கேயும் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த கற்செதுக்கு உருவங் கள் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். இதுபோன்ற கற்செதுக்கு உரு வங்கள், வெகு சில இடங்களில் மட்டுமே கிடைத்து ள்ளது என்பதால், இந்த இடங்கள் பாதுகாக் கப்பட வேண்டும்" என்றார்.






