என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலை மற்றும் மின்வாரிய ஊழியர்கள்"

    • 3 மின் கம்பங்கள் சேதமடைந்தது
    • மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் அவதி

    வந்தவாசி:

    வந்தவாசி- ஆரணி நெடுஞ்சா லையில் காற்றுடன் பெய்த மழையில் வேரோடு மரம் சாய்ந்தது. இதில் 3 மின் கம்பங்கள் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப் பட்டது. இதையடுத்து சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலை மற்றும் மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள னர்.

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி- ஆரணி நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிக் காக, இருபுறங்களிலும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இதற்காக தோண்டப் பட்ட பள்ளத்தால் சாலை யோரம் இருந்த ஒரு மரத் தின் வேர்ப்பகுதியில் வலுவிழந்திருந்ததாக தெரிகிறது. மாண்டஸ் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் காற்றுடன் மழை பெய்தது.

    இதில் வந்தவாசி- ஆரணி நெடுஞ்சாலை யோரம் இருந்த ஒரு மரம் வேரோடு சாலையின் குறுக்கே சாய்ந்தது. இதனால் மின்கம்பிகள் அறுந்து, 3 மின்கம்பங்கள் உடைந்துசேதமானது.

    இதனால் அப்ப குதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மின் சாரம் துண்டிக்கப்பட்டது.

    மேலும் தகவல் அறிந்த நெடுஞ்சா லைத்துறை, மின்வாரிய அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து ஊழியர் கள் மூலம் சாலையில் வேரோடு சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தி போக் குவரத்தை சீரமைத்தனர். மேலும் மின்கம்பங்களை சீரமைத்து மின்சப்ளை வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    ×