என் மலர்
திருவண்ணாமலை
- மாண்டஸ் புயல் பாதிப்பை கணக்கெடுக்க வலியுறுத்தல்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
மாண்டஸ் புயல் பாதிப்பை வேளாண்மைதுறையினர் கணக்கெ 2 டுக்க வலியுறுத்தி நேற்று காலை திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடு பட்டனர். வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார்.
3 அப்போது விவசாயிகள் கையில் தூக்கு கயிறு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதற்கான விண்ணப்ப படிவத்துடன் வந் திருந்தனர். பின்னர் அவர்கள் மாண்டஸ் புயல் பாதிப்பை வேளாண்மை துறையினர் கணக்கெடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு பெற்று தர வேண்டும், விவசாயிகளை கடனாளியாக்கி தற்கொலைக்கு தள்ளக்கூடாது என்பன உள் 4 உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் வாக்கடை புருசோத்தமன் கூறுகையில், மாண்டஸ் புயல் காரணமாக சம்பா நெல் அறுவடை, வாழை மகசூல் பாதிப்பு அடைந்துள்ளது. எனவே புயல் பாதிப்புகளை வேளாண்மைதுறையினர் கணக்கெடுக்க வேண்டும். லாபகர மான விலை கொள்முதல் செய்யாததாலும், வெள்ளம், வறட்சி பாதிப்பு நிவாரணம், பயிர் காப்பீடு, இழப்பீடு வழங்காததாலும் விவசாயிகள் கடனாளியாகி தற்கொலை செய்கின்றனர்.
மேலும் தமிழக அரசு பயிர் மற்றும் நகைக்கடன் பெற்றவர்களுக்கு தவணை தவறும் முன்னர் புதுப்பிக்க கடன்தாரருக்கு தெரி யப்படுத்தாமல் அசல் கடனுடன் வட்டி, அபராத வட்டி இணைத்து மேலும், மேலும் கடன் சுமை ஏற்றுகின்ற நடவடிக் கையால் தற்கொலை செய்யும் நிலை ஏற்படுகிறது என்றார்.
இதில் நார்த்தாம்பூண்டிசிவா துரிஞ்சாபுரம் அய்யாயிரம், பாலானந்தல் பிரபு, சொரகுளத்தூர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு தீர்மானம் நிறைவேற்றம்
- கவுன்சிலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆரணி:
ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி சுந்தர் தலைமை யில் நடந்தது. துணைத்தலைவர் கே.டி.ராஜேந்திரன் முன் னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) இல.சீனிவாசன் புதிய வட்டார வளர்ச்சி லர் பாண்டியனை அறிமுகம் செய்து வரவேற்றார்.
அலுவக கூட்டத்தில் உறுப்பினர் கவிதாபாபு பேசுகையில், சுபான் ராவ்பேட்டையில் பக்க கால்வாய்களில் கழிவுநீர் முறையாக செல்லாததால் சாலைகளில் கழிவுநீர் வழிந்து ஓடும் அவல நிலை உள்ளது என்றார்.
ஜெயபிரகாஷ் பேசுகையில், கிராமப்பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய் இணைப்பு வழங்கப்படுவதாக கூறி பொக்லைன் எந்திரம் வைத்து பள்ளம் எடுக்கப்பட்டது. நன்றாக இருந்த சாலைகளை உடைத்து பள்ளம் எடுக்கப்பட்டதால் அங்கு மழை நீர் தேங்கிகுளம் போல காட்சியளிக்கிறது என்றார்.
துணைத்தலைவர் கே.டி.ராஜேந்திரன் பேசுகையில், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூறும் புகார்களுக்கு உடனடியாக அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்ராபாளையம் ஒன்றியக்குழு உறுப்பினர் பகுதியான ஸ்ரீராம் நகர் பகுதியில் நாற்று நடும் போராட்டம் நடத்த தயாராக இருந்தார்கள் அவர்களை அழைத்து சமாதானம் பேசினேன். இது போன்ற நிலைகளை அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் தங்களது பகுதிக்கு தேவைகள் குறித்து பேசினார். அதைத்தொடர்ந்து அனைத்து தீர்மானங்களும் படித்து நிறைவேற்றப்பட்டது.
- திருவண்ணாமலை அருகே மனைவி, 4 குழந்தைகளை கொன்று விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே உள்ள கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பழனி (வயது 40) விவசாயி. இவரது மனைவி வள்ளி(37), மகள்கள் திரிஷா 15), மோனிஷா (14), பூமிகா (9), சிவசக்தி (7) மகன் தனுசு (4) பழனி ஒரவந்தவாடி மதுரா மோட்டூர் கிராமத்தில் கொரட்டாம்பட்டு கிராமத்தில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.
அந்த நிலத்தின் ஒரு பகுதியில் குடிசை வீடு ஒன்று உள்ளது. அதில் சுமார் 4 ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று காலை வீட்டின் கூரையில் பழனி தூக்கில் பிணமாக தொங்கினார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது பழனியின் மனைவி வள்ளி, மகள்கள் திரிஷா, மோனிஷா, சிவசக்தி, மகன் தனுசு ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவருடைய மகள் பூமிகா என்பவர் மட்டும் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூமிகாவை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பழனி அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட 6 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பழனி மற்றும் அவரது மனைவி குழந்தைகள் கொடுவாளால் வெட்டப்பட்டுள்ளனர். பழனி அவருடைய மனைவி மகள்கள் மற்றும் மகனை வெட்டி கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பழனிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் மனைவி குழந்தைகளை கொன்று விட்டு அவரும் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 10 ஆண்டுகளாகியும் சாலை அமைக்கவில்லை என புகார்
- சுடுகாட்டில் பழுதடைந்த மின் விளக்குகளை மாற்ற கோரிக்கை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் கிராம சாலை 1.7 கி.மீ.10 ஆண்டுகளுக்கு முன்பு சாலை போடப்பட்டது. பின்னர் ஜல்லி மட்டும் போடப்பட்டு, 10 ஆண்டுகளாகியும் தார் சாலையோ சிமெண்ட் சாலையோ அமைக்கவில்லை.
அப்பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுமார் 100 ஏக்கர் பரப்பில் விளையக்கூடிய வாழை, மஞ்சள், நெல், உள்பட பல்வேறு விவசாய பொருட்களை இச்சாலை வழியாகத்தான் விவசாயிகள் எடுத்துச் சென்று நகரங்களில் விளை பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்.
இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை அமைக்கும் பணி நடைபெறாததால் அவ்வப்போது பெய்யும் மழை, தற்போது மாண்டஸ் புயல் காரணமாக சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குளம் குட்டை போல காணப்படுகிறது.
கல்பட்டு ஊராட்சி சார்பில் இச்சாலையை சீரமைக்க எவ்வித முன்னேற்பாடுகள் செய்யாமல் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
தற்போது பெய்து வரும் தொடர் மழையால் ஒன்றரை கிலோ மீட்டர் நீளமுடைய சாலையில், தண்ணீர் தேங்கி குண்டும் குழியுமாக எந்த ஒரு வாகனமும் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் இந்த சாலையில் உள்ள சுடுகாட்டில் பழுதடைந்த மின் விளக்குகள் ஐந்து வருடங்களாக சீரமைக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எனவே இச்சாலையை உடனடியாக சீரமைக்க கலெக்டர் உள்பட போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் உள்பட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாண்டஸ் புயலால் சாய்ந்தது
- நஷ்டஈடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டு இருந்தது. மாண்டஸ் புயல் காரணமாக ஏராளமான வாழை மரங்கள் காற்றில் முறிந்து விழுந்தது. தோட்டம் காற்றில் சாய்ந்து விட்டது.
இது குறித்து விவசாயிகள் புகாரின் பேரில் உதவி தோட்டக்கலை அலுவலர் சுதாகர், கிராம நிர்வாக அலுவலர் நித்யானந்தம் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது சேதமடைந்த வாழைத்தோட்டங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த வாழைத்தோட்டங்களை மதிப்பீடு செய்து அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்படும், உரிய முறையில் மனு செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கினர்.
- விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்
- அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல்
போளூர்:
போளூர் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் பாபு, இவர் எதப்பட்டு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி மஞ்சுளா, கட்டுப்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் 2 மகள்கள் உள்ளனர்.
இவர்களது கடைசி மகன் அரவிந்த் (16) ஆரணியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் வீட்டு மாடியில் அரவிந்த் மற்றும் நண்பர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் மேல் செல்லும் உயிர் அழுத்த மின் கம்பி அரவிந்த் மேல் பட்டு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடிக்க உடல் கருகி இறந்தார். இது குறித்து போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்
ஜெயபிரகாஷ் விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி போளூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து போளூர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. நேரில் சென்று அரவிந்த் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
- பஸ் முழுமையாக தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
- போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து பஸ்சில் பரவிய தீயை அணைத்தனர். ஆனாலும் பஸ் முழுமையாக தீயில் எரிந்து எலும்புக்கூடானது.
வந்தவாசி:
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் தாலுகா பெரியகாயம்பாக்கத்தை சேர்ந்தவர் செங்கோட்டையன். இவரது மகன் வெங்கடேசனுக்கு அச்சரப்பாக்கத்தில் இன்று காலை திருமணம் நடந்தது.
நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து வந்த மணமகளின் உறவினர்கள், நண்பர்கள் 40 பேர் மீண்டும் திருமண வீட்டார் ஏற்பாடு செய்திருந்த சுற்றுலா பஸ்சில் காஞ்சிபுரம் திரும்பிக்கொண்டிருந்தனர். அச்சரப்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வழியாக பஸ் காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. வந்தவாசியை கடந்தபோது பஸ்சில் திடீரென தீப்பற்றியது. பஸ்சில் இருந்து தீயில் கருகிய வாசத்தை பஸ்சின் டிரைவர் உணர்ந்தார்.
ஆனாலும், இது வேறு ஏதாவது வாசமாக இருக்கலாம் என்று கருதி பஸ்சை தொடர்ந்து ஓட்டிச் சென்றுள்ளார். இரவு சுமார் 10 மணியளவில் வந்தவாசி அடுத்த மேல்மா என்ற இடத்தை கடந்தபோது பஸ்சின் வலதுபுற டயர் திடீரென வெடித்தது.
இதில் தறிகெட்டு ஓடிய பஸ் பாலத்தில் மோதியது. டீசல் டேங்க் பாலத்தில் உரசியதால் பஸ்சில் திடீரென தீப்பற்றியது. பஸ் முழுவதும் தீ பரவியது. இதனால் பயணிகள் அலறி கூச்சலிட்டனர். பஸ்சில் இருந்து இறங்க முண்டியடித்து வந்தனர்.
அவர்களால் இறங்க முடியவில்லை. பஸ் முழுமையான குளிர்சாதன வசதி கொண்டதாகவும், மூடப்பட்ட கண்ணாடிகளை கொண்டதாகவும் இருந்ததால் பயணிகள் செய்வதறியாது தவித்தனர்.
அப்போது சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி டிரைவர் இதை பார்த்து உடனடியாக லாரியை நிறுத்தினார். தான் கொண்டு வந்த இரும்பு ராடால் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து பயணிகள் வெளியேற வழி ஏற்படுத்தினார். உடனடியாக பயணிகள் அனைவரும் வேகவேகமாக இறங்கினர்.
அப்போது பஸ் முழுமையாக தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து அறிந்ததும் வந்தவாசி வடக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து பஸ்சில் பரவிய தீயை அணைத்தனர். ஆனாலும் பஸ் முழுமையாக தீயில் எரிந்து எலும்புக்கூடானது.
இந்த சம்பவம் குறித்து வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 174 மின்கம்பங்கள் சேதம்
- உடைந்த தரை பாலத்தை உடனடியாக கட்ட நடவடிக்கை
செய்யாறு:
மாண்டஸ் புயலால்செய்யாறு, வெம்பாக்கம் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை கலெக்டர் பா. முருகேஷ் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
கலெக்டர் செய்யாறு அரசினர் மகளிர் பள்ளி சுற்றுச்சுவர்இடிந்து விழுந்துள்ளதையும், வெம்பாக்கம் தாலுக்கா பிரம்மதேசம் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதையும், பின்னர் அனக்காவூர் ஒன்றியம், அளத்துரை கிராமத்தில் தரைப்பாலம் சேதம் அடைந்த வெள்ளத்தினால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட சேதமடைந்த பாலத்தை கலெக்டர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அளத்துறையில் பாதிக்கப்பட்ட தரைப்பாலத்திற்கு சிறிய பாலம் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் இதே கிராமத்தில் சிறிய கல்வெட்டும் விரைவாக கட்டித் தரப்படும். செய்யாறு, வெம்பாக்கம் பகுதிகளில் 25 குடிசைகள் பகுதியாகவும், 10 குடிசைகள் முழுமையாகவும், சேதம் அடைந்துள்ளது. 53 மரங்கள் சாய்ந்துள்ளது. 11 கால்நடைகள் இறந்துள்ளன.
174 மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது சேதம் அடைந்த மின்கம்பங்கள் போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்படும். பாதிக்கப்பட்டவர்களின் சேதத்தை கண்காணித்து அரசுக்கு உடனடியாக அறிக்கையை அனுப்பி வைத்து விரைவாக நிவாரணம் பெற்று தரப்படும். இவ்வாறு அவா கூறினார்.
- 67 ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- சூறைகாற்றுடன் கன மழை பெய்தது
ஆரணி:
ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கண்ணமங்கலம் ஓண்ணுபுரம், காட்டுக்காநல்லூர், முள்ளிபட்டு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதலே சூறைகாற்றுடன் கன மழை பெய்தது.
இதனால் பொதுப்பணி துறைக்கு சொந்தமான 67 ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து.
காட்டுகாநல்லூர் கண்ணமங்கலம் ஆரணி திருமலை சமுத்திர ஏரி உள்ளிட்ட 30 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.
- அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை
- வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வு
போளூர்:
மாண்டஸ் புயலால் போளூர் பகுதியில் 2 பேரின் வீடுகள் நேற்று முன்தினம் சேதம் அடைந்தன. போளூர் அடுத்த இருளம்பாறை கிராமத்தை வசிக்கும் முத்தம்மாள் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதேபோல் பெரியகரம் கிராமத்தில் வசிக்கும் சரோஜா வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை இது குறித்து வருவாய்த் துறையினர் நேரில் ஆய்வு செய்தனர்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
- 13 பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்
செய்யாறு:
மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட செய்யாறு வெம்பாக்கம் பகுதிகளை ஒ.ஜோதி எம் எல் ஏ நேரில் சென்று ஆய்வு செய்தார். செய்யாறு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பின்பகுதி சுற்றுச்சுவர் மழையின் காரணமாக முழுவதுமாக இடிந்து விழுந்தது உள்ளதை தகவல் அறிந்த ஒ.ஜோதி எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டு சுற்றுச்சுவர்அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
பின்னர் செய்யாறு, வெம்பாக்கம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார். வெம்பாக்கம் தாலுகா, இருமரம் கிராமத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட 13 பழங்குடியின மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், தினகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வழக்கறிஞர் கே விஸ்வநாதன் உள்பட பலர் இருந்தனர்.
- அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி, திருவண்ணாமலை நகரம் மற்றும் திருவண்ணாமலை வடக்கு, தெற்கு கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் வருகின்ற 13, 14-ந் தேதிகளில் நடைபெறுகின்ற திமுக அரசின் சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு போன்ற விலைவாசி உயர்வு களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளன.
இதனை முன்னிட்டு செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக அலுவல கத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைச்செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
கூட்டத்தில் மாவட்டக் நிர்வாகிகள், சார்புஅணி செயலாளர்கள் நகர, ஒன்றிய நிர்வாகிகள், , வட்டக் செயலாளர்கள், நகரச் சார்பணி செயலாளர்கள், , முன்னாள், இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள், இன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.






