என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கல்பட்டு கிராமத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
  X

  கல்பட்டு கிராமத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 10 ஆண்டுகளாகியும் சாலை அமைக்கவில்லை என புகார்
  • சுடுகாட்டில் பழுதடைந்த மின் விளக்குகளை மாற்ற கோரிக்கை

  கண்ணமங்கலம்:

  கண்ணமங்கலம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் கிராம சாலை 1.7 கி.மீ.10 ஆண்டுகளுக்கு முன்பு சாலை போடப்பட்டது. பின்னர் ஜல்லி மட்டும் போடப்பட்டு, 10 ஆண்டுகளாகியும் தார் சாலையோ சிமெண்ட் சாலையோ அமைக்கவில்லை.

  அப்பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுமார் 100 ஏக்கர் பரப்பில் விளையக்கூடிய வாழை, மஞ்சள், நெல், உள்பட பல்வேறு விவசாய பொருட்களை இச்சாலை வழியாகத்தான் விவசாயிகள் எடுத்துச் சென்று நகரங்களில் விளை பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்.

  இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை அமைக்கும் பணி நடைபெறாததால் அவ்வப்போது பெய்யும் மழை, தற்போது மாண்டஸ் புயல் காரணமாக சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குளம் குட்டை போல காணப்படுகிறது.

  கல்பட்டு ஊராட்சி சார்பில் இச்சாலையை சீரமைக்க எவ்வித முன்னேற்பாடுகள் செய்யாமல் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

  தற்போது பெய்து வரும் தொடர் மழையால் ஒன்றரை கிலோ மீட்டர் நீளமுடைய சாலையில், தண்ணீர் தேங்கி குண்டும் குழியுமாக எந்த ஒரு வாகனமும் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

  மேலும் இந்த சாலையில் உள்ள சுடுகாட்டில் பழுதடைந்த மின் விளக்குகள் ஐந்து வருடங்களாக சீரமைக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

  எனவே இச்சாலையை உடனடியாக சீரமைக்க கலெக்டர் உள்பட போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் உள்பட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Next Story
  ×