என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • சொத்து வரி உயர்வை கண்டித்து நடந்தது
    • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் தி.மு.க. அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.திருமூலன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் தூசி.கே.மோகன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    ஒன்றிய செயலாளர்கள் எம் மகேந்திரன் பி.கே.நாகப்பன், அரங்கநாதன் சீ.துரை, மாவட்ட இணைச் செயலாளர் விமலா மகேந்திரன், முன்னாள் வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் கோமதி ரகு, நகர செயலாளர் வெங்கடேசன், வக்கில்கள் மெய்யப்பன், பூவேந்திரன், முனுசாமி, செய்யார் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் குமரேசன், கவுன்சிலர் ரா,ஜ கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வள்ளலார் 200-வது விழா முன்னிட்டு நடந்தது
    • கலெக்டர் தொடங்கி வைத்தார்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சட்டமன்ற மான்யக் கோரிக்கையில் அறிவித்த வள்ளலாரின் தொடர் அன்னதான திட்டத்தை நேற்று 14-ம்தேதி திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் கொண்டு தொடங்கி வைத்தார்.திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் க.பெ.அசோக்குமார் வரவேற்றார்.

    இந்த நிகழ்ச்சியில் உதவி கலக்டர் பிரசாத்சிங், பயிற்சி கலக்டர் ரிஷப்ராணி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேசன், படவேடு ரேணுகாம்பாள் கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ஆர்.வி.சேகர், ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், துணை தலைவர் தாமரைச்செல்வி ஆனந்தன், போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போளூர் வட்டாட்சியர் சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் தஞ்சிம்மாள்லோ கநாதன், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வள்ளலாரின் திருஅருட்பா பக்தி பாடல்களை பாடினர்.

    தொடர்ந்து கலெக்டர் முருகேஷ் படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தார். கோவில் சார்பில் தர்மேஸ்வர சிவாச்சாரியார் பிரசாதங்கள் வழங்கினர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் மு ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞானம், மேலாளர் மகாதேவன் கணக்காளர் சீனிவாசன் உள்பட கோவில் அலுவலர்கள் செய்து இருந்தனர்.

    • சொத்து வரி உயர்வை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையத்தில் கலசப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னால் எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. செங்கம் நளினிமனோகரன், ஒன்றிய செயலாளர்கள் பொய்யாமொழி, ஆலத்தூர்.கே.மூர்த்தி, காரப்பட்டு ஏ.ரமேஷ், ஜமுனாமரத்தூர் வெள்ளையன், போளூர் வடக்கு ஒன்றியம் அன்பழகன், புதுப்பாளையம் பேரூர் கழக செயலாளர் பி.எஸ்.ராதா உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    • கலச திருமஞ்சனம், பூர்ணாஹூதி உள்ளிட்டவையும் நடந்தது

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மூடூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீஅலர்மேல்மங்கா சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த திங்கள்கிழமை பகவத் அனுக்ஞை, யஜமான சங்கல்பம், புண்யாஹ வாசனம் உள்ளிட்டவையும், செவ்வாய்க்கிழமை சதுஸ்தான அர்ச்சனை ஹோமம், கலச திருமஞ்சனம், பூர்ணாஹூதி உள்ளிட்டவையும் நடந்தது.

    நேற்று காலை கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • செய்யாறு போலீசார் போராட்டம் செய்தவர்களை சமாதானம் செய்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
    • இன்று வரை 5 நாட்கள் வரப்பட்ட புகாரில் 303 பேர் புகார் கொடுத்துள்ளனர்.

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுனில் ஒரு சிட்பண்ட் நிறுவனம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களின் ஆசையை தூண்டி தீபாவளி மற்றும் நகை சிட்பண்ட் நடத்தி வந்தது.

    இதனை நம்பிய பொதுமக்கள் கட்டிய தொகைக்கு அதிகமாக வழங்கிய மளிகை பொருட்கள் மற்றும் நகைக்கு ஆசைப்பட்டு திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த முகவர்கள் பொது மக்களிடம் பணம் வசூல் செய்து கட்டினர்.

    அந்த சிட்பண்ட் நிறுவனம் அறிவித்தபடி தீபாவளி பரிசு பொருட்கள், நகைகள் அளிக்க முடியாததால் அந்த நிறுவனம் திடீரென்று மூடப்பட்டது.

    இதனால் பாதிக்கப்பட்ட, ஏமாந்த முகவர்களும் பணம் கட்டிய வாடிக்கையாளர்களும் போராட்டம் நடத்தினர். அந்த நிறுவனம் கடந்த 10-ந்தேதிக்குள் பணம் கொடுப்பதாக உறுதி அளித்தது.

    ஆனால் கூறியபடி பணம் கொடுக்கவில்லை. இதனை அறிந்த ஏமாந்த முகவர்களும், பணம் கட்டியவர்களும் 10-ம்தேதி, 11-ம் தேதி போராட்டம் செய்தனர். செய்யாறு போலீசார் போராட்டம் செய்தவர்களை சமாதானம் செய்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    இன்று வரை 5 நாட்கள் வரப்பட்ட புகாரில் 303 பேர் புகார் கொடுத்துள்ளனர். அந்த நிறுவனம் மோசடி செய்து மதிப்பு ரூ.43 கோடியாகும். தொடர்ந்து தினமும் புகார் கொடுத்து வருகின்றனர்.

    பாதிக்கப்பட்டவர்கள் நமக்கு பணம் கிடைக்குமா, கிடைக்காதா என்று ஏக்கத்தோடு எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    இது போன்ற நிறுவனங்கள் ஆரம்பத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை வெளியிட்டு தொடங்கும் பொழுதே அரசு அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற மக்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • பொதுமக்கள் வலியுறுத்தல்
    • வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதாக புகார்

    போளூர்:

    போளூலருந்து ஜவ்வாது மலைக்குச் செல்லும் பிரதான சாலை வீரப்பன் தெரு ஆகும். இந்த தெருவில் 10 இடங்களுக்கு மேல் குண்டும் குழியுமாக பல மாதங்களாக உள்ளன, இதனால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றன.

    தொடர் மழையால் குழிகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது சிலர் இரு சக்கர வாகனங்களில் சென்றபோது விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளனர்.

    எனவே இந்த ப் பிரதான சாலை விரைந்து சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு.

    • சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
    • பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என புகார்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கொங்கரம்பட்டு ஊராட்சிக்குபட்ட கனகதோப்பு கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    கொங்கரம்பட்டு கனகதோப்பு சாலை பல ஆண்டுகளாக சீரமைக்க கோரி ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தனர்.

    க்ஷஆனால் இதுவரையில் எந்த ஓரு நடவடிக்கையும் எடுக்கவில்லை தற்போது மாண்டஸ் புயலால் பெய்த கனமழை காரணமாக கொங்கரம்பட்டு கனகதோப்பு சாலை சேறும் சகிதமாக உள்ளதால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் இன்று காலை சேறும் சகிதமாக உள்ள சாலையில் நாட்டு நடவு செய்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பள்ளி மாணவர்கள் நாட்டுநடவு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள்
    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியம், ஆலத்தூர் கிராமத்தில் மான்டஸ் புயல் மழை காரணமாக ஆட்டுக்கொட்டகை மீது மரம் முறிந்து விழுந்ததில் 10 ஆடுகள் பலியாகின.

    பாதிக்கப்பட்ட ஆட்டின் உரிமையாளருக்கும், அதே போல் வீரம்பாக்கம் கிராமத்தில் மழையால் வீடு இழந்த மூதாட்டிக்கும், ஒ.ஜோதி எம்எல்ஏ நேரில் சென்று பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஆறுதல் கூறி தலா ரூபாய் 5000 பணமும், அரிசி, காய்கறிகள் மளிகை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

    மேலும் மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசின் நிவாரணம் உடனடியாக கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம்கேட்டுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் திராவிட முருகன், ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் உள்பட பலர் இருந்தனர்.

    • உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை வழங்கினர்
    • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் கீழ்பென்னாத்தூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    அவைத்தலைவர் ரவி (எ) இளஞ்செழியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார்.

    தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு, துணைத்தலைவர் வாசுகி ஆறுமுகம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் சி.கே.பன்னீர்செல்வம், நகர செயலாளர் சி.கே. அன்பு, முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு, பேராசிரியர் அன்பழகன் அவர்களின் பிறந்தநாளின் நூற்றாண்டு நிறைவு விழாவை கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், இளைஞர் அணி மற்றும் உறுப்பினர் சேர்க்கை சேர்ப்பது குறித்தும் ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கி பேசினார்.

    மாவட்ட துணை செயலாளர் செங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான மு.பெ.கிரி கலந்துகொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், செயல்படுவது குறித்தும் ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கி பேசினார்.

    முன்னதாக, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மு.பெ.கிரி எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள், மறைந்த தலைவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் திருவுருவப்படங்களுக்கு மாலைகள் அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.

    இக்கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி குப்புசாமி தீர்மானங்களை வாசித்தார். ஒன்றிய துணை செயலா ளர்கள் சிவக்குமார், பரசுராமன், செல்வமணி, பொருளாளர் சுப்பராயன், மாவட்ட பிரதிநிதிகள் தேவேந்திரன், இளங்கோ, தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், மகளிர்குழு அணி நித்தியா, ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள், ஊராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கீழ்பென்னாத்தூர் ஒன்றிய துணை செயலாளர் சோமாஸ்பாடி சிவக்குமார் நன்றி கூறினார்.

    • சொத்துவரி, மின்கட்டணம் உயர்வை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    சொத்துவரி, மின்கட்டணம், பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவைகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். நகரச் செயலாளர் பாட்ஷா தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

    முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணி கலந்துக் கொண்டு பேசினார்.

    மாவட்ட அவைத் தலைவர் டிகேபி. மணி, ஜெ.பாலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பவானி அன்பழகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் லோகேஷ்வரன், தெள்ளார் ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் அர்ஜுனன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் செய்யாறில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.

    நகர செயலாளர் கு.வெங்கடேசன் தலைமை வகித்தார். ரவிச்சந்திரன், அருணகிரி, ஆர்.கே.மெய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் வி.முனுசாமி, ஜி புவனேந்திரன், பூக்கடை கோபால், கோவிந்தராஜ், டி.பி. துரை, தணிகாசலம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பூமிகாவுக்கு வேலூர் அடுக்கம்றை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    • பழனி மற்றும் அவரது மனைவி குழந்தைகள் உட்பட 6 பேர் உடல்கள் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே உள்ள கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் பழனி (வயது 40) விவசாயி. இவரது மனைவி வள்ளி (37), மகள்கள் திரிஷா 15), மோனிஷா (14), பூமிகா (9), சிவசக்தி (7) மகன் தனுசு (4) பழனி ஒரவந்தவாடி மதுரா மோட்டூர் கிராமத்தில் கொரட்டாம்பட்டு கிராமத்தில் குத்தகைக்கு விவசாயம் செய்து வந்தார். அந்த நிலத்தின் ஒரு பகுதியில் குடிசை வீடு ஒன்று உள்ளது. அதில் சுமார் 4 ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    நேற்று அதிகாலை பழனி அவரது மனைவி வள்ளி, மகள்கள் திரிஷா, மோனிஷா, சிவசக்தி, மகன் தனுசு ஆகியோரை வெட்டி கொலை செய்தார்.

    அவருடைய மகள் பூமிகா என்பவர் மட்டும் வெட்டு காயங்களுடன் உயிர் தப்பினார். பின்னர் பழனி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

    பூமிகாவுக்கு வேலூர் அடுக்கம்றை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    பழனி மற்றும் அவரது மனைவி குழந்தைகள் உட்பட 6 பேர் உடல்கள் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    கீழ்குப்பம் கிராமத்தில் பழனி மற்றும் அவரது மனைவி குழந்தைகளை இன்று அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

    பழனியின் மனைவி வள்ளி வீட்டில் பரிகார பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக அவரது உறவினர்களிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். பரிகார பூஜையின் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கிலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக பழனியின் மகள் பூமிகாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உதவி கலெக்டர் தலைமையில் நடந்தது
    • 45 மனுக்கள் பெறப்பட்டன

    ஆரணி:

    ஆரணி உதவி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று வருகிறார்.

    அடையபலம் ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார் கொடுத்த மனுவில், எனது கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவ லக கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. அந்த கட்டிடத்தில் பழைய ஆவணங்கள் வைக்க முடியாத சூழ்நிலை இருந்து வரு கிறது, புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கவேண்டும். கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு இடத் தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து இருப்பதால் அகற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    வருவாய்த்துறைக்கு சம்பந்தமான பட்டா மாறுதல், குடும்ப அட்டையில் பெயர் நீக்குதல், முதியோர் உதவித்தொகை, ஆற்று பாசன கால்வாய் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட 45 மனுக்கள் பெறப்பட்டன.

    இதில் அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

    ×