என் மலர்
திருவண்ணாமலை
- இலவச அரிசி தரமானதாக உள்ளதா என ஆய்வு
- அறிவிப்பு பலகையில் மாவட்ட அதிகாரிகள் எண் எழுதப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார்
ஆரணி:
ஆரணி நகரில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆரணி யில் உள்ள சிலரேஷன் கடைகளில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்ப டுகிற இலவச அரிசி தரமானதாக உள்ளதா எனவும், இருப்பில் காட்டப்பட்டுள்ள பொருட்கள் சரியாக உள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.
மேலும் கடையின் முன்பு அறிவிப்பு பலகை யில் மாவட்ட கலெக்டர், மாவட்ட பொது விநியோக அலுவலர், வட்ட வழங்கல் அலுவலர், தாசில்தார் ஆகிய செல்போன் எண்கள் எழுதப்பட்டுள்ளதா எனவும் விற்பனையாளரிடம் கேட்டறிந்தார். எழுதப்படவில்லை என்றால் உடனடியாக எழுத வேண்டும் என அறிவுரைகளை கூறினார்.
ஆய்வின்போது தாசில்தார் ஆர்.ஜெகதீசன், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- சாலையை கடந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
வேலூர் பாலமதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி மணிகண்டன் (வயது 36) நேற்று காலையில் கேளூர் சந்தைமேட்டில் ரோட்டைக் கடக்க முயன்றார். அப்போது திருவண்ணா மலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மணிகண்டன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அடிபட்டு இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விலைவாசி உயர்வை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
போளூர்:
போளூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு உயர்வை கண்டித்து திருவண்ணாமலை மாவட்ட தெற்கு மாவட்ட செயலாளரும் போளூர் எம், எல், ஏ, வமான அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணை செயலாளர் ஏ செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ராஜன், நகர செயலாளர் பாண்டுரங்கன், வர்த்தக அணி செயலாளர் கார்த்திகேயன், அவைத்தலைவர் ஏழுமலை, கிளை செயலாளராக அல்லி நகர் சங்கர், கிளை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.
- மார்கழி மாத பிறப்பு முன்னிட்டு நடந்தது
- பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் உள்ள இரட்டை சிவாலயம் கோவிலில் நேற்று மாலை பைரவருக்கு மார்கழி மாத பிறப்பு மற்றும் அஷ்டமிபூஜை வழிபாடு நடைபெற்றது.
இதில் ஏாளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கண்ணமங்கலம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வைத்து தரிசனம் செய்தனர்.
- உற்சவமூர்த்திக்கு வெள்ளிக்கவசம் அணிவிப்பு
- திருவண்ணாமலை கோவிலில் சிறப்பு பூஜை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு கோ பூஜை மற்றும் அருணாசலேஸ்வரர் உண்ணாமலை அம்மனுக்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மகா தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து பெரியநாயக்கர் சாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இன்று முதல் மார்கழி மாதம் முழுவதும் அம்மன் சன்னதி முன்பு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடல் சொற்பொழிவு நடைபெறும். விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கிரிவலம் சென்றனர்.
- சுற்று சுவர் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
- கோழி கழிவுகளையும் கொட்டி செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது
செய்யாறு:
செய்யாறில் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் சுமார் 8,000 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் இக்கல்லூரி சுமார் 67 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து ள்ளது. விளையாட்டு மைதானம் மிகப்பெரிய அளவில் உள்ளது.
இங்கு ஏராள மானோர் காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சி செய்து வருகின்றனர். மாணவ, மாணவிகள் ஓட்டப்ப ந்தையம், கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டு பயிற்சிகளை செய்து வருகின்றனர்.
விளையாட்டு மைதானத்திற்குள் சில சமூக விரோதிகள் கோழிக்கறி கழிவுகளையும் கொண்டு வந்து இங்கு கொட்டி விட்டு செல்கின்றனர்.
இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் விளையாட்டு மைதானத்தில் பன்றிகள் சுற்றி திரிகிறது அந்தப் பன்றிகளால் விளையாட்டு திடலில் பயிற்சி பெறுபவர்களுக்கு பெரும் தடையாக உள்ளது கல்லூரி நிர்வாகம் இது போன்று பன்றிகள் ஆடுகள் மாடுகள் சுற்றுவதை தடுப்பதற்கு கல்லூரி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
மேலும் கல்லூரி சுற்றுச்சுவர் முழுமை முடிவு அடையாமல் உள்ளதால் பன்றிகள், ஆடு, மாடுகள் உள்ளே நுழைகின்றன. எனவே கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சுற்றுச்சுவரை கட்டி முடிக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- மோட்டார் சைக்கிள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் மேற்பார்வையில், செங்கம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மலர் தலை மையில், இன்ஸ்பெக்டர் தண்டராம்பட்டு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
ராயன்டபுரம் கிராமத்தில் வாலிபர் ஒருவர் அவரது வீட்டின் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து சுமார் 100 கிராம் கஞ்சா, பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- கலெக்டர் ஆய்வு
- ரேசன் கடையை மாற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கினார்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சம் மதிப்பில் புதியதாக அங்கன்வாடி மையக்கட்டிடம் கட்டப்பட்டு வருவதை கலெக்டர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார்.
மேலும் புதியதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற கட்டிடம் உள்ள இடத்தில் மழை காரணமாக சேறும் சகதியுமாக உள்ளதை பார்வையிட்டார். ஊராட்சி தலைவர் வள்ளியம்மாளிடம், ஏன்? மழையால் பாதிக்கும் இடத்தில் கட்டிடம் கட்டி வருகிறீர்கள்? என கண்டனம் தெரிவித்தார்.
உடனடியாக போதிய வடிகால் வசதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர் நூலக கட்டிடத்தில் செயல்படும் ரேசன் கடையை உடனடியாக மாற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கினார். மந்தைவெளி பகுதியில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியை சரியான முறையில் பராமரிக்கவேண்டும் என்றார்.
முன்னதாக காளசமுத்திரம்-பள்ளக்கொல்லை சாலையில் கட்டப்பட்டு வரும் போக்குவரத்து பாலம் கட்டும் பணி, அனந்தபுரம் ஊராட்சியில் பல்வேறு திட்டங்களையும் பார்வையிட்டார்.
- கண்ணமங்கலத்தில் போக்குவரத்து நெரிசல்
- போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்
கண்ணமங்கலம்:
வேலூர்- திருவண்ணாமலை சாலையில் சபரிமலை செல்லும் ஆந்திரா மாநில அய்யப்ப பக்தர்களின் பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்கள் இவ்வழியே செல்வதால் கண்ண மங்கலம் புதிய சாலை பகுதி போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.
இந்த சாலையில் வியாபாரிகள் தங்கள் கடைகளில் உள்ள பொருட்களை நடைபா தையிலும் விளம்பர போர்டுகள் நடுரோட்டில் வைத்து விடுகின்றனர். வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையிலே நிறுத்தி விடுகின்றனர்.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இவை அனைத்தையும் கட்டுப்படுத்த போலீசாரோ, பேரூராட்சி நிர்வாகமோ, நெடுஞ்சாலைத்துறையோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. எனவே இதைக்கட்டுப்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர், வருவாய்த்துறை மற்றும் போலீசார் கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் போக்கு வரத்துக்கு இடைஞ்சலாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் தெரிவித்தனர்.
பள்ளி நேரங்களில் கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் உள்ள பஸ் நிறுத்தங்களில் போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த 6-ந்தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
- நாளை மகாதீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை மலை உச்சியில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் நிறைவாக கடந்த 6-ந்தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் மலை உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும். அதன்படி, தினமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு வருகின்றது. மலை உச்சியில் காட்சி தரும் மகாதீபம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகின்றது. தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) காலை மகாதீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது.
கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும். தொடர்ந்து வருகிற 6-ந்தேதி கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின் போது மகா தீப மை (தீப சுடர் பிரசாதம்) சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு அணிவிக்கப்படும். அதன்பிறகு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தீப 'மை' பிரசாதம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
- திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா 17 நாட்கள் நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது.
- முதல் நாளான நேற்று 26 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவுக்கு பிறகு, நேற்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.2.29 கோடி வசூலாகியுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா 17 நாட்கள் நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது.
விழாவில் சுமார் 40 லட்சம் பக்தர்கள் வரை பங்கேற்று அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்து கிரிவலம் சென்றனர். கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.
அருணாசலேஸ்வரர் கோவில் ஆதி அண்ணாமலையார், திருநேர் அண்ணாமலையார் கோவில், துர்க்கை அம்மன் கோவில், அஷ்ட லிங்க கோவில்களில் நிரந்தம் மற்றும் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த 86 உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் உட்பட 450 பேர் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
முதல் நாளான நேற்று 26 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.2,29,20,669 ரொக்கம், 228 கிராம் தங்கம், 1,478 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக வசூலாகியுள்ளது.
மீதமுள்ள 60 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி இன்று தொடர்ந்து நடந்து வருகிறது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
கோவில் உண்டியல் காணிக்கை தொகை அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே திருவண்ணாமலை வேலூர் சாலையில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
- சுங்கசாவடி ஊழியர்களை கும்பல் விரட்டி விரட்டி தாக்கியுள்ளனர்.
ஆரணி:
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே திருவண்ணாமலை வேலூர் சாலையில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.இதில் 24 மணி நேரமும் வாகனங்களுக்கு சுங்க வரி வசூல் செய்து வருகின்றனர்.
கடந்த 12-ம் தேதி இரவு கும்பல் ஒன்று வந்துள்ளனர். அவர்களுக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சுங்கசாவடி ஊழியர்களை கும்பல் விரட்டி விரட்டி தாக்கியுள்ளனர்.இதில் நிலைகுலைந்த ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர். பின்னர் சாவகாசமாக கும்பல் அங்கிருந்து சென்றனர்.
சுங்க சாவடியில் ஊழியர்களை கும்பல் தாக்கிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சுங்க சாவடி ஊழியர்களுக்கும் தாக்குதல் நடத்திய கும்பலுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. அதன் காரணமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கும்பலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஊழியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






