என் மலர்
நீங்கள் தேடியது "விளம்பர போர்டுகள் நடுரோட்டில் வைத்து விடுகின்றனர்."
- கண்ணமங்கலத்தில் போக்குவரத்து நெரிசல்
- போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்
கண்ணமங்கலம்:
வேலூர்- திருவண்ணாமலை சாலையில் சபரிமலை செல்லும் ஆந்திரா மாநில அய்யப்ப பக்தர்களின் பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்கள் இவ்வழியே செல்வதால் கண்ண மங்கலம் புதிய சாலை பகுதி போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.
இந்த சாலையில் வியாபாரிகள் தங்கள் கடைகளில் உள்ள பொருட்களை நடைபா தையிலும் விளம்பர போர்டுகள் நடுரோட்டில் வைத்து விடுகின்றனர். வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையிலே நிறுத்தி விடுகின்றனர்.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இவை அனைத்தையும் கட்டுப்படுத்த போலீசாரோ, பேரூராட்சி நிர்வாகமோ, நெடுஞ்சாலைத்துறையோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. எனவே இதைக்கட்டுப்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர், வருவாய்த்துறை மற்றும் போலீசார் கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் போக்கு வரத்துக்கு இடைஞ்சலாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் தெரிவித்தனர்.
பள்ளி நேரங்களில் கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் உள்ள பஸ் நிறுத்தங்களில் போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






