search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு
    X

    ரேஷன் கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு

    • இலவச அரிசி தரமானதாக உள்ளதா என ஆய்வு
    • அறிவிப்பு பலகையில் மாவட்ட அதிகாரிகள் எண் எழுதப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார்

    ஆரணி:

    ஆரணி நகரில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆரணி யில் உள்ள சிலரேஷன் கடைகளில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்ப டுகிற இலவச அரிசி தரமானதாக உள்ளதா எனவும், இருப்பில் காட்டப்பட்டுள்ள பொருட்கள் சரியாக உள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.

    மேலும் கடையின் முன்பு அறிவிப்பு பலகை யில் மாவட்ட கலெக்டர், மாவட்ட பொது விநியோக அலுவலர், வட்ட வழங்கல் அலுவலர், தாசில்தார் ஆகிய செல்போன் எண்கள் எழுதப்பட்டுள்ளதா எனவும் விற்பனையாளரிடம் கேட்டறிந்தார். எழுதப்படவில்லை என்றால் உடனடியாக எழுத வேண்டும் என அறிவுரைகளை கூறினார்.

    ஆய்வின்போது தாசில்தார் ஆர்.ஜெகதீசன், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×