என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College management does not take any action."

    • சுற்று சுவர் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
    • கோழி கழிவுகளையும் கொட்டி செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது

    செய்யாறு:

    செய்யாறில் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் சுமார் 8,000 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் இக்கல்லூரி சுமார் 67 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து ள்ளது. விளையாட்டு மைதானம் மிகப்பெரிய அளவில் உள்ளது.

    இங்கு ஏராள மானோர் காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சி செய்து வருகின்றனர். மாணவ, மாணவிகள் ஓட்டப்ப ந்தையம், கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டு பயிற்சிகளை செய்து வருகின்றனர்.

    விளையாட்டு மைதானத்திற்குள் சில சமூக விரோதிகள் கோழிக்கறி கழிவுகளையும் கொண்டு வந்து இங்கு கொட்டி விட்டு செல்கின்றனர்.

    இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் விளையாட்டு மைதானத்தில் பன்றிகள் சுற்றி திரிகிறது அந்தப் பன்றிகளால் விளையாட்டு திடலில் பயிற்சி பெறுபவர்களுக்கு பெரும் தடையாக உள்ளது கல்லூரி நிர்வாகம் இது போன்று பன்றிகள் ஆடுகள் மாடுகள் சுற்றுவதை தடுப்பதற்கு கல்லூரி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

    மேலும் கல்லூரி சுற்றுச்சுவர் முழுமை முடிவு அடையாமல் உள்ளதால் பன்றிகள், ஆடு, மாடுகள் உள்ளே நுழைகின்றன. எனவே கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சுற்றுச்சுவரை கட்டி முடிக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ×