என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • அய்யப்ப பக்தர்கள் காயம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    வேலூர் ஓல்டு டவுனைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஒரு வேனில் திருவண்ணாமலை நோக்கி சென்றனர். வேனை டிரைவர் மற்றும் உரிமையாளர் செந்தில்குமார் என்பவர் ஓட்டினார்.

    எட்டிவாடி ரெயில்வே கேட் அருகே சென்ற போது வேனின் டயர் வெடித்தது. இதில் தாறுமாறாக ஓடிய வேன் ரோட்டில் கவிழ்ந்தது. முற்றிலும் கவிழ்ந்ததில் வேனில் பயணம் செய்த அறிவழகன் (43), சஞ்சய் (33) வாரி (18) ஆகிய 3 பேர் படுகாயமும், உள்பட 16 பேர் லேசான காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த விபத்து தொடர்பாக சந்தவாசல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 நாட்கள் நடக்கிறது
    • பயிற்சி முகாமை அதிகாரிகள் ஆய்வு

    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூர், வட்டாரவள மையத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் புதிய பாரத எழுத்தறிவு திட்ட‌ தன்னார்வலர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் நடந்தது.

    முகாமை வட்டார வள மேற்பார்வையாளர் ராஜா, தொடங்கி வைத்தார். அனைவரையும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட ஒருங்கிணைப்பாளர் செண்பகவல்லி, வரவேற்றார்.

    முன்னதாக பயிற்சி முகாமை வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், ஆறுமுகம், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஆசிரியர் பயிற்றுனர்கள். விஜயலட்சுமி, சுகந்தி, மொளூ கு, இசையருவி, ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் வருகிற 21-ந்தேதி பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள 57 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு குறித்து பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

    • கல்குவாரி அமைத்தால் இங்கு உள்ள ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்.
    • கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த வயலூரில் உள்ள மலையில் கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த வயலூர் பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம்-ஆற்காடு சாலையில் வயலூர் கூட்ரோட்டில் இன்று காலை 8 மணி அளவில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தப் பகுதியில் கல்குவாரி அமைத்தால் இங்கு உள்ள ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். பாறைகள் வெடிவைத்து தகர்க்கும் போது அருகில் உள்ள வீடுகள் சேதம் அடையும். வெடித்து சிதறும் பாறைகளால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    கல்குவாரி அமைத்தால் கனரக வாகனங்கள் வேகமாக சென்று வரும் அதனால் புழுதி ஏற்பட்டு எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும் எனக்கூறி மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு டிஎஸ்பி வெங்கடேசன், தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சோனியா மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சமாதானத்தை ஏற்காத அப்பகுதி மக்கள் கல்குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டதாக வருவாய்த் துறையினர் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் எனக் கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    காலை 8 மணியில் இருந்து தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் இரு பக்கமும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் நடுவழியில் தவித்தனர்.

    கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 15 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது
    • புதிய ரேசன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த கீழ் சாத்தமங்கலம் கிராமத்தில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா தலைமையில் நடைபெற்றது.

    மருத்துவ குழு சார்பில் பொது மக்கள் பார்வையிட அமைக்கப்பட்டுள்ள திணை, கம்பு, ராகி, கோதுமை, பார்லி, உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பயன்கள் காட்சிப்படுத்தப்பட்டதை அம்பேத்குமார் எம். எல். ஏ. பார்வையிட்டு முகாமில் சிறப்புரையாற்றினார்.

    இதில் தாசில்தார் முருகானந்தம்

    நகர மன்ற தலைவர் ஜலால், நகர மன்ற துணைத் தலைவர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் ராதா பிரபு கீழ் சாத்தமங்கலம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சுதாகர், அமானுல்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் 15 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.

    இந்த மருத்துவ முகாமில் கீழ்சாத்தமங்கலம் , இந்திராநகர், சத்யாநகர், அண்ணாநகர், ஆகிய பகுதிகளை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    மேலும் கீழ் சாத்தமங்கலம் பகுதியில் ரேஸ் புதிய ரேசன் கடை அமைப்பதற்கான பூமி பூஜை பணியையும் அம்பேத்குமார் எம். எல். ஏ. தொடங்கி வைத்தார்.

    • மின்வாரிய அதிகாரி எச்சரிக்கை
    • 2 மாதங்களில் 55 மின் விபத்து ஏற்பட்டுள்ளது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டத்தில் கடந்த 2 மாதங்களில் வீட்டில் துணி களை உலர வைப்பது, செல்போன் சார்ஜர் செய்யும்போது, மின் வேலி அமைத்தது போன்ற 55 சமயங்களில் மின் விபத்து ஏற்பட்டுள்ளது.

    பழுது ஏற்பட்டால் உடனடியாக மின்சாரத்தை துண்டிக்க, வீடு மற்றும் கட்டுமானம் நடைபெறும் கட்டிடத்தில் நில கசிவு மின் திறப்பானை பொருத்த வேண்டும்.

    வீட்டில் துணிகளை உலர வைக்க கட்டப்படும் கயிற்றின் மீது மின் வயரை கொண்டு செல்ல வேண்டாம். ஐஎஸ்ஐ சான்று பெற்றுள்ள மின் சாதன பொருட்களை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். மின் பாதைக்கு அருகே பணிகளை மேற்கொள்ள கூடாது.

    இதனால் ஏற்படும் விபத்துக்கு கட்டிட உரிமையாளரே முழு பொறுப்பு. வயல்வெளிகளில் மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும்.

    மின் கம்பிகள் மற்றும் ஸ்டே (இழுவை) கம்பிகளில் ஆடு, மாடுகளை கட்ட வேண்டாம். மின் மாற்றி அல்லது மின் கம்பிகளில் பழுது ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்துக்கு தெரியப்படுத்தி சரி செய்ய வேண்டும். மின் பழுது. மின் மீட்டர் அளவு குறைபாடுகள் மற்றும் விபத்து குறித்து மின்னகம் சேவை எண் 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.

    மேலும், 94458 -55768 என்ற மண்டல வாட்ஸ்-அப் எண்ணுக்கு 1 தகவல் தெரிவித்து குறைகளுக்கு விதிகளை பின்பற்றி, மின் விபத்து நடைபெறாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என திருவண்ணாமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் எஸ்.பழனிராஜு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் எச்சரித்துள்ளார்.

    • மழைவெள்ளம் ஆற்றுபடுகையில் செல்லும் வகையில் ஷட்டர்கள் திறப்பு
    • பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூர் அருகே செய்யாறு அணைக்கட்டு ஆற்று கால்வாய் பாச னம் பெறும் 147 ஏரிகள் நிரம்பியதால் உபரி நீர் ஆற்றுப்படுகையில் வெளி யேற்றப்பட்டு வருவதாக பொதுப்பணிதுறையினர் தெரிவித்தனர்.

    பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் பகுதி வழியே செல்லும் செய்யாற்றுப்படுகை யில் நூற்றாண்டு கண்ட அணைக்கட்டு அமைக் கப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டில் பக்க கால்வாய் அமைக்கப் பட்டு மழைக்காலங்க ளில் ஆற்றுப்படுகையில் வரும் வெள்ள நீர் இந்த கால்வாய் வழியே திரும்பி அனுப்பப்பட்டு சுமார் 147 ஏரிகள் நிரம்பும் வகை யில் அமைக்கப்பட்டுள் ளது.

    இந்நிலையில், கடந்த வாரம் மாண்டஸ் புயல் தாக்கத்தால் திருவண்ணா மலை மாவட்டத்தில் கன மழை கொட்டியது. இத னால் ஆற்றுப்படுகையில் வெள்ளம் கரைபுரண்டு சென்றது. இதனை தொடர்ந்து அணைக்கட்டு பகுதியில் : ஆற்று கால்வாய் வழியே தண்ணீர் திருப்பி விடப் பட்டது. இதன் மூலம் ஆற்று கால்வாய் பாச னம் பெறும் சுமார் 147ஏரிகளும் நிரம்பி வழிந்தது.

    இதுகுறித்து பொதுப்பணிதுறையினர் கூறுகை யில், 'ஆற்றுக்கால்வாய் வழியே பயன் பெறும் ஏரி கள் அனைத்தும் நிரம்பி வழிந்து வருகிறது.இதனால் கடந்த 2 நாட்களுக்கு மேலாக அணைக்கட்டில் உள்ள பக்க கால்வாய் ஷட்டர் கள் அனைத்தும் மூடப் பட்டு மழைவெள்ள நீர் ஆற்றுப் படுகையில் செல் லும் வகையில் ஷெட் டர்கள் திறக்கப்பட்டுள் ளது.

    மேலும் ஆற்றுக்கால் வாய் வழியே செல்லும் பாசன நீர் அனைத்து ஏரி களும் நிரம்பி இறுதியில் மதுராந்தகம் ஏரி நிரம்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    செய்யாறு:

    பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில், ஆரணி கூட்ரோட்டில் நகர தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒ.ஜோதி எம்எல்ஏ தலைமை வகித்தார்.

    மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், முன்னாள் நகர மன்ற தலைவர் சம்பத், நகர மன்ற தலைவர் மோகனவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர செயலாளர் வழக்கறிஞர் கே.விஸ்வநாதன் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர்கள் கலைமணி பாரதி, செந்தூர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் ஒ.ஜோதி எம்எல்ஏ ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களை 300 நபர்களுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சி இறுதியில் மாவட்ட சிறுபான்மை துணை செயலாளர் வழக்கறிஞர் சான் பாஷா நன்றி கூறினார்.

    முன்னாள் எம்எல்ஏ வ.அன்பழகன், வழக்கறிஞர்ஆர்.வி பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் ஞானவேல், ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி பார்த்திபன், நகர கவுன்சிலர் ஞானமணி சின்னதுரை, ரமேஷ், ராம் ரவி உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

    • 2 கிலோ பறிமுதல்
    • வாகன தணிக்கையின் போது சிக்கினர்

    போளூர்:

    போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார், கருணாநிதி, மற்றும் போலீசார் நேற்று பிற்பகல் வசூர் கூட்ரோடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது பதிவு எண் இல்லாத கார் அதிவேகமாக சென்றது. அந்தக் காரை போலீசார் பின் தொடர்ந்து மடக்கிப்பிடித்தனர்.

    காரில் சோதனை செய்ததில் சுமார் 2 கிலோ எடையுள்ள கஞ்சா பாக்கெட்டுகள் (மதிப்பு ரூபாய் 20000) பறிமுதல் செய்தனர்.

    காரில் பயணம் செய்த போளூர் அல்லி நகரைச் சேர்ந்த பாலகுமாரன் (32) போளூர் மாட்டுப்பட்டி தெருவை சேர்ந்த சுரேஷ் (38) போளூர் வேங்கடத்தான் தெருவில் வசிக்கும் குமரேசன் (32) திருப்பத்தூர் அருகே பொம்மி குப்பம் சேர்ந்த மூர்த்தி (47) ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தப்பி ஓடிய பொம்மி குப்பம் சேர்ந்த மாது மகன் வேலு என்பவரை தேடி வருகின்றனர்.

    • 200 கிலோமீட்டர் தூரம் சென்றனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டில், குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. செங்கல்பட்டு பாலாறு லயன் சங்கம் சார்பில் சென்னையில் இருந்து திருவண்ணாமலை வரை 200 கிலோமீட்டர் தூரம் சென்னையில் இருந்து வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர், வழியாக திருவண்ணாமலை, வரை குழந்தைகள் புற்றுநோய் குறித்து சைக்கிள் பேரணி வந்தது.

    சேத்துப்பட்டு 4 முனை சந்திப்பில் சேத்துப்பட்டு எவர்கிரீன் லயன் சங்கம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் சேத்துப்பட்டு அரிமா சங்கத் தலைவர் ஜவகர், செயலாளர் நாசர்தீன், பொருளாளர் விஜயராகவன், உறுப்பினர்கள் வினோத், கிரிராஜன், கார்த்திகேயன், தங்கராஜ், வெங்கடேசன், பாபு, ஆரணி எவர்கிரீன் டயட் சங்க செங்கல்பட்டு பாலாறு அரிமா சங்க தலைவர் பாண்டியன், செயலாளர் வீரராகவன், பொருளாளர் தாமரைச்செல்வன், பொறுப்பாளர்கள், அம்சவல்லி, கௌதம், பெருமாள், உள்பட கலந்து கொண்டனர்.

    முன்னதாக குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். பின்னர் சைக்கிள் பேரணி தேவிகாபுரம் வழியாக போளூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்றது.

    • மகா தீபம் மலை உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளித்தது.
    • இன்று அதிகாலை மகா தீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. கடந்த 6-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    இந்த மகா தீபம் மலை உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளித்தது.

    அதன்படி தினமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. 11-ம் நாளான நேற்று மாலை 6 மணியளவில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    இந்த ஆண்டிற்கான மகா தீபம் ஏற்றப்படும் நிறைவு நாளையொட்டி மகா தீபத்தை தரிசனம் செய்ய நேற்று மாலை கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்து தரிசனம் செய்தனர்.

    மகாதீபம் மலை உச்சியில் ஏற்றப்பட்டதும் கோவிலில் இருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி கோஷம் எழுப்பினர்.

    தொடர்ந்து இன்று அதிகாலை மகா தீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

    கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அஜித் மட்டும் தண்ணீரில் மிதந்தபடி கூச்சல் போட்டான்.அந்தப்பகுதியை சேர்ந்த ஒருவர் அஜித்தை மீட்டார்.
    • மாணவர்கள் வீட்டுக்கு வராததால் பெற்றோர்கள் தேடத்தொடங்கினர். அப்போதுதான் அந்த 3 மாணவர்களும் தண்ணீரில் மூழ்கியது தெரியவந்துள்ளது.

    கலசப்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் லாடவரம் ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன் பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.

    இவரது மகன்கள் அருள் (வயது 10), அஜித் (9), சந்திப் (7). அருள் 5-ம் வகுப்பும், அஜித் 4-ம் வகுப்பும், சந்திப் 2-ம் வகுப்பும் லாடவரம் அரசு பள்ளியில் படித்து வந்தனர்.

    அதே கிராமத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணனின் ஒரே மகன் ஜீவன் குமார் (8). 3-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை 4 மாணவர்களும் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தனர். பின்னர் 4 பேரும் ஒன்றாக சேர்ந்து அதேப் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றனர்.

    அப்போது 4 பேரில் ஒரு மாணவன் பள்ளத்தில் தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. அவனை காப்பாற்ற முயன்றபோது ஒருவர்பின் 'ஒருவராக 4 பேரும் தண்ணீரில் விழுந்து மூழ்கியுள்ளனர். அவர்களில் அஜித் மட்டும் தண்ணீரில் மிதந்தபடி கூச்சல் போட்டான்.அந்தப்பகுதியை சேர்ந்த ஒருவர் அஜித்தை மீட்டார்.

    மீட்கப்பட்ட அஜித் பயந்து உடனடியாக வீட்டிற்கு சென்று விட்டான். மற்றவர்கள் தண்ணீரில் மூழ்கியது தெரியாததால் அஜித்தை மீட்டவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்.

    இரவு 7 மணிக்கு மேல் ஆகியும் மற்ற மாணவர்கள் வீட்டுக்கு வராததால் பெற்றோர்கள் தேடத்தொடங்கினர். அப்போதுதான் அந்த 3 மாணவர்களும் தண்ணீரில் மூழ்கியது தெரியவந்துள்ளது.

    இது குறித்து போளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய அருள், அவனது தம்பி சந்திப் மற்றும் ஜீவன் குமார் ஆகிய 3 பேரையும் பிணமாக மீட்டனர்.

    இதை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கலசப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த 3 மாணவர்களின் உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • வேலூர் கோர்ட்டுக்கு வந்த நிலையில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    போளூர்:

    போளூர்கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் தினகரன். துணை கலெக்டரான இவர் தற்போது பணியிடை நீக்கத் தில் உள்ளார். தற்போது சென் னையில் வசித்து வரும் இவர் இந்த வழக்கு விஷயமாக வேலூர் கோர்ட்டுக்கு ஆஜ ராக சென்னையில் இருந்து தனது சொந்த காருக்கு ஆக் டிங் டிரைவராக சென்னை பாடியில் உள்ள பால்பாண்டி (வயது 55) என்பவரை நிய மித்து சென்னையில் இருந்து புறப்பட்டு வந்து போளூரில் உள்ள தனது வீட்டில் தங்கி னார். வீட்டு மாடியில் பால் பாண்டி தங்கினார்.

    இந்த நிலையில் இரவு பால் பாண்டி போளூர் பஸ் நிலை யம் வந்து ஓட்டலில் டிபன் சாப்பிட்டுவிட்டு, நடந்து வந்த போது குடிபோதையில் சாலையில் விழுந்ததில், தலை யில் காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கு சிப்பந்தி பழனி என்பவர் அவரை போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த் தார். சிகிச்சை பெற்ற பின் பால்பாண்டி தினகரன் வீட்டு மாடியில் படுத்து தூங்கினார்.

    நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் கதவைத் தட்டி யும் திறக்கப்படாததால் தினக ரன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பால் பாண்டி இறந்து கிடந்தார்.

    இதையடுத்து தினகரன் சென் னையில் உள்ள பால்பாண்டி யின் மகன் கணபதி பாண்டிய னுக்கு தகவல் கூறினார். இதுகு றித்து கணபதி பாண்டியன் போளூர் போலீசில் புகார் செய் தார். அதன்பேரில் இன்ஸ்பெக் டர் ஜெயபிரகாஷ், சப்-இன்ஸ் பெக்டர் சிவக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×