என் மலர்
உள்ளூர் செய்திகள்

படவேடு ஊராட்சி மற்றும் காளசமுத்திரம் ஊராட்சியில் கலெக்டர் பா.முருகேஷ் ஆய்வு செய்த காட்சி.
ரூ.11 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம்
- கலெக்டர் ஆய்வு
- ரேசன் கடையை மாற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கினார்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சம் மதிப்பில் புதியதாக அங்கன்வாடி மையக்கட்டிடம் கட்டப்பட்டு வருவதை கலெக்டர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார்.
மேலும் புதியதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற கட்டிடம் உள்ள இடத்தில் மழை காரணமாக சேறும் சகதியுமாக உள்ளதை பார்வையிட்டார். ஊராட்சி தலைவர் வள்ளியம்மாளிடம், ஏன்? மழையால் பாதிக்கும் இடத்தில் கட்டிடம் கட்டி வருகிறீர்கள்? என கண்டனம் தெரிவித்தார்.
உடனடியாக போதிய வடிகால் வசதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர் நூலக கட்டிடத்தில் செயல்படும் ரேசன் கடையை உடனடியாக மாற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கினார். மந்தைவெளி பகுதியில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியை சரியான முறையில் பராமரிக்கவேண்டும் என்றார்.
முன்னதாக காளசமுத்திரம்-பள்ளக்கொல்லை சாலையில் கட்டப்பட்டு வரும் போக்குவரத்து பாலம் கட்டும் பணி, அனந்தபுரம் ஊராட்சியில் பல்வேறு திட்டங்களையும் பார்வையிட்டார்.






