என் மலர்
உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.
வந்தவாசி, செய்யாறில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
- சொத்துவரி, மின்கட்டணம் உயர்வை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சொத்துவரி, மின்கட்டணம், பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவைகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். நகரச் செயலாளர் பாட்ஷா தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணி கலந்துக் கொண்டு பேசினார்.
மாவட்ட அவைத் தலைவர் டிகேபி. மணி, ஜெ.பாலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பவானி அன்பழகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் லோகேஷ்வரன், தெள்ளார் ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் அர்ஜுனன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் செய்யாறில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.
நகர செயலாளர் கு.வெங்கடேசன் தலைமை வகித்தார். ரவிச்சந்திரன், அருணகிரி, ஆர்.கே.மெய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் வி.முனுசாமி, ஜி புவனேந்திரன், பூக்கடை கோபால், கோவிந்தராஜ், டி.பி. துரை, தணிகாசலம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






